64 புனித அந்தோணியார் ஆலயம், வெள்ளையம்பலம்


புனித அந்தோணியார் ஆலயம்

இடம் : வெள்ளையம்பலம்.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

நிலை : பங்குதளம்
கிளை : புனித ஆரோக்கியநாதர் ஆலயம், வேப்புவிளை.

குடும்பங்கள் : 200
அன்பியங்கள் : 6

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு.

பங்குத்தந்தை (2018) : அருட்பணி எட்வின் ராஜ்.

திருவிழா : மே மாதத்தில் பத்து நாட்கள்.

சிறு குறிப்பு :

வேங்கோடு புனித சவேரியார் ஆலயத்தின் கிளைப் பங்காக இருந்த இவ்வாலயம் 2014 ல் தனிப்பங்காக உயர்ந்தது. அருட்பணி ஜியோ கிளிட்டஸ் பணிக் காலத்தில் பங்கில் பல்வேறு வளளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டார். இவரது பணிக்காலத்தில் மக்களின் ஜெப தேவைக்காக 2018 ம் ஆண்டில் அழகிய கெபி ஒன்றும் கட்டப்பட்டு குழித்துறை மறை ஆயர் மேதகு ஜெறோம் தாஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி எட்வின் ராஜ் அவர்கள் சிறப்பாக இறை பணி செய்து பங்கு மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றார்.

இவ் ஆலயமானது புதுக்கடை - கருங்கல் சாலையில் வெள்ளையம்பலம் பேருந்து நிறுத்தத்திற்கு அருகே அமைந்துள்ளது.