781 புனித தோமையர் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம், தேமானூர்

        

புனித தோமையர் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம்

இடம்: தேமானூர்

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: மார்த்தாண்டம்

மறைவட்டம்: மார்த்தாண்டம்

நிலை: பங்குத்தளம்

பங்குத்தந்தை: அருள்தந்தை. சஜின் ஏசுதாஸ்

குடும்பங்கள்: 280

அருள் வாழ்வியங்கள்: 10

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 06:15 மணி

திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி காலை 06:30 மணிக்கு திருப்பலி

புதன்கிழமை மாலை 05:30 மணி ஜெபமாலை, திருப்பலி, சகாய மாதா நவநாள்

திருவிழா: ஜூலை மாதம் 03-ம் தேதி

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருள்தந்தை. ஸ்டீபன்

2. அருள்தந்தை. பெனட்

3. அருள்சகோதரி. கிறிஸ்டி, DM

4. அருள்சகோதரி. ஜூலி, SIC

5. அருள்சகோதரி. ஸ்டெல்லா ராணி, DM

6. Bro. ஆஸபின்

7. Bro. கிறிஸ்துதாஸ்

8. Bro. காட்லின் ஜூடு

வரலாறு:

திருவனந்தபுரம் மறைமாவட்ட பேராயர் மார் இவானியோஸ் அவர்களின் ஆசி மற்றும் அனுமதியுடன் அருள்தந்தை மோண். ஜோசப் குழிஞ்ஞாலில் அவர்கள் மார்த்தாண்டம் வடக்குத் தெருவில் ஒரு வாடகை வீட்டில் தங்கி, அங்கு ஒரு மலங்கரை கத்தோலிக்க ஆலயத்தையும் நிறுவினார். அங்கிருந்தவாறே கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளுக்கும் சென்று இறைப் பணி செய்து, பல ஆலயங்களையும் உருவாக்கினார். அதில் ஒன்று தான் தேமானூர் புனித தோமையர் ஆலயம்.

தேமானூர் பகுதியை மையமாகக் கொண்டு 05.05.1957 அன்று திரு. சின்னு அவர்களின் இல்லத்தில் இத்திருச்சபை தொடங்கப்பட்டது. அருள்தந்தை மோண். ஜோசப் குழிஞ்ஞாலில் மற்றும் அருட்சகோதரிகளின் கூட்டு விசுவாச பரப்பின்படி, முதன்முதலில் 05.05.1957 அன்று ஏராளமான இறைவிசுவாசிகளுக்கு திருமுழுக்கு வழங்கப்பட்டது. 

முதல் பங்குத்தந்தையாக பணியாற்றிய அருள்தந்தை ஜோசப் குழிஞ்ஞாலில், உபதேசியார் திரு. குழந்தை சாமி, அருட்சகோதரி அந்தோணியம்மா ஆகியோரின் முயற்சியாலும், பேராயர் மார் இவானியோஸ் அவர்களின் நல்லுள்ளத்தாலும் ஆலயம் கட்டப்பட்டு, 21.12.1958 அன்று பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் ஜெபங்களும், மறையுரைகளும் தமிழில் வழங்க வழிவகை செய்யப்பட்டது.  1957-1966 வரையிலான பத்தாண்டு காலகட்டத்தில் 625 பேருக்கு திருமுழுக்கு வழங்கப்பட்டது.

1967-1976 காலகட்டம்: 

கிணறு ஒன்று அமைக்கப்பட்டது. மிகவும் இடுக்கமான ஆலய நுழைவாயில் அகலப்படுத்தப்பட்டது. ஆலய மணி நிறுவப்பட்டது. பொதுக்கூட்டங்கள் நடத்த வசதியாக எளிய கலையரங்கம் ஒன்று கட்டப்பட்டது. மேலும் இந்த பத்தாண்டு காலகட்டத்தில் 222 பேருக்கு திருமுழுக்கு வழங்கப்பட்டது.

1977-1986 காலகட்டம்: 

இக்காலகட்டத்தில் இவ்வழியாக சாலையில் பயணம் செய்யும் மக்களுக்கு இறைப் பிரசன்னத்தை உணரச் செய்யும் விதத்தில் மாதா குருசடி கட்டப்பட்டது. பங்குப்பணியாளர் தங்கி பணிபுரிய வீடு ஒன்று வாங்கப்பட்டது. சிறார் கல்வி பெற ஏதுவாக தொடக்கநிலை பள்ளிக்கூடம் உருவாக்கப்பட்டு, குறுகிய காலத்தில் கட்டிடமும், ஓர் ஆசிரியப் பணியிடமும் ஏற்பாடு செய்யப்பட்டது. வலியவிளை பங்கில் ஏழைப் பெண்களின் நலனுக்காக கைத்தறி நெசவாலை ஒன்று ஆரம்பிப்பட்டது. மேலும் இக்காலகட்டத்தில் பங்கின் வெள்ளிவிழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.

1987-1996 காலகட்டம்:

பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது. இந்த காலகட்டத்தில் 254 பேர் திருமுழுக்கு பெற்றனர். 

1997-2006 காலகட்டம்:

இக்காலகட்டத்தில் இறையழைத்கல்கள் பெருகியது. 2006 ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு யூபிலி சிறப்பாக கொண்டாடப் பட்டது. ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிதாக அழகிய பலிபீடம் அமைக்கப்பட்டது. கல்விக்கூடமும் புதுப்பிக்கப்பட்டு, நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 05.05.2005 அன்று கம்பீரமான குருசடி கட்டப்பட்டு, ஆயர் மேதகு யூஹானோன் மார் கிறிஸோஸ்டோம் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் 329 பேருக்கு திருமுழுக்கு வழங்கப்பட்டது.

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. மரியாயின் சேனை

2. பாலர் சபை

3. கோல்பிங் இயக்கம்

4. தந்தையர் சங்கம்

5. தாய்மார் சங்கம்

6. MCA

7. MCYM

8. புனித வின்சென்ட் தே பவுல் சபை

9. அருள்வாழ்வியங்கள்

10. மறைக்கல்வி

பங்கின் வளர்ச்சிக்கு வழிகோலிய அருட்சகோதரிகள்:

1. Sr. அந்தோணியம்மா, DM

2. Sr. ஆனி, DM

3. Sr. பியூஷா, DM

4. Sr. றீஷா, DM

5. Sr. தோமஷீனா, DM

6. Sr. மர்சலினாள், DM

7. Sr. குசுமம், DM

8. Sr. போர்ஜியா, DM

9. Sr. பெனடிக்ட், DM

10. Sr. ஷீலியா, DM

11. Sr. மரியற்றா, DM

12. Sr. ரெக்ஸ்லின், DM

13. Sr. எமரிட், DM

14. Sr. மேரி ஆனந்த், DM

15. Sr. மேரி புஷ்பம், DM

16. Sr. மேரி ஜோர்ஜ், DM

17. Sr. சபீனா, DM

பங்கின் உபதேசியர்:

1. திரு. குழந்தை சாமி

2. திரு. பொன்னையா

3. திரு. அருளப்பன்

4. திரு. வின்சென்ட்

பங்கில் பணிபுரிந்த பங்குத்தந்தையர் பட்டியல்:

1. அருள்தந்தை மோண். ஜோசப் குழிஞ்ஞாலில் (இப்பங்கை ஆரம்பித்தவர்)

2. அருள்தந்தை. ஜோசுவா குந்நத் (1961-1964)

3. அருள்தந்தை. மாத்யூ வாழபிளேத் (1964-1967)

4. அருள்தந்தை. ஜாண் தாழயில் (1967)

5. அருள்தந்தை. வர்க்கீஸ் பெருமலை (1967)

6. அருள்தந்தை. சாமுவேல் தெங்குவிளயில் (1967-1970)

7. அருள்தந்தை. ஜாண் தாழயில் (1970-1971)

8. அருள்தந்தை. மாத்யூ வாழபிளேத் (1971-1974)

9. அருள்தந்தை. ஜாண் புத்தன்விளை (1974-1976)

10. அருள்தந்தை. தோமஸ் பூவண்ணால் (1976-1980)

11. அருள்தந்தை.‌ ஜோசப் குரும்பிலேத் (1980-1982)

12. அருள்தந்தை. தோமஸ் பூவண்ணால் (1982-1984)

13. அருள்தந்தை. ஜாண் கம்பாறா (1984-1987)

14. அருள்தந்தை. சாமுவேல் இடமண்ணில் (1987-1989)

15. அருள்தந்தை.‌ பிரான்சிஸ் (1989-1992)

16. அருள்தந்தை. பிலிப் தயானந்த் (1993-1996)

17. அருள்தந்தை. ஜாண் நெடுவிளையில் (1996-1998)

18. அருள்தந்தை.‌ பீட்டர் ஆனந்த் (1999-2003)

19. அருள்தந்தை. மைக்கிள் (2003-2010)

20. அருள்தந்தை. மரிய அற்புதம் (2010-2012)

21. அருள்தந்தை. சிபி (2012-2016)

22. அருள்தந்தை. அருள் ஷைஜூ (2016-2021)

23. அருள்தந்தை. சஜின் ஏசுதாஸ் (2021 முதல்...)

இறை பராமரிப்பிலும், பங்குத்தந்தையர்களின் வழிகாட்டலிலும், பங்கு மக்களின் ஒருமித்த செயல்பாடுகளாலும் வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது தேமானூர் புனித தோமையர் ஆலய இறைசமூகம்.

வழித்தடம்: மார்த்தாண்டம் -உண்ணாமலைக்கடை -ஆற்றூர் -தேமானூர்

Location Map: https://g.co/kgs/eBVm2f

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்:

பங்குப்பணியாளர் அருள்தந்தை. சஜின் ஏசுதாஸ் அவர்கள்.