207 கிறிஸ்து அரசர் ஆலயம், கிறிஸ்து ராஜபுரம்


கிறிஸ்து அரசர் ஆலயம்

இடம் : கிறிஸ்து ராஜபுரம்

மாவட்டம் : கன்னியாகுமரி

மறை மாவட்டம் : குழித்துறை

நிலை : கிளைப்பங்கு

பங்கு : நல்லாயன் ஆலயம், நல்லாயன்புரம்

பங்குத்தந்தை : அருட்பணி காட்வின் சௌந்தர்ராஜ்

குடும்பங்கள் : 90
அன்பியங்கள் : 5

ஞாயிறு திருப்பலி : காலை 10.00 மணிக்கு

செவ்வாய்க்கிழமை திருப்பலி : மாலை 06.30 மணிக்கு

திருவிழா : நவம்பர் மாதத்தில் கிறிஸ்து அரசர் விழாவை உள்ளடக்கிய பத்து நாட்கள்.

வரலாறு :

1957- ஆம் ஆண்டு, பரக்குன்று ஆலயத்திலிருந்து மிகத்தொலைவில் கண்ணுமாமூடு பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களை ஒருங்கிணைத்து, முள்ளன்குழி என்ற இடத்தில் 50 சென்ட் நிலம் வாங்கி, ஓலைக்கூரை அமைத்து கிறிஸ்து அரசர் ஆலயம் எனப் பெயர் சூட்டி, கிறிஸ்து ராஜபுரம் பங்கு உதயமானது.

1972 -ஆம் ஆண்டு (தற்போது சமூக அரங்கமாக மாற்றப்பட்ட பழைய ஆலயமானது கட்டி முடிக்கப்பட்டது.

2008 -ஆம் ஆண்டில் தற்போதைய புதிய ஆலயம் கட்டப்பட்டது.

கோபுர வேலைகள், பீட வேலைகள், மேற்கூரை கான்கிரீட் எனப் பல வேலைகள் இன்னமும் செய்ய வேண்டியுள்ளது.

ஆகவே தொடர்ந்து இவ்வாலய வளர்ச்சிக்காகவும், ஆலயத்தில் செய்ய வேண்டிய பணிகளுக்காகவும் பங்குத்தந்தை அருட்பணி காட்வின் சௌந்தர்ராஜ் அவர்கள் பங்கு மக்களை ஒருங்கிணைத்து பல்வேறு நிலைகளிலும் இவ்வாலயத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அல்லும் பகலும் அயராது திட்டமிட்டு வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.

மேலும் இவ்வாலத்தில் முடிக்கப்படாமல் இருக்கிற பணிகள், குறிப்பாக கோபுரம், பலிபீடம், கான்கிரீட் பணிகள் விரைவில் முழுமையாக முடிக்கப்படவும், அதற்கான நிதியுதவிகள், பொருளுதவிகள் கிடைத்திடவும் இறைவனிடம் ஜெபிப்போம்...!

இவ்வாலய பணிகளுக்கு, பொருளுதவி மற்றும் நிதியுதவி உதவி செய்ய நினைப்பவர்கள், பங்குத்தந்தை அருட்பணி காட்வின் சௌந்தர்ராஜ் அவர்களை 9487064600 இந்த எண்ணில் தொடர்பு கொண்டு உதவிட தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

"கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும். லூக் 6:38"

வழித்தடம் :

பளுகல் - மத்தம்பாலை - கண்ணுமாமூடு.