266 புனித லூர்து அன்னை ஆலயம், செறுதிக்கோணம்


புனித லூர்து அன்னை ஆலயம்

இடம் : செறுதிக்கோணம், குலசேகரம் அஞ்சல்.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித அகுஸ்தினார் ஆலயம், குலசேகரம்.

பங்குத்தந்தை : அருட்பணி ஆன்றனி சேவியர்

குடும்பங்கள் : 88
அன்பியங்கள் : 3

ஞாயிறு திருப்பலி : காலை 06.15 மணிக்கு

வியாழன் : மாலை 06.30 மணிக்கு நவநாள் திருப்பலி

திருவிழா : பெப்ரவரி மாதத்தில் ஏழு நாட்கள்.

வரலாறு :

1981-1983 : குலசேகரம் பங்குத்தந்தை அருட்தந்தை தேவசகாயம் அவர்களிடம், செறுதிக்கோணம் மக்களால் ஆலய கோரிக்கை வைக்கப்பட்டது.

1983-1987 : வருடத்திற்கு இரண்டு திருப்பலிகள் அருட்பணி சூசையன் SAC பணிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

1995-1998 : அருட்பணி லூர்து ராஜ் SAC காலத்தில் கத்தோலிக்க சேவா சங்கத்தினர் செறுதிக்கோண குடும்பங்களை சந்தித்து ஆன்மீகத்தில் ஊக்கப்படுத்தினர்.

1999-2000 அருட்பணி தாமஸ் SAC செறுதிக்கோணத்தில் ஆன்மீகப் பணிகளை அருட்சகோதரி ஹெலன் ICM அவர்களிடம் வழிநடத்த ஒப்படைத்தார்.

2000 - 2008 ஆலயத்திற்கு நிலம் வாங்கவும், ஆலயம் கட்டவும் பெருமளவில் நிதி திரட்டிய அருட்சகோதரி ஹெலன் ICM அவர்களின் பணிக்காலம்.

2001 ல் அருட்பணி சூசையன் SAC தலைமையில், கூட்டு முயற்சியால் 32.095 சென்ட் நிலம் ஆலயத்திற்கு வாங்கப்பட்டது.

வாங்கப்பட நிலத்தில் ஓலைக் குடிசை அமைக்கப்பட்டு மாதம் இரண்டு திருப்பலிகள் சனிக்கிழமைகளில் நிறைவேற்றப்பட்டன. இக்காலகட்டத்தில் அன்பியம் அமைக்கப் பட்டது.

04-05-2005 அன்று மாலை நேர வகுப்புக்கென்று ஒரு கட்டிடம் கட்டி திறக்கப்பட்டது.

25-05-2008 ல் அருட்தந்தை இருதயபால் ராஜ் SAC, அருட்சகோதரி ஹெலன், பங்கு மக்கள் மற்றும் பல நல் உள்ளங்களின் தாராள உதவியினாலும், உழைப்பாலும் உருவான புதிய ஆலயத்தை மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்கள் அர்ச்சித்து முதல் திருப்பலியை நிறைவேற்றினார்கள். மேலும் செறுதிக்கோணம் புனித லூர்து அன்னை ஆலயத்தை கிளைப்பங்காக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

28-05-2008 அன்று புனித மிக்கேல் அதிதூதர் குருசடிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

11-02-2011 ல் அருட்பணி கிறிஸ்டோபர் SAC அவர்களின் தலைமையில் கட்டப்பட்ட கலையரங்கம் திறக்கப்பட்டது.

2011-2014 : அருட்பணி மோசஸ் SAC அவர்களின் பணிக்காலத்தில் புனித மிக்கேல் அதிதூதர் குருசடி கட்டி முடிக்கப்பட்டு 10-02-2011 அன்று மறை மாவட்ட முதன்மை குரு பேரருட்தந்தை மரியதாசன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

09-02-2015 ல் அருட்தந்தை சிலுவை எட்வின் SAC பணிக்காலத்தில் புதிய கொடிமரம் வைக்கப்பட்டு திருத்துவபுரம் மறைவட்ட முதன்மை குரு அருட்பணி வின்சென்ட் ராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

2015 ல் அருட்தந்தை சூசையன் SAC தலைமையில் பங்கு மக்களின் முயற்சியால் 25 சென்ட் நிலம் கல்லறை தோட்டத்திற்கு வாங்கப்பட்டது.

2018 - ல் ஆலயத்திற்கருகாமையில் 10 சென்ட் நிலம் வாங்கப்பட்டது.

தற்போது பங்குத்தந்தை அருட்தந்தை ஆன்றனி சேவியர் அவர்களின் வழிகாட்டுதலில் வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது செறுதிக்கோணம் இறைசமூகம்.