440 தூய சகாய அன்னை ஆலயம், காட்டுவிளை


தூய சகாய அன்னை ஆலயம்

இடம் : காட்டுவிளை, காட்டாத்துறை அஞ்சல்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
மறை வட்டம் : முளகுமூடு

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய அந்தோணியார் ஆலயம், செறுகோல் கரும்புத்தோட்டம்

பங்குத்தந்தை : அருட்பணி. ஜாண் பால் (குவனெல்லியன் சபை)
இணைப் பங்குத்தந்தை: அருட்பணி. ஆன்றனி சேவியர் (குவனெல்லியன் சபை)

குடும்பங்கள் : 70
அன்பியங்கள் : 4

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு

புதன்கிழமை மாலை 06.00 மணிக்கு செபமாலை, திருப்பலி.

திருவிழா : மே மாதம் நடைபெறும்

வழித்தடம் : இரவிபுதூர் கடை - சுவாமியார்மடம் வழியாக செல்லும் சாலையில் வலதுபுறம் காட்டுவிளை செல்லும் சாலையில் தூய சகாய அன்னை ஆலயம் அமைந்துள்ளது.

பேருந்துகள் : 382A

வரலாறு :

தூய சகாய அன்னை ஆலயம், காட்டுவிளை, இங்கு பிறமதத்தினரும் இவ்வாலயத்தின் மீது மிகுந்த மதிப்பும், சகாய அன்னையின் மீது பக்தியும் கொண்டு ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

கி.பி 1984 ஆம் ஆண்டு குட்டைக்காடு தனிப்பங்காக மாற்றம் பெறும் வரை பள்ளியாடி பங்கின் கிளைப் பங்காக இருந்து வந்தது.

பள்ளியாடியில் அருட்பணி. ஜார்ஜ் அவர்கள் பங்குதந்தையாக பணியாற்றிய போது ஒருசில குடும்பங்கள் கத்தோலிக்கர்களாக இருந்ததைக் கண்டு நிலம் வாங்கி, அவர்களுக்கென தனியாக சிறிய ஓலைவேயப்பட்ட ஆலயம் எழுப்பினார்.

பின்னர் கி.பி 1984 -ஆம் ஆண்டு குட்டைக்காடு பங்கின் கிளைப் பங்காக உருவானது. மேலும் பங்கின் வளர்ச்சியை அறிந்த அப்போதைய குட்டைக்காடு பங்கின் பங்குத்தந்தை அருட்பணி. மெல்கியாஸ் அவர்களால் பழைய ஆலயம் இடிக்கப்பட்டு, புதிய ஆலயம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு, 2005 -ஆம் ஆண்டு அருட்பணி. பெஞ்சமின் அவர்களால் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, அப்போதைய கோட்டாறு மறைமாவட்டத்தின் பரிபாலகர் அருட்பணி. மரியதாஸ் அவர்களால் ஆலய அர்ச்சிப்பு நடைபெற்றது.

2010 ஆம் ஆண்டு செறுகோல் கரும்புத்தோட்டம் அப்போதைய கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு. பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் பங்காக திருநிலை படுத்தப்பட்டது. அப்போது முதல் செறுகோல் கரும்புத்தோட்டம் பங்கின் கிளைப்பங்காக செயல்பட்டு வருகிறது.

இங்கு கிறிஸ்தவ மக்களின் எண்ணிக்கை குறைவு. கிறிஸ்தவர்களில் பெரும்பாலோர் பிற மதத்திலிருந்து வந்தவர்கள். மேலும் பங்கு சமூகத்துடன் அன்பினில் கலந்து ஒரே குடும்பம் என்ற உணர்வுடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது அன்பின் பணியாளர்கள் சபை (குவனெல்லியன் சபை) குருக்களான அருட்பணி. ஜாண் பால், அருட்பணி. ஆன்றனி சேவியர் ஆகியோரால் சிறப்பாக நடத்தப்பட்டு மென்மேலும் வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது. காட்டுவிளை இறை சமூகம்.

தனிச்சிறப்பு : தூய சகாய அன்னை, இப்பகுதி மக்களின் தேவையை அறிந்து, பலன் அளிக்கும் பாது காவலியாக விளங்கி வருகிறார்.