593 தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், RC ரெட்டியூர்

    

தூய ஆரோக்கிய அன்னை ஆலயம்

இடம் : RC ரெட்டியூர்

மாவட்டம் : சேலம்

மறைமாவட்டம் : சேலம்

மறைவட்டம் : மேட்டூர்

நிலை : 

கிளைப்பங்கு

பங்கு : தூய செல்வநாயகி அன்னை ஆலயம், எடப்பாடி

பங்குத்தந்தை :  அருள்பணி: D. பிரான்சிஸ் ஆசைதம்பி

குடும்பங்கள் : 74

அன்பியங்கள் : 2

சனி : மாலை 06.00 மணிக்கு புனித ஆரோக்கிய அன்னை நவநாள், திருப்பலி.

திருவிழா : செப்டம்பர் 8 -ம் தேதி. 

வழித்தடம் : எடப்பாடியிலிருந்து ஜலகண்டாபுரம் செல்லும் சாலையில் மூலைகடை வழியாக 15 கி.மீ தொலைவில் RC ரெட்டியூரில் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது.

வரலாறு : 

சேலம் மறைமாவட்டத்தில் உள்ள பழைமையான எடப்பாடி பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வருகிற RC ரெட்டியூர் தூய ஆரோக்கிய அன்னை ஆலய வரலாற்றைக் காண்போம். 

ரெட்டியூர் என்ற பெயர் கொண்ட இந்த ஊருக்கு, மக்களின் கத்தோலிக்க விசுவாசத்தால் (Roman Catholics) RC ரெட்டியூர் எனப் பெயர் வந்தது. 

எடப்பாடி மண்ணில் கிறிஸ்துவம்  ஊன்றப்பட்ட நாளில் RC ரெட்டியூரிலும் விசுவாசம் விதைக்கப் பட்டு, 366 ஆண்டுகள் பழைமையை தன்னுள் கொண்டுள்ளது. 

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பே கால் ஊனமுற்ற ஒரு சிறுவனுக்கு, அன்னையின் கருணையால் கால்சுகம் கிடைத்த அற்புத ஊர் RC ரெட்டியூர். 

சேலம் மறைமாவட்டத்திலேயே முதல் இறையழைத்தல் பெற்றவர் RC ரெட்டியூரைச் சேர்ந்த அருள்சகோதரி சின்னம்மா என்பது தனிச்சிறப்பு. 

RC ரெட்டியூரின் ஆலயங்கள் :

கி.பி 1828 -ஆம் ஆண்டு RC ரெட்டியூரின் முதல் ஆலயம் கட்டப்பட்டது. 

தொடர்ந்து இரண்டாவது ஆலயமானது 20 ம் நூற்றாண்டில் ஓட்டுக்கூரை வேய்ந்து கட்டப்பட்டது. 

எடப்பாடி பங்குத்தந்தை அருள்பணி. ஜான்போஸ்கோ பால் (2001-2006) பணிக்காலத்தில் தற்போதைய புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டு அடித்தளம் போடப்பட்டது. தொடர்ந்து பணியாற்றிய அருள்பணி. அந்தோணி மரிய ஜோசப் (2006-2008) பணிக்காலத்தில் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, சேலம் மறைமாவட்ட மக்கள் ஆயர் மேதகு செ. சிங்கராயன் அவர்களால் 08.09.2007 அன்று  அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. 

தொடர்ந்து இறைப் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள், தங்களது  பணிக்காலத்தில் RC ரெட்டியூரில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொண்டு ஆலய வளர்ச்சிக்கு துணையாக இருந்தனர். 

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் :

பங்குத்தந்தையின் வழிகாட்டுதலில், அருள்சகோதரர். ஜோ.