680 புனித செபஸ்தியார் ஆலயம், திருநெல்வேலி டவுன்

  
புனித செபஸ்தியார் ஆலயம்

இடம்: திருநெல்வேலி டவுன்

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: பாளையங்கோட்டை

மறைவட்டம்: பாளையங்கோட்டை

நிலை: கிளைப்பங்கு

பங்கு: தூய அடைக்கல அன்னை ஆலயம், திருநெல்வேலி டவுன்

பங்குத்தந்தை: அருள்பணி. மை. பா. சேசுராஜ்

குடும்பங்கள்: 30

அன்பியம்: 1

செவ்வாய் மாலை 06.30 மணிக்கு திருப்பலி

திருவிழா: ஜனவரி மாதத்தில் புனித செபஸ்தியார் பெருவிழாவை உள்ளடக்கிய ஞாயிறு

வழித்தடம்:

நெல்லை டவுன் -தென்காசி சாலை

வரலாறு:

புனித செபஸ்தியார் ஆலயம் கி.பி 1660 ஆம் ஆண்டிற்கு முன்னர் கட்டப்பட்டது. 

பேட்டை பங்கின் கீழ் செயல்பட்டு வந்த இவ்வாலயத்திற்கு அருள்பணி. ஜார்ஜ் ஜோசப் சே.ச பணிக்காலத்தில் மின்சார இணைப்பு பெறப்பட்டது. மேலும் புனிதரின் சப்பர பவனியானது நான்கு ரதவீதிகளிலும் சுற்றிவர ஏற்பாடு செய்தார்.

திருநெல்வேலி டவுன் 2005 ஆம் ஆண்டு தனிப்பங்கான போது, இவ்வாலயம் அதன் கிளைப்பங்கானது.

அருள்பணி. அந்தோணி சேவியர் அவர்களின் முயற்சியால் புதிய ஆலயம் கட்டப்பட்டு 2010 ஆம் ஆண்டு அர்ச்சிக்கப் பட்டது.

ஆலய புதுமைகள்:

பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஒரு தாயின் நோய்வாய்ப்பட்ட மகனை மருத்துவர்களால் கை விடப்பட்டபோது, இவ்வாலயம் வந்து அழுது ஜெபிக்க மகன் உயிர் பிழைத்துள்ளார். 

செய்துங்கநல்லூர் ஊரைச் சேர்ந்த நடக்க இயலாமல் இருந்த பெண்ணை இவ்வாலயம் அழைத்து வந்து தொடர்ந்து ஜெபிக்க, சில வாரங்களிலேயே அப்பெண் நன்றாக நடந்தார்.

சிங்கம்பாறையைச் சேர்ந்த பிறசமய பெண்ணின் முகத்தில் தோன்றிய மருக்கள் (பால் உண்ணி) மறைய, புனிதரின் வழியாக ஜெபிக்க, சில நாட்களிலேயே மருக்கள் இருந்த தடமே தேரியாமல் மறைந்து போகவே, ஆலயம் வந்து நன்றி செலுத்தி சென்றனர்.

மேலும் பேய்பிடித்தவர்கள் நலமாகி சென்றிருக்கிறார்கள். இப்படி பல அற்புதங்கள் புனிதரின் வழியாக நடந்து வருவதால், பல்வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து ஜெபித்து நலம் பெற்றுச் செல்கின்றனர்.

சிறு கிளைப்பங்கு ஆலயமாக இருந்தாலும், இறைப்பிரசன்னம் நிரம்பப் பெற்ற இவ்வாலயம் வாருங்கள்.. புனித செபஸ்தியார் வழியாக இறைவனின் ஆசீர்வாதங்களைப் பெற்றுச் செல்லுங்கள்.

தகவல்கள்: பங்குத்தந்தை அருள்பணி. மை. பா. சேசுராஜ்