569 புனித மரியன்னை ஆலயம், வெட்டிக்குழி

           

புனித மரியன்னை மலங்கரை கத்தோலிக்க ஆலயம் 

இடம் : வெட்டிக்குழி, வெள்ளச்சிபாறை (PO),  629152.

மாவட்டம் : கன்னியாகுமரி 

மறைமாவட்டம் : மார்த்தாண்டம் 

மறைவட்டம் : பனச்சமூடு

நிலை : பங்குத்தளம் 

பங்குத்தந்தை : அருட்தந்தை. அபின்சன் அலெக்ஸ் 

குடும்பங்கள் : 54

அருள் வாழ்வியங்கள் : 4

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு காலை 06.00 மணிக்கு 

காலை ஜெபம், தொடர்ந்து திருப்பலி.

புதன் மாலை 06.00 மணிக்கு மாலை

ஜெபம். 6.30 மணிக்கு திருப்பலி,

தொடர்ந்து மரியன்னை நவநாள். 

பக்த இயக்கங்கள் :

மறைக்கல்வி : ஞாயிறு காலை திருப்பலியைத் தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் நடைபெறும். 

சிறார் இயக்கம் : ஞாயிறு தோறும் மறைக்கல்வியைத் தொடர்ந்து நடைபெறும். 

மரியாயின் சேனை (சிறார்கள்) : சனி மாலை 05.30 மணிக்கு. 

மரியாயின் சேனை (தாய்மார்கள்) : சனி மாலை 06.00 மணிக்கு. 

இளைஞர் இயக்கம் : மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் ஞாயிறு காலை 09.30 மணிக்கு. 

தாய்மார் சங்கம் : ஞாயிறு திருப்பலியைத் தொடர்ந்து நடைபெறும்.

புனித வின்சென்ட் தே பவுல் சபை : மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் ஞாயிறு காலை திருப்பலியைத் தொடர்ந்து நடைபெறும். 

கோல்பிங் இயக்கம் : மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் வெள்ளி மாலை 05.00 மணிக்கு. 

பாடகற்குழு : ஞாயிறு மதியம் 02.00 மணிக்கு. 

பீடச்சிறுவர்கள் இயக்கம் : மூன்று மாதங்களுக்கு ஒருமுறை. 

பங்குப்பேரவை : ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை. 

திருவிழா : மரியன்னையின் பிறப்பு திருநாளை முன்னிட்டு செப்டம்பர் 1 ம் தேதி முதல் 8 ம் தேதி வரை  சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. அருட்தந்தை. சதீஷ்

2. அருட்சகோதரி. லூசி இம்மானுவேல் 

3. அருட்சகோதரி. ஆக்னஸ் இம்மானுவேல் 

4. அருட்சகோதரர். ஜோபின். 

வழித்தடம் : மார்த்தாண்டம் -பனச்சமூடு -குளப்பாறை சாலையில் மேழக்கோடு சந்திப்பிலிருந்து இடதுபுறமாக 1கி.மீ தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. 

வரலாறு :

குமரி மாவட்டத்தில் மாங்கோடு கிராமத்தில் மரங்களாலும், பாறைகளாலும் சூழப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் அழகிய வெட்டிக்குழி என்ற கிராமத்தில், அன்போடும் தோழமையோடும், அமைதியோடும் வாழும் மக்களுக்கிடையே அமைந்துள்ள புனித மரியன்னை மலங்கரை கத்தோலிக்க தேவாலயத்தின் வரலாற்றைக் காண்போம். 

மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் மார்த்தாண்டம் மறைமாவட்டம், பனச்சமூடு மறைவட்டத்தின் ஒரு வழிபாட்டுத் தலமாக இவ்வாலயம் அமைந்துள்ளது. 

பிறப்பால் அனேக குடும்பங்கள் கத்தோலிக்க விசுவாசிகளாக இருந்தும், ஒரு ஆலயம் இல்லாத காரணத்தால் மக்கள் ஆலயங்களுக்குச் செல்லாமலும், கத்தோலிக்க சபையைச் சாராத பிற ஆலயங்களுக்குச் சென்று, அந்த சபைகள் கற்பிக்கின்ற விசுவாசத்தில் வாழ்ந்து வந்தனர். 

கத்தோலிக்க தேவாலயத்திற்கு செல்ல விரும்புவோர் பனச்சமூடு புனித சூசையப்பர் மலங்கரை கத்தோலிக்க தேவாலயத்திற்கோ அல்லது அம்பலக்காலை இலத்தீன் ஆலயத்திற்கோ செல்ல வேண்டும். சாலை வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் இல்லாத நிலையில் மக்கள் இவ்வாலயங்களுக்குச் செல்ல மிகவும் சிரமப்பட்டனர். 

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் பகுதியிலேயே ஒரு ஆலயம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் கனவாகவும், வேண்டுதலாகவும் அமைந்தது. 

ஆலயம் உருவாவதற்கு முதல் கட்டமாக அமைந்தது ஜெபக்கூடங்கள். 1977 ம் ஆண்டு சிதறிக்கிடந்த இறை விசுவாசம் கொண்ட மக்களை ஒன்றுகூட்டி சகோ. ஸ்டீபன் தலைமையில் ஜெபக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. 

அருட்தந்தை. பிலிப் உழுந்நல்லூர் (1980-1981):

இத்தருணத்தில் அன்றைய திருவனந்தபுரம் மறை மாநிலத்தின், நெய்யாற்றின்கரை செம்பருத்திவிளையில் இறைப்பணியாற்றி வந்த அருட்தந்தை. பிலிப் உழுந்நல்லூர் அவர்கள், 1980 -ம் ஆண்டு இறைப்பணியாற்ற  இம்மண்ணில் முதன் முதலாகக் கடந்து வந்தார். இவரது கடின முயற்சியாலும், உழைப்பாலும் ஒரு ஆலயம் அமைப்பதற்காக மக்கள் ஒன்று திரண்டனர். 

அருட்சகோதரி. குசுமம் அவர்கள் மறைப்பணியாற்ற இம்மண்ணில் கடந்து வந்து, மறைக்கல்வி மற்றும் ஜெபவழிபாடுகள் நடத்த காரணமாக இருந்தார். 

மக்களின் ஆர்வத்தின் காரணமாக திரு. இராஜமணி என்பவருக்கு சொந்தமான இடம் விலைக்கு வாங்கப்பட்டு, ஒரு ஓலை அமைக்கப்பட்டு ஆலயமாக செயல்படத் தொடங்கியது. 

அருட்தந்தை மற்றும் மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் அவர்கள் இம்மண்ணில் சிற்றாலயம் ஒன்றை அமைக்க அனுமதி அளித்தார். 

இறைவிருப்பத்தாலும் அருட்தந்தையோடு இணைந்த பங்கு மக்களின் கூட்டு முயற்சியாலும் ஆலயம் கட்டப்பட்டு 24.02.1980 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

பங்கின் வளர்ச்சி:

அருட்தந்தை. ஜோசப் பிலாங்காலை (1981-1983):

தொடக்க காலத்தில் ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றி, மக்களை ஒற்றுமையின் பாதையில் சிறப்பாக வழி நடத்தினார். 

அருட்தந்தை. ஜோன். ஜி. வடக்கேபுறம் (1983-1986):

சாலை வசதிகள் எதுவுமில்லாத இக்கிராமத்தில் அருட்தந்தையவர்களின் பணிக்காலத்தில் சாலை வசதியும், மின் இணைப்பும் அமைக்கப்பட்டது. இக்கிராமத்தில் முதன்முறையாக இவ்வாலயத்தில் தான் மின் இணைப்பு வழங்கப்பட்டது. 

அருட்தந்தை. ஜான் துண்டியத்து (1986-1991):

புனித வின்சென்ட் தே பவுல் சபை, கோல்பிங் இயக்கம் துவக்கப் பட்டது. இங்குள்ள மக்களின் குடும்ப நிகழ்வுகளை சிறப்பிப்பதற்கான இடவசதி இல்லாததால், பங்கின் சார்பாக சிறு திருமண மண்டபம் ஒன்று அமைக்கப் பட்டது. 

அருட்தந்தை. டானியேல் மாணிக்குளம் (1991-1995):

Credit Union என்ற MIDS இயக்கத்தின் வழியாக பல வீட்டுத் திட்டங்கள் மக்களிடையே சென்றடைய காரணமாக இருந்தார். இதனால் குடிசையில் வாழ்க்கை நடத்தி வந்த அனேக பாமர மக்களுக்கு வீட்டு வசதி கிடைக்கப் பெற்றது. 

அருட்தந்தை. ஜான்சன் பாறைக்கல் (1995-1997):

பங்கின் வளர்ச்சிக்காகவும், பங்கு மக்களின் வளர்ச்சிக்காகவும் பல நல்ல செயல் திட்டங்களை வகுத்து நடைமுறைப் படுத்தினார். 

அருட்தந்தை.ஜி.வற்கீஸ் (1997-2000):

தொடக்க காலம் முதல் மலையாள மொழியில் நடத்தப்பட்டு வந்த திருப்பலியானது, தமிழ் மொழியில் நடைபெறத் தொடங்கியது. திரு. சுகுமாரன் அவர்கள் நன்கொடையாக கொடுத்த நிலத்தில் புனித மரியன்னை குருசடி கட்டப்பட்டு, 23/08/1998 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

அருட்தந்தை.தேவதாஸ் (2000-2003):

ஆலயத்திற்கு ஒன்றரை ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. வெறும் தரிசு நிலமாக இருந்த நிலத்தின் ஒருபகுதி கல்லறைத் தோட்டமாகவும், மறுபகுதி இரப்பர் தோட்டமாகவும் மாற்றப்பட்டது. 

அருட்தந்தை. ஜார்ஜ் தாவரத்தில்(2003):

இவரது பணிக்காலத்தில் மாதா குருசடி

புதுப்பிக்கப்பட்டது.

அருட்தந்தை. இயேசுதாஸ் (2004-2005):

இவரது பணிக்காலத்தில் ஆலயத்திற்கு வர சிரமப்படும் தொலைவில் உள்ள இறை மக்களுக்காக வெள்ளச்சிபாறை -யில் புனித சூசையப்பர் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம் அமைக்கப்பட்டது. 

அருட்தந்தை. S.வற்கீஸ் (2005)

குறுகிய மாத கால அளவில் மக்களுக்காக ஜெபித்து இறைப்பணியாற்றினார்.

அருட்தந்தை. ஜோஸ்பின்(2006):

பங்கு மக்களை ஆன்மீக வழியில் வழிநடத்தினார்

அருட்தந்தை. சிபி (2006):

ஆன்மீகத்தாலும் ஜெபத்தாலும் மக்களிடையே இறை அனுபவத்தை பரப்பினார். 

அருட்தந்தை. ராபின்சன் (2007-2008):

அன்பினாலும், கனிவான செயல்பாடுகளாலும் பங்கு மக்களை வழிநடத்தினார். 

அருட்தந்தை. ஜெனன் ஜெரால்டு (2009-2010):

மூன்று மாத காலம் ஆலய வளர்ச்சிக்கு இயன்றவரை பணியாற்றினார். 

அருட்தந்தை. ஸ்டீபன் செம்பகத்தோப்பு (2010-2013):

மேதகு ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் ஆண்டகையின் தலைமையில் புது ஆலயம் மற்றும் புது மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டி, ஆலய கட்டுமானப் பணிகள் துவக்கப் பட்டது. இக்காலத்தில் அருட்தந்தைக்கு உறுதுணையாக அருட்தந்தை. அகஸ்டின் சுனில் அவர்கள் துணைப் பங்குத்தந்தையாக பணியாற்றினார். 

அருட்தந்தை. பென்னட் (2013-2016):

புதிய ஆலய கட்டுமானப் பணிக்காக முழு மூச்சுடன் அயராது பாடுபட்டார். ஆலய கட்டுமானத்திற்காக நிதி திரட்ட பங்கு மக்களை ஒருங்கிணைத்து பல கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டார். இறைமக்களின் ஆன்மீக வாழ்வை ஆழப்படுத்த, மாதத்திற்கு ஒருமுறை ஆடம்பர நற்கருணை ஆராதனையை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தினார். 

அருட்தந்தை. பெர்னார்ட் (2016-2017):

மூன்று மாத பணிக்காலத்தில் இயன்ற அளவிலான பங்களிப்பு தந்து ஆலய வளர்ச்சிக்கு உதவினார். 

அருட்தந்தை. ஜீன் ஜோஸ் (2017-2019):

75% ஆலய கட்டுமானப் பணிகள் முன்னேறிய நிலையில், அருட்தந்தையின் வருகை மின்னல் வேகத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற காரணமானது. அனைவரின் ஒத்துழைப்புடன் ஆலயப் பணிகள் நிறைவு பெற்று, 03.09.2017 அன்று மேதகு ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் ஆண்டகையின் தலைமையில் அர்ச்சிக்கப் பட்டது. 

திரு. கருணாகரன் அவர்கள் நன்கொடையாக வழங்கிய நிலத்தில் புனித ஜார்ஜியார் குருசடி கட்டப்பட்டு 23.12.2018 அன்று மேதகு ஆயர் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

அருட்தந்தை. மைக்கிள் முக்கம்பாலத் (2019):

மூன்று மாதங்கள் என்ற குறுகிய காலகட்டத்தில் சிறந்த முறையில் பங்கு மக்களை ஆன்மீகத்திலும் ஜெபத்திலும் வழிநடத்தினார். 

அருட்தந்தை. அபின்சன் அலெக்ஸ் (2019 முதல் தற்போது வரை..):

2020-ல் உலக மக்களை கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்த காலம் மக்கள் ஊரடங்கினால் வீட்டிற்குள் அடைபட்டுக் கிடந்த போது, பல்வேறு கரங்களிலிருந்து உதவிகளைப் பெற்று ஏழை எளிய பாமர மக்களுக்கு உதவிகளைச் செய்து, ஜெப வாழ்வினாலும் ஆன்மீக வழிகாட்டுதலினாலும் மக்களை வழிநடத்தி வருகிறார். 

பங்கில் பணியாற்றிய அருட்சகோதரிகள்:

1. அருட்சகோதரி.குசுமம் 

2. அருட்சகோதரி.ஆலிஸ் 

3. அருட்சகோதரி.யூக்கிறிஸ்டா

4. அருட்சகோதரி.மேரி மைக்கிள் 

5. அருட்சகோதரி.லில்லி ஜோஸ் 

6. அருட்சகோதரி.மேரி ரெம்யா 

7. அருட்சகோதரி.மனோஜ்னா 

8. அருட்சகோதரி. கார்மல் 

9. அருட்சகோதரி.டெய்சி

10. அருட்சகோதரி.மேரி ஆனந்த் 

11. அருட்சகோதரி.சூசன் பிலிப் 

12. அருட்சகோதரி.அருள் தெரஸ் 

13. அருட்சகோதரி.மேபல் ஜோஸ் 

14. அருட்சகோதரி.மேரி புஷ்பம் 

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்தந்தை. அபின்சன் அலெக்ஸ் அவர்கள். 

வரலாறு : ஆலய ஆண்டறிக்கை புத்தகம்.