கத்தோலிக்க விசுவாசிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!!

கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளுக்கு, உங்களின் தொடர்ந்த பங்களிப்பினாலும் ஆதரவினாலும் இன்னும் சில நாட்களில் இரண்டாவது ஆண்டினை நிறைவுசெய்ய இருக்கின்றோம். 70-க்கும் மேற்பட்ட புத்தகங்களை பதிவேற்றியுள்ளோம். பல புத்தகங்கள் பதிவேற்றத்தில் உள்ளன. இணையதளத்தை தாங்குகின்ற அன்புள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். 

1,000க்கும் மேற்பட்ட பாரம்பரிய செபங்கள், 12,000க்கும் மேற்பட்ட பக்கங்கள், 3,000க்கும் மேற்பட்ட தலைப்புகள், 500க்கும் மேற்பட்ட ஆலயங்களின் விவரங்கள், 1000க்கும் மேற்பட்ட புனிதர்களின் வரலாறுகள், 10,000க்கும் மேற்பட்ட கத்தோலிக்க பாடல்கள் ஒலிபரப்பாகின்றன.

கத்தோலிக்க திருச்சபை பற்றிய முழுமையான தகவல்கள், பாரம்பரிய செபங்கள், திவ்யபலி பூசை, திவ்விய நற்கருணை விளக்கம் மற்றும் புதுமைகள், வணக்க மாதங்கள், நவநாள் செபங்கள், புனிதர்கள் வரலாறு, அன்றாட செபங்கள், பாடல்கள், அனைத்து புனிதர்களின் செபங்களின் தொகுப்பு, அனுதின செபங்கள், பாரம்பரிய நூல்கள், திருச்சபை வரலாறு, மாதா காட்சிகள் விவரம், மாதா பக்தியின் விவரங்கள், தியான ஆராதனைகள், நவ விலாச சம்மனசுக்கள் செபங்கள்,

மோட்சம், நரகம், உத்தரிக்கிற ஸ்தலம் முழு விளக்கங்கள், ஆராதனை பிரகரணங்கள், திருமணி ஆராதனைகள், நிந்தை பரிகாரம், தவக்கால பக்தி முயற்சிகள், திருப்பாடுகளின் தியானங்கள், சிலுவைப் பாதைகள், மன்ரேசா தியானம், வேத விளக்கங்கள்

திருமணம் மற்றும் பிள்ளை வளர்ப்பு குறித்த திருச்சபை போதனைகள், பாத்திமா மற்றும் சலேத் காட்சிகளின் இரகசியங்கள், பாவசங்கீர்த்தன விளக்கம், பரிசுத்த கற்பின் வழிகள், அர்ப்பண செபங்கள், திருவருட்சாதனங்களின் முழு விளக்கங்கள்,

திருச்சபையின் அதிகாரபூர்வ விவிலியமான தமிழ் லத்தீன் உல்காத்தா விவிலியம், சுவிசேஷ விளக்கங்கள், விவிலிய வியாக்கியானங்கள், மறையுரை சிந்தனைகள், சிறுவர்களுக்கான வேதாகம கதைகள், வேதாகம தியானங்கள், ஒரு வருடத்தில் முழு வேதாகமத்தை படித்து தியானிக்க தனி பகுதி பதிவேற்றத்தில் உள்ளது.

திருச்செபமாலை, செபமாலை வரலாறு, செபமாலை முறைகள், தியான செபமாலைகள், செபமாலையின் அதிசயங்கள், தேவரகசிய விளக்கங்கள், புதுமைகள், செபமாலை வணக்கமாதம் போன்ற முழுமையான விளக்கங்கள்...

திருத்தலங்கள் விவரம், திருத்தல வரலாறு, மண்ணின் மைந்தர்கள், பங்குகளின் முழு விவரங்கள், அன்பியங்கள், வழித்தடம், திருவிழா காலங்கள்...

வீரமாமுனிவர் துவங்கி, 19ம் நூற்றாண்டு வரை எழுதப்பட்ட கத்தோலிக்க இலக்கியங்கள், விருத்தங்கள், கலம்பகம், தேவமாதா அம்மானை, ஓலைச்சுவடியிலிருந்து பதிப்பிக்கப்பட்ட பாக்கள், (5,000க்கும் மேற்பட்ட காலத்தால் அழியாத கத்தோலிக்க இலக்கியப் பாடல்கள் பதிவேற்றத்தில் உள்ளன).

மேலும் தேவமாதா சர்வதேச வானொலியில் கத்தோலிக்க பாடல்கள், காலத்தால் அழியாத பழைய பாரம்பரிய பாடல்கள், திருப்பலி (நேரடி ஒலிபரப்பு விரைவில்), மூன்று வேளை தின செபமாலை, மூன்று மணிக்கு இறை இரக்க செபமாலை, செபங்கள் மற்றும் மறையுரை செய்திகள் உலகமெங்கும் 24 மணி நேரமும் சர்வதேச ஒலிபரப்பாக ஒலிபரப்பப்படுகின்றது.

பாரம்பரிய கத்தோலிக்க புத்தகங்களையும், புனிதர்கள் பலர் எழுதிய புத்தகங்களையும் இலத்தீன் மற்றும் ஆங்கில மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கும் முயற்சியை தொடங்கியுள்ளோம். எங்களின் இந்த முயற்சிக்கு உங்களின் உதவியை எதிர்நோக்கியுள்ளோம். பின்வரும் லிங்க்-ஐ பயன்படுத்தி பாதுகாப்பாக நன்கொடைகளை வழங்க அன்போடு வேண்டுகிறோம்.