738 புனித குழந்தை தெரசாள் ஆலயம், கிராப்பட்டி

          

புனித குழந்தை தெரசாள் ஆலயம்

இடம்: கிராப்பட்டி, திருச்சி- 620012

மாவட்டம்: திருச்சிராப்பள்ளி

மறைமாவட்டம்: திருச்சிராப்பள்ளி

மறைவட்டம்: கிராப்பட்டி

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்கு: புனித இஞ்ஞாசியார் ஆலயம், கிராப்பட்டி

பங்குத்தந்தை: அருட்பணி. ஜோ. ஜோ. லாரன்ஸ் (வட்டார அதிபர்)

Contact no: +91 98427 99713

ஆலய இணையத்தளம்:

https://sttheresaschurchcrawford.com/

குடும்பங்கள்: 650

அன்பியங்கள்: 21

திரு வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 06:00 மணி, காலை 07:15 மணி,

காலை 09:00 மணி (ஆங்கிலம்),

மாலை 06:00 மணி

வாரநாட்களில் திருப்பலி: காலை 06:00 மணி

முதல் வெள்ளிக்கிழமை மாலை 06:00 மணி திருமணி ஆராதனை

முதல் சனிக்கிழமை மாலை 06:00 மணி குழந்தை மாதா நவநாள் தேர்பவனி மற்றும் திருப்பலி

சனிக்கிழமை மாலை 06:00 மணிக்கு குழந்தை மாதா நவநாள் திருப்பலி குணமளிக்கும் ஜெவழிபாடு, திருஎண்ணெய் பூசுதல், நற்கருணை ஆசீர்

திருவிழா: அக்டோபர் மாதத்தில் பத்து நாட்கள்

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. ஜெரி, SJ

2. அருட்பணி. லியோ பெரைரா, SJ

3. அருட்பணி.‌ ராஜன், SDB

வழித்தடம்: மத்திய பேருந்து நிலையம்/ புகைவண்டி நிலையத்தில் இருந்து 2கி.மீ தொலைவில் கிராப்பட்டி அமைந்துள்ளது.

Location map:

St. Therasal Church Crawford

https://maps.app.goo.gl/xhrRC5LQuRMGKrbT7

வரலாறு:

கிராப்பட்டி எனும் அழகிய ஊரில் 04.11.1934 அன்று ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டு, திருச்சி தூய மரியன்னை பேராலயத்தின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது.

01.11.1976 அன்று தூய மரியன்னை பேராலயத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. Y. இருதயராஜ் அவர்கள் பணிப் பொறுப்பேற்று வழிநடத்தினார்.

ஆலயம் கட்டப்பட்ட 50வது ஆண்டு பொன்விழா 04.11.1984 அன்று அருட்பணி.‌ G. F. ஆரோக்கியசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அருட்பணி. R. அத்தனாஸ் அவர்கள் பணிக்காலத்தில் புனித தெரசாள் மக்கள் மன்றம் கட்டப்பட்டு 15.08.1998 அன்று புனிதம் செய்யப் பட்டது.

01.11.2001 அன்று அருட்பணி. I. அமலநாதன் பணிக்காலத்தில் தனிப்பங்கானதன் வெள்ளி விழா கொண்டாடப் பட்டது. 

புனித லூர்து அன்னை கெபி கட்டப்பட்டு 11.02.2003 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

07.06.2003 அன்று அருட்பணி. M. ஞானாதிக்கம் பணிக்காலத்தில் நாட்டு ஓடுகள் கொண்ட கூரை அகற்றப்பட்டு, சுண்ணாம்பு காரை இருந்த பகுதிகள் சரிசெய்யப்பட்டு, ஆலய தரைதளம் புதுப்பிக்கப்பட்டு அழகூட்டப்பட்டது. 

எடமலைப்பட்டிபுதூரில் இருந்த ஆலயமானது கிராப்பட்டி பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு, குழந்தை இயேசு பங்காக 06.07.2003 அன்று கார்மெல் சபை குருக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

புனித தெரசாள் மக்கள் மன்றத்தின் முதல் மாடியில் உள்ள பந்தல் அகற்றப்பட்டு உணவுக்கூடம் கட்டப்பட்டு, திருச்சி மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோணி டிவோட்டோ அவர்களால் 06.09.2003 அன்று திறந்து வைக்கப்பட்டது.

14.05.2008 இல் பங்குப்பணியாளர் அருட்பணி. ஞானாதிக்கம் அவர்களால் ஆலய பீடத்தின் இருபகுதிகளும் விரிவுபடுத்தப்பட்டு, இறக்கை பகுதிகள் உருவாக்கப்பட்டது.

அருட்பணி. S. அம்புரோஸ் பணிக்காலத்தில் 2008 ஆம் ஆண்டு புதிய தேர் உருவாக்கப் பட்டது.

ஆலயத்திற்கும் சிறுமலர் மேல்நிலைப் பள்ளிக்கும் இடையில் உள்ள நடைபாதையில், சிலுவைப் பாதை நிலைகள் கட்டப்பட்டு 10.04.2009 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

24.09.2010 இல் புனித குழந்தை தெரசாள் மற்றும் புனித யூதா ததேயு புதியபீடம் உருவாக்கப்பட்டது.

03.10.2010 இல் ஆலய பொன்விழா நினைவாக புனித குழந்தை தெரசாள் அரங்கமும், புனித லூர்து அன்னை கெபியும் புதுப்பிக்கப்பட்டது. 

அருட்பணி. D. தாமஸ் பணிக்காலத்தில் 04.10.2015 இல் ஆலய முகப்பு மண்டபம் கட்டப்பட்டு, சிலுவைப் பாதை நிலைகள் உள்ள பகுதியின் தரையில் சிமெண்ட் கல்தளமும் போடப் பட்டது.

08.09.2018 இல் அருட்பணி. ஜோ. ஜோ. லாரன்ஸ் அவர்கள் பணிக்காலத்தில் பங்குப் பணியாளர் இல்லம்/ பங்கு அலுவலகம் ஆகியவை சீர்செய்யப்பட்டு புதிதாக அமைக்கப்பட்டது. 

07.10.2018 முதல் பங்கின் செய்திகளைத் தாங்கிய "சிறுமலர்" இதழ் வெளியிடப்பட்டு வருகிறது.

ஆலய வளாக மாதா பூங்கா சீரமைப்பு, வளாகம் பசுமையாக்கல் திட்டம், மண்டப சுற்றுச்சுவர், ஆலய உட்புற மின்விளக்கு திட்டம், இறைவார்த்தை சுவற்றில் எழுதப்பட்டுள்ள திட்டம், சிறிய மாதா தேர், புதிய வர்ணத்தில் கொடிமரம், ஆலயத்தை சுற்றிலும் கண்காணிப்பு கேமரா, ஆலய ஒலிஅமைப்பு ஆகியவையும் பங்கின் வளர்ச்சிக்கு சான்றுகளாகும். 

2019 ல் "வீழ்வேனென்று நினைத்தாயோ" 2020 ல் "எழுந்துவா" ஆகிய தலைப்புகளில் ஒலி ஒளி காட்சி பங்கு மக்களால் நடத்தப் பட்டது.

01.05.2019 ல் புனித குழந்தை தெரசாள் சமூக நலக்கூடம் புதுப்பிக்கப்பட்டது.

27.09.2019 ல் ஆலய முகப்பில் அழகுறு வளைவு (Arch), மற்றும் ஆலயத்தை சுற்றிலும் சிமெண்ட் கல்தளம் பதிக்கப்பட்டுள்ளது.

15.10.2019 முதல் உரோம் நகரில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித குழந்தை மாதா (Maria Bampina) சுரூபம் நிறுவப்பட்டு, குழந்தை மாதாவின் பக்தி முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஒருங்கிணைந்த கிருஸ்துமஸ் கேரல் விழா அனைத்து சபையைச் சார்ந்த குழுக்களுடன் இணைந்து கொண்டாடப்படுகிறது.

02.02.2020 ல் புதிய நற்கருணை ஆலயம் கட்டப்பட்டு புனிதம் செய்யப் பட்டது.

19.03.2020 புனித சூசையப்பர் விழா அன்று "வளன் குடில்" என்ற புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

"ஏதேன் தோட்டம்" என்ற எழில்மிகு குடில், பல நிறங்களில் பூத்துக் குலுங்கும் பசுமைச் செடிகள், அழகிய பறவைகள், வண்ணமயமான ஏதேன் தோட்ட ஓவியம் போன்றவை காண்போரை களிப்பூட்டும் வண்ணம் அமைந்துள்ளது. 

06.03.2021 அன்று புனித தெரசாள் மக்கள் மன்றத்தின் மேல்தளத்தில் "மரிய பம்பினா மினி ஹால்" (Maria Bambina mini hall) திறந்து வைக்கப்பட்டது. 

06.03.2021 ல் வளன் குடிலின் மேல்மாடியில் மரிய பம்பினா ஒலி, ஒளி பதிவுக்கூடம் புதிதாக அமைக்கப்பட்டது.

19.09.2021 அன்று பொன்விழா அரங்கத்தின் உட்பகுதியில் "மீட்பின் ஏதேன்" என்ற கல்வாரி சுவரோவியம் வரைகலவையால் உருவாக்கப் பட்டுள்ளது.

09.09.2021 ல் மாதா கெபியின் கீழ்பகுதியில், மாதா பூங்காவில் இயேசுவின் திருவுடல் தூம்பா சுரூபம் புனிதப்படுத்தப்பட்டு, இயேசுவின் கல்லறை காட்சியாய் வைக்கப் பட்டுள்ளது.

1934 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆலயத்தின் உட்புறம் புதுப்பிக்கப்பட்டு, அழகுற மின்னும் எழில் தோற்றம் கொண்ட புதிய பீடமும் ஒன்றரை கோடி ரூபாய் பொருட்செலவில் அமைக்கப்பட்டு, திருச்சி மறைமாவட்ட ஆயர் மேதகு S. ஆரோக்கியராஜ் அவர்களால் 14.10.2021அன்று

அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

இவைதவிர புனித சூசையப்பர் தினத்தை "தந்தையர் தினமாக சிறப்பித்து யோசேப்பு விருதும்", அருளாளர் தேவசகாயம் பிள்ளை விழாவை பொதுநிலையினர் சிறப்பிக்க 'தேவசகாயம் பிள்ளை விருதும்', பல்வேறு கன்னியர் சபைகளை இணைத்து 'உறவின் சங்கம விழா', பங்கு மக்களை இணைத்து 'திருக்குடும்ப விழா', 'பொங்கல் விழா', அன்பியங்கள் இணைந்து 'அன்பிய சங்கம விழா', 'விவிலியம் வார விழா', மகளிர் தினத்தை சிறப்பிக்க பெண்கள் மற்றும் அருள்சகோதரிகளுக்கு 'சாதனையாளர் விருது', இளையோரை ஊக்குவிக்க 'கலைவிழா' போன்ற விழாக்கள் வருடம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றன. 

14.10.2021 முதல் பங்கின் புதிய யூடியூப் வலைதளம் ஆரம்பிக்கப்பட்டு (St Theresal church Crowford) பங்கு செய்திகள், விழாக்கள், திருப்பலிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

லயன்ஸ் கிளப் மூலமாக தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது.

பங்கில் உள்ள சபைகள் மற்றும் இயக்கங்கள்:

1. மரியாயின் சேனை

2. திருக்குடும்ப சபை

3. புனித வின்சென்ட் தே பவுல் சபை

4. பெண்கள் பணிக்குழு

5. புனித தெரசாள் இளையோர் இயக்கம்

6. மாதா சபை இளம் பெண்கள் இயக்கம்

7. மரிய பம்பினா சிறுமியர் குழு

8. புனித தோம்னிக் சாவியோ சிறுவர் குழு

9. திரு வழிபாட்டு குழு

10. கலைக் குழு

11. பங்குப் பேரவை

12. மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் அன்பிய மண்டலங்கள்

13. அலங்கார குழு

14. பீடப்பூக்கள்

பங்கில் உள்ள கெபிகள்:

1. லூர்து மாதா கெபி

2. ஏதேன் தோட்டம் (அசிசி மாடம்)

3. யாகப்பர் குருசடி (கொல்லாங்குளம்)

4. மீட்பின் ஏதேன் சுவர் ஓவியம்.

பங்கில் உள்ள நிறுவனங்கள்:

1. புனித அன்னாள் சபை தலைமையகம் (Generalate)

2. புனித அன்னாள் சபை (Provincialate)

3. புனித அன்னாள் சபை (Noviciate)

4. புனித அன்னாள் சபை (Pre Noviciate)

5. சிறுமலர் தொடக்கப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி, ஆங்கிலப் பள்ளி

6. FMM Sisters -(புனித தோமையர் கருணை இல்லம்)

7. SCN -Sisters (Mentally Retorted school)

8. ICM Sisters Provincialate

9. Carmel Ashram

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருட்பணி. Y. இருதயராஜ் (1976-1982)

2. அருட்பணி. Y. வியாகுலம் (1982-1983)

3. அருட்பணி. V. செல்வராஜ் (1983-1984)

4. அருட்பணி.‌ பைட்டோன் ராஜ் (1984 மூன்று மாதங்கள்)

5. அருட்பணி. G. F. ஆரோக்கிய சாமி (1884-1991)

6. அருட்பணி. Y. A. லூர்ஸ் (1991 இரண்டு மாதங்கள்)

7. அருட்பணி. அருள்தாஸ் (1991 டிசம்பர் -1992 ஜூன் வரை)

8. அருட்பணி.‌ பைட்டோன்ராஜ் (1992-1993)

9. அருட்பணி. R. அத்தனாஸ் (1993-1999)

10. அருட்பணி. I. அமலநாதன் (1999-2003)

11. அருட்பணி.‌ M. ஞானாதிக்கம் (2003-2008)

12. அருட்பணி. S. அம்புரோஸ் (2008-2011)

13. அருட்பணி. P. மரியானூஸ் ஐசக் (2011-2012)

14. அருட்பணி. S. தேவராஜ் (2012-2013)

15. அருட்பணி. D. தாமஸ் (2013-2018)

16. அருட்பணி. ஜோ. ஜோ. லாரன்ஸ் (2018 முதல்...)

புதுமைகள் நிறைந்த கிராப்பட்டி புனித குழந்தை தெரசாள் ஆலயம் வாருங்கள்.. இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்..

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி.‌ ஜோ. ஜோ. லாரன்ஸ் அவர்கள்