891 கிறிஸ்து அரசர் ஆலயம், ஸ்ரீரங்கராஜபுரம்

    

கிறிஸ்து அரசர் ஆலயம்

இடம்: ஸ்ரீரங்கராஜபுரம், உன்னங்குளம் அஞ்சல்

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: வடக்கன்குளம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: கிறிஸ்து அரசர் ஆலயம், நாங்குநேரி

பங்குத்தந்தை அருட்பணி. டென்சில் ராஜா

குடும்பங்கள்: 20

மாதத்திற்கு ஒருமுறை மாலை 07:00 மணிக்கு திருப்பலி நடைபெறும்

திருவிழா: செப்டம்பர் மாதத்தில் (புரட்டாசி முதல் வெள்ளிக்கிழமை கொடியேற்றம்)

வழித்தடம்:

நாங்குநேரி -அம்பலம். இங்கிருந்து மூலகரைப்பட்டி சாலையில் இடதுபுறமாக இரண்டு கி.மீ உள்ளே வந்தால் ஆலயத்தை அடையலாம்.

நாங்குநேரி டோல்கேட் -நெடுங்குளம் - ஸ்ரீரங்கராஜபுரம்.

Location map: Christ The King Church, Srirengarajapuram

https://maps.google.com/?cid=3172075544741326682&entry=gps

வரலாறு:

நாங்குநேரி பங்கின் கீழ் செயல்பட்டு வந்த ஸ்ரீரங்கராஜபுரத்தில் தொடக்கத்தில் ஒரு ஓலைக்குடிசை ஆலயம் அமைக்கப்பட்டது.

1973 ஆம் ஆண்டு வெளிவந்த தூத்துக்குடி மறைமாவட்ட பொன்விழா மலரில், ஸ்ரீரங்கராஜபுரத்தில் 70 கத்தோலிக்கர்கள் வாழ்ந்து வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் தற்போது காணப்படும் ஆலயமானது கட்டப்பட்டு, மேதகு ஆயர் அம்புரோஸ் அவர்களால் 04.02.1975 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

ஓலைக் குடிசை ஆலயம் இருந்த இடத்தில் தூய மிக்கேல் அதிதூதர் கெபி கட்டப்பட்டது.

தொடர்ந்து இறையாசீருடன் ஆன்மீகப் பாதையில் பயணித்து வருகிறது ஸ்ரீரங்கராஜபுரம் இறைசமூகம்

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: ஆலய பொறுப்பாளர்கள்.