230 புனித செபஸ்தியார் ஆலயம், தலக்குளம்


புனித செபஸ்தியார் ஆலயம்

இடம் : தலக்குளம்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய பனிமய மாதா ஆலயம், #பட்டரிவிளை

பங்குத்தந்தை : அருட்தந்தை ஜஸ்டின்
இணை பங்குத்தந்தை : அருட்தந்தை ஜெபராஜ்

குடும்பங்கள் : 25
அன்பியம் : 1

ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணிக்கு

திருவிழா : ஜனவரி 21-ம் தேதியை உள்ளடக்கிய மூன்று நாட்கள்.

தலக்குளம் வரலாறு :

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் தலக்குளத்தில் சிறு ஆலயம் கட்டப்பட்டது. தொடக்க காலத்தில் முளகுமூடு பங்கு ஆலயத்திலிருந்து வெளிநாட்டு அருட்பணியாளர்கள் குதிரை வண்டியில் இங்கு வந்து அவ்வப்போது திருப்பலி நிறைவேற்றி வந்தனர். இந்த காலகட்டத்தில் காலரா நோய் பாதிப்பால் பல குடும்பங்கள் அழிந்து போயின. சில குடும்பங்கள் அச்ச உணர்வால் வேறு ஊர்களில் குடியேறினர்.

புனித செபஸ்தியாரின் புதுமையால் மக்கள் காலரா நோயிலிருந்து குணமடைந்ததை நினைவில் கொண்டு ஆண்டு தோறும் கார்த்திகை முதல் தேதி முதல் கிறிஸ்து பிறப்பு வரை புனித செபஸ்தியாரின் சுரூபத்தை சப்பரத்தில் வைத்து ஊரைச் சுற்றி பாடல்கள் பாடி ஜெபித்து வருவது இன்றும் தொடர்கிறது.