580 குழந்தை இயேசு ஆலயம், யாமப்பள்ளி


குழந்தை இயேசு ஆலயம்

இடம் : யாமப்பள்ளி, பெருமாம்பாளையம்

மாவட்டம் : நாமக்கல்

மறைமாவட்டம் : சேலம்

மறைவட்டம் : திருச்செங்கோடு

நிலை : கிளைப்பங்கு

பங்கு : புனித மரிய மதலேனாள் ஆலயம், பட்லூர்

பங்குத்தந்தை : அருள்பணி. பிரான்சிஸ் சேவியர், இரக்கத்தின் அன்னை சபை

குடும்பங்கள் : 20

திருப்பலி நேரங்கள் : 

ஞாயிறு : காலை 08.30 மணிக்கு திருப்பலி

வியாழன் : மாலை 07.00 மணிக்கு குழந்தை இயேசு நவநாள் திருப்பலி, நற்கருணை ஆராதனை.

திருவிழா : ஜனவரி மாதம் 1ம் தேதி.

வழித்தடம் : பட்லூரிலிருந்து திருச்செங்கோடு- கொக்கராயன்பேட்டை செல்லும் சாலையில் 5கி.மீ தொலைவில் யாமப்பள்ளி (பெருமாம்பாளையம்) உள்ளது.

வரலாறு :

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் அழகிய கிராமம் தான் யாமப்பள்ளி. தொடக்கத்தில், யாமப்பள்ளியில் உள்ள கத்தோலிக்க கிறுஸ்துவ குடும்பங்கள் திருச்செங்கோடு தூய மரியன்னை ஆலய பங்கை தலைமையிடமாகக் கொண்டு, திருப்பலியில் பங்கேற்க சென்று வந்தனர்.

திருச்செங்கோடு தொலைதூரமாக இருந்த நிலையில், தங்களுக்கென்று ஒரு ஆலயம் தேவை என்று எண்ணி, அன்றைய திருச்செங்கோடு பங்குத்தந்தை அருள்பணி. A. X. இருதயம் (1996-2000) அவர்களின் உதவியுடன், யாமப்பள்ளி மக்களின் அயராத முயற்சியால் அழகிய ஆலயம்  கட்டப்பட்டு, 23.12.1999 அன்று சேலம் மறைமாவட்ட பரிபாலகர் மேதகு. விக்டர் சுந்தர்ராஜ் அவர்களால் அர்ச்சித்து புனிதப்படுத்தப்பட்டது.

மேலும், திருச்செங்கோடு பங்குத்தந்தை அருட்பணி. A. பிலவேந்திரம் (2003-2008) அவர்களின் முயற்சியால், ஜெர்மனியைச் சேர்ந்த Mrs. Maria Nohl Anneliese & Ronald ஆகியோரின் உதவியுடன் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, 02.05.2006 அன்று சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டில் பட்லூர் தனிப்பங்கான போது, திருச்செங்கோடு பங்கிலிருந்து யாமப்பள்ளி பிரிந்து பட்லூர் பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வருகிறது. 

16.02.2020 அன்று மேதகு ஆயர் செ. சிங்கராயர் தலைமையில் நற்கருணைப் பேழை நிறுவப்பட்டு, பல வருடங்களுக்குப் பிறகு பிள்ளைகளுக்கு திருவிருந்து, உறுதிபூசுதல் வழங்கப் பட்டது. 

தொடர்ந்து இரக்கத்தின் அன்னை சபை அருட்தந்தையர்களால் சிறப்பாக நடத்தப்பட்டு, வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது யாமப்பள்ளி இறைசமூகம். 

தகவல்கள் : பங்குத்தந்தை அருள்பணி. பிரான்சிஸ் சேவியர், இரக்கத்தின் அன்னை சபை.

தகவல்கள் சேகரிப்பு : SPB காலனி பங்கின் பீடச்சிறுவன்.