360 ஆரோக்கிய மாதா ஆலயம், லட்சுமிபுரம், சென்னை


ஆரோக்கிய மாதா ஆலயம்.

இடம் : லட்சுமிபுரம், சென்னை -99

மாவட்டம் : சென்னை
மறை மாவட்டம் : சென்னை -மயிலை உயர் மறை மாவட்டம்.
மறை வட்டம் : அம்பத்தூர்

நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்கு : இல்லை

பங்குத்தந்தை : அருட்பணி அ. பெலிக்ஸ் பிலிப்
தொடர்பு எண் :9677273477 Email : afphilip2013@gmail.com

குடும்பங்கள் : 550
அன்பியங்கள் : 26

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு காலை 06.15 மணிக்கு செபமாலை (ஆங்கிலம்)
காலை 06.30 மணிக்கு திருப்பலி (ஆங்கிலம்)

காலை 08.15 மணிக்கு செபமாலை
காலை 08.30 மணிக்கு திருப்பலி
மற்றும் காலை 08.15 மணிக்கு மறைக்கல்வி மாணவர்களுக்கான திருப்பலி.
மாலை 05.30 மணிக்கு திருப்பலி.
மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை ஆராதனை, திருப்பலி (தமிழ்)

திங்கள், புதன் : காலை 06.15 மணிக்கு செபமாலை, திருப்பலி

செவ்வாய், வியாழன், சனி : மாலை 06.00 மணிக்கு செபமாலை, திருப்பலி.

வெள்ளி : மாலை 06.00 மணிக்கு செபமாலை, அரைமணிநேரம் ஆராதனை ஆசீர் மற்றும் திருப்பலி.

முதல் வெள்ளி மாலை 06.00 மணிக்கு செபமாலை, ஒரு மணி நேர சிறப்பு நற்கருணை ஆசீர், திருப்பலி.

முதல் சனிக்கிழமை மாலை 06.00 மணிக்கு சிறப்பு செபமாலை, சிறப்பு திருப்பலி, குணமளிக்கும் வழிபாடு, தேர்பவனி மற்றும் நேர்ச்சை உணவு.

திருவிழா :

ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 08-ம் தேதி திருவிழா என 12 நாட்கள்.

மண்ணின் மைந்தர் : அருட்சகோதரர் சாமுவேல் (இரட்சகர் சபை) .

வழித்தடம் : From Koyambedu.. Kolathur retteary Bus stand. From here walkable.... Kadappa road.. Thiruvallur st.. Arokiya matha church.

வரலாறு :

1966 ம் ஆண்டு பெரம்பூர் தூய லூர்து அன்னை திருத்தல பங்கின் பகுதியாக இருந்த லட்சுமிபுரத்தில் சில குடும்பங்கள் வசித்து வந்தனர். ஆகவே இங்கு ஒரு சிற்றாலயத்தை ஏற்படுத்த விரும்பினர். மேலும் சில குடும்பங்கள் லட்சுமிபுரத்தில் குடியேறினர். இவர்கள் இப்பகுதி மக்களை சந்தித்து திருச்சபையின் அருட்சாதனங்களைப் பெறுவதற்கு கற்பித்து வழிகாட்டி வந்தனர்.

அப்போதைய பெரம்பலூர் பங்குத்தந்தை அருட்பணி மெக்பெரன் SDB அவர்களின் பெருமுயற்சியால், சென்னை -மயிலை பேராயர் மேதகு அருளப்பா ஆண்டகையால் 27-03-1967 ல் லட்சுமிபுரத்தில் விவேகானந்தர் தெருவில் 9 சென்ட் காலிமனை (இடம்) வாங்கப்பட்டு, ஓலைக் கொட்டகை ஆலயம் அமைக்கப் பட்டது. இதில் ஏழை மாணவர்களுக்கு இரவு பாடசாலை நடத்தப்பட்டு வந்தது. சில காரணங்களால் ஆலயத்தை தொடர முடியாமல் போனது.

ஆகவே இங்குள்ள கிறிஸ்தவ குடும்பங்களின் வீடுகளில் அப்போதைய பெரம்பூர் துணை பங்குத்தந்தை A. M சின்னப்பா SDB அவர்களால் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. இவ்வேளையில் இங்குள்ள ஏழை எளிய மக்கள் உதவி புரிந்து வந்தனர். பின்னர் வேறு ஒரு இடத்தை (தற்போது ஆலயம் இருக்குமிடம்) 1970 ல் அருட்தந்தை அந்தோணி ஹிக்மென் அவர்கள் வாங்கி ஓலைக்குடிசை சிற்றாலயம் அமைத்துக் கொடுத்தார்.

பின்னர் மேலும் சில குடும்பங்கள் வந்து குடியேறின. 1975 -ம் ஆண்டு வரை பெரம்பூர் பங்கின் கிளைப்பங்காக இருந்த லட்சுமிபுரம் 1976 ல் புதிதாக உருவான பெரவள்ளூர் உயிர்த்த ஆண்டவர் ஆலயத்தின் கிளைப்பங்காக மாற்றப்பட்டது. பெரவள்ளூர் பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருட்பணி லாசர் SDB அவர்கள் பொறுப்பேற்றார். தொடர்ந்து பொறுப்பேற்ற அருட்பணி மேத்யூ ஓரத்தல் அவர்கள் 1979 ல் ஆலயத்திற்கு மேலும் நிலம் வாங்கிக் கொடுத்தார்.

அருட்பணி N. A ஜோசப் SDB அவர்கள் 1984 -ல் கூரையாக இருந்த ஆலயத்தை மாற்றி புதிய ஆலயம் கட்டினார். மேலும் இங்குள்ள பிள்ளைகளுக்கு உயர்கல்வி, தொழிற்கல்வி படிக்க உதவினார்.

அருட்பணி பாஸ்கல் பணிக்காலத்தில் ஆலயத்தை சுற்றிலும் மதிற்சுவர் கட்டினார். இவ்வேளையில் 60 கத்தோலிக்க குடும்பங்கள் இப்பங்கில் இருந்தன. அருட்பணி பால் முசாரியேத் அவர்கள் 1999 ல் அன்பியம் துவங்கினார். பங்குத்தந்தை இல்லம் கட்டினார். மேலும் நிலங்கள் வாங்கப்பட்டன. 2001 ல் அன்பிய முதல் ஆண்டு விழா கொண்டாடப் பட்டது. அப்போது முதல் தனிப்பங்காக ஆவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆலயத்தின் எல்லைகள் வரையறுக்கப்பட்டன.

அருட்பணி பால் முசாரியேத் அவர்களின் தொடர் முயற்சிகளால் 08-06-2003 அன்று துணை ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் அவர்கள் தலைமையில், பெரம்பூர் பங்குத்தந்தை மேதகு ஆயர் சௌந்தரராஜன் அவர்கள் முன்னிலையில் அருட்பணி பால் முசாரியேத் அவர்களும் இணைந்து திருப்பலி நிறைவேற்றப்பட்டு, தனிப்பங்காக உயர்த்தப்பட்டது.

முதல் பங்குத்தந்தையாக அருட்பணி ஞானப்பிரகாசம் அவர்கள் பொறுப்பேற்றார்கள்.

8-9-2008 அன்று சென்னை - மயிலை பேராயர் மேதகு A. M சின்னப்பா SDB அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டது. முதல் தளம் இரண்டாம் தளம் போடப்பட்டது. பத்தாண்டுகள் பணிபுரிந்து அருட்பணி ஞானப்பிரகாசம் அவர்கள் ஆலயப் பணிகள் நிறைவு பெறும் முன்னரே மாற்றம் பெற்றுச் சென்றார். தொடர்ந்து பொறுப்பேற்ற அருட்பணி கிளமென்ட் பாலா ஆவர்கள் பெரும் முயற்சி செய்து பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற ஒத்துழைப்புடன் ஆலய கட்டுமானப் பணிகளை நிறைவு செய்து 28-08-2014 அன்று சென்னை - மயிலை பேராயர் மேதகு அந்தோணி சாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

தற்போது சமூக கூடம், கெபி, பிரமாண்டமான அழகிய கொடி மரம், அனைத்து நோயாளிகளும், முதியோர்களும் பயன்பெறும்படியான நீண்ட நடைப்பாலம், சிறந்த மின் தூக்கி வசதி.. இவைகள் இப்பங்கில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஆகும்.

தற்போது அருட்பணி அ. பெலிக்ஸ் பிலிப் அவர்களின் சிறப்பான வழிகாட்டுதலில் இவ்வாலயம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது.

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி அ. பெலிக்ஸ் பிலிப்.