691 புனித சூசையப்பர் ஆலயம், சங்கர்நகர்

       
புனித சூசையப்பர் ஆலயம்

இடம் : பண்டாரகுளம், சங்கர்நகர் (தாழையூத்து)

மாவட்டம்: திருநேல்வேலி

மறைமாவட்டம்: பாளையங்கோட்டை

மறைவட்டம்: பாளையங்கோட்டை

நிலை : பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. குழந்தை இயேசுவின் புனித தெரசாள் ஆலயம், துறையூர்

2. புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், நாஞ்சான்குளம்

3. புனித அந்தோனியார் ஆலயம், காட்டாம்புளி

4. புனித லூர்து மாதா ஆலயம், ராஜபதி

5. புனித அந்தோனியார் ஆலயம், அனைத்தலையூர்

6. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், மிக்கேல்நகர்

7. அற்புத குழந்தை இயேசு ஆலயம், வடக்கு தாழையூத்து

பங்குத்தந்தை: அருட்பணி. S. ஜோசப்ராஜ்

குடும்பங்கள்: 200

அன்பியங்கள்: 10

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 08.15 மணி

வாரநாட்களில் திருப்பலி: மாலை 05.30 மணி

செவ்வாய் மாலை 05.30 மணி திருப்பலி புனித அந்தோனியார் நவநாள் ஜெபம் (புனித அந்தோனியார் கெபியில்)

புதன் மாலை 05.30 மணி புனித சூசையப்பர் நவநாள் திருப்பலி

முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமை மாலை 06.30 மணி திருப்பலி நவநாள் (வேளாங்கண்ணி மாதா கெபியில்)

முதல் மற்றும் மூன்றாவது வியாழன் மாலை 06.30 மணி திருப்பலி (வடக்கு தாழையூத்து)

வெள்ளி மாலை 05.30 மணி திருப்பலி (மிக்கேல்நகர்)

திருவிழா:

ஏப்ரல் மாதம் 22-ம் தேதி கொடியேற்றம். மே 01-ம் தேதி திருவிழா.

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. ஜோசப் ஜான்சன்

2. அருட்பணி. அருள் அரசு

3. திருத்தொண்டர். வில்லியம்ஸ், SJ

வழித்தடம்: திருநெல்வேலி -மதுரை நான்குவழிச்சாலையில், திருநெல்வேலியிருந்து 10கி.மீ தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இறங்குமிடம் தாழையூத்து (சிமென்ட் தொழிற்சாலை)

Location map: https://goo.gl/maps/cC7KEJhbBAyuuFDH8

வரலாறு:

சங்கர்நகர் ஊரானது மதுரை பிரதான நான்குவழிச் சாலையில் அமைந்துள்ளது. இங்கு பிரபலமான சிமென்ட் தொழிற்சாலை உள்ளது. 

தொடக்கத்தில் 1942 ஆம் ஆண்டு காலகட்டத்தில் சிமென்ட் நிறுவனம் சங்கர்நகரில் துவக்கப்பட்ட போது, இதில் பணிபுரிய பல வெளிநாட்டு பொறியியல் வல்லுநர்கள் இங்கேயே தங்கி பணிபுரிந்து வந்தனர். அப்போது இப்பகுதியில் கத்தோலிக்க ஆலயங்கள் இல்லை. தொலைவில் உள்ள பாளையங்கோட்டை பங்குடன் இப்பகுதி இருந்தது. இவ்வேளையில் வெளிநாட்டினர் ஒருவர் இறந்த போது சங்கர்நகரில் உள்ள ஓடைக்கருகே அடக்கம் செய்யப்பட்டார். இந்த கல்லறையில் கல்வெட்டு இப்போதும் உள்ளது.

இந்த ஓடைக்கருகே, சிமென்ட் கம்பெனியில் குத்தகை எடுத்திருந்த திரு. வறுவேல் நாடார் என்பவர், சுமார் 1950 காலகட்டத்தில் மூன்று அடுக்குகளைக் கொண்ட ஓடு வேயப்பட்ட புனித அந்தோணியார் கெபி ஒன்றைக் கட்டினார். வேலை நிமித்தம் காரணமாக கிறிஸ்தவ மக்கள் பலர் சங்கர்நகர் பகுதியில் நிலம் வாங்கி வாழ்ந்து வந்தனர்.

அப்போது கெபியை பார்வையிட வந்த மதுரை பேராயர் லோயனார்டு அவர்கள், இங்கு ஒரு ஆலயம் கட்டினால் சிறப்பாக இருக்கும் எனவும், அதனை சிமென்ட் கம்பெனியின் கூண்டு உயரத்திற்கு கட்ட வேண்டும் எனவும் கூறிச் சென்றார்.

அப்போது 1960 ஆம் ஆண்டு பேட்டை பங்குத்தந்தையாக பணிப்பொறுப்பேற்ற அருட்பணி. ஜார்ஜ் ஜோசப், சே.ச பணிக்காலத்தில் சங்கர்நகரில் ஆலயம் கட்டும் பணி துவக்கப்பட்டது. தொடர்ந்து பணிபுரிந்த அருட்பணி. மரிய மிக்கேல் பணிக்காலத்தில் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பருக்கு இவ்வாலயம் அர்ப்பணிக்கப்பட்டது. சுண்ணாம்பு கலவை மற்றும் கல் கொண்டு ஆலயம் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பேட்டை பங்கின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்தது.

ஆலயம் கட்டும் போதே ஆன்மீகப் பணிகளை கொன்சாகா சபை அருள்சகோதரிகள் மிக நேர்த்தியாக செய்து வந்தார்கள். அவர்களது ஆன்மிக வழிகாட்டுதல் படி இறைமக்கள் எல்லோரும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் கன்னியர் இல்லத்தில் இருந்து ஏறக்குறைய 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சங்கர்நகரில் புனித சூசையப்பர் ஆரம்பப் பள்ளியை ஆரம்பித்து நடத்தி வந்தனர். அதில் கல்வி கற்றவர்கள் ஏராளமான ஏழை எளியவர்கள். தினமும் காலை, மாலை இரு வேளையும் அருள்சகோதரிகள்  நடந்தே செல்வார்கள். ஆரம்ப காலத்தில் அவர்கள் தான் சங்கர்நகர் இறைமக்களின் ஆன்மீகக் காரியங்களுக்கு துணையாக இருந்தனர். 

அருட்பணி. M. அருள் பணிக்காலத்தில் ஆலய மேற்கூரை ஆஸ்பெஸ்டாஸ் வேயப்பட்டது. 

மேதகு ஆயர் இருதயராஜ் அவர்களால் 

பேட்டை பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு

22.05.1983 அன்று சங்கர்நகர் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. சங்கர்நகர், நாஞ்சான்குளம், காட்டான் புளி, மிக்கேல் நகர், வடக்கு தாழையூத்து ஆகியவை பேட்டை பங்கிலிருந்தும்; 

துறையூர், ராஜபதி, அனைத்தலையூர் ஆகிய ஊர்கள் புளியம்பட்டி பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு இதனுடன் சேர்க்கப்பட்டது.

முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. S. A. அன்னாசாமி அவர்கள் பொறுப்பேற்று ஆலய பீடத்தை புனரமைப்பு செய்து, நற்கருணைப் பேழையை நிறுவினார்.

அருட்பணி. ஜோக்கிம் பணிக்காலத்தில் சங்கர்நகர் தனிப்பங்கானதன் வெள்ளிவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் நன்கொடையாளர் உதவியுடன் புதிய கொடிமரம் நிறுவப்பட்டது.

அருட்பணி. M. S. அந்தோணிசாமி பணிக்காலத்தில் தியான மண்டபம் கட்டப்பட்டது. கல்லறைத்தோட்ட நிலம் பாதுகாக்கப்பட்டு சீர்படுத்தப்பட்டது. மேலும் புனித அந்தோணியார் கெபி புதுபிக்கப்பட்டு, அருகில் அந்தோணியார் மண்டபம் கட்டப்பட்டது.

அருட்பணி. S. ஜோசப்ராஜ் பணிக்காலத்தில் சிலுவைப்பாதை நிலைகள், மற்றும் புனித சூசையப்பர் கெபி  கட்டப்பட்டது.

பங்கில் உள்ள கெபிகள்:

புனித அந்தோனியார் அற்புத கெபி:

செவ்வாய்க்கிழமை மாலையில் இந்த கெபியில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மக்கள் இந்த கெபியில் வந்து ஜெபித்து நன்மைகள் பல பெற்றுச் செல்கின்றனர். ஜூன் மாதம் 11,12,13 ஆகிய மூன்று நாட்கள் இந்தக் கெபியில் திருவிழா சிறப்பாக கொண்டாடப் படுகிறது.

வேளாங்கண்ணி மாதா கெபி:

ஒவ்வொரு சனிக்கிழமை மாலையில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. செப்டம்பர் மாதம் 6,7,8 தேதிகளில் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

புனித சூசையப்பர் கெபி:

பங்கில் உள்ள கல்வி நிறுவனங்கள்:

1. ஆர்.சி தொடக்கப்பள்ளி

2. St. Josephs Nursery and primary matriculation school

பங்கில் உள்ள துறவறசபை:

கொன்சாகா சபை அருட்சகோதரிகள் இல்லம்

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. புனித வின்சென்ட் தே பவுல் சபை

2. மாதா சபை

3. அன்னை தெரசாள் இளம் பெண்கள் இயக்கம்

4. பிரான்சிஸ் சேவியர் இளைஞர் இயக்கம்

5. திருக்குடும்ப சபை

6. புனித செசிலி பாடகற்குழு (குறிப்பாக நீயே நிரந்தரம் பாடலை உருவாக்கிய திரு. நெல்லை ஜேசுராஜன் தலைமையில்)

7. புனித டோமினிக் சாவியோ பாலர்சபை

8. பீடப்பூக்கள்

9. மறைக்கல்வி

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருட்பணி. S. A. அன்னாசாமி 

2. அருட்பணி. அமலன் 

3. அருட்பணி. ஜெரி மஜல்லா பிரான்சிஸ் 

4. அருட்பணி. ஆரோக்கியசாமி 

5. அருட்பணி. S. அருள்ராஜ் (பொறுப்பு) 

6. அருட்பணி. வியான்னிராஜ் (பொறுப்பு)

7. அருட்பணி. ஜோக்கிம்

8. அருட்பணி. M.S. அந்தோணிசாமி

9. அருட்பணி. பிரான்சிஸ்

10. அருட்பணி. S. ஜோசப் ராஜ்

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்:

ங்குத்தந்தை அருட்பணி. S. ஜோசப் ராஜ் மற்றும் ஆலய உபதேசியார்