895 புனித சூசையப்பர் ஆலயம், காத்தான்பள்ளம்

   

புனித சூசையப்பர் ஆலயம்

இடம் : காத்தான்பள்ளம், எலத்தகிரி அஞ்சல், ஒரப்பம் பஞ்சாயத்து, கிருஷ்ணகிரி மாவட்டம்

மாவட்டம்: கிருஷ்ணகிரி

மறைமாவட்டம்: தருமபுரி

மறைவட்டம்: கிருஷ்ணகிரி

நிலை: பங்குத்தளம்

பங்குத்தந்தை: அருட்பணி. S. ஜேசுதாஸ்

குடும்பங்கள்: 180

அன்பியங்கள் : 6 

(மாற்கு, மத்தேயு, லூக்கா, சூசையப்பர், பியோ) 

திருப்பலி நேரங்கள்: 

ஞாயிறு காலை 09:00 மணி

வார நாட்கள் காலை 06:30 மணி, மாலை 06:30 மணி

மாதத்தின் முதல் புதன் 06:00 மணிக்கு புனித சூசையப்பர் தேர் வலம். தொடர்ந்து திருப்பலி மற்றும் நற்கருணை ஆராதனை.

மாதத்தின் முதல் வெள்ளி: மாலை திருப்பலி தொடர்ந்து நற்கருணை ஆராதனை.

திருவிழா : மே மாதம் முதல் ஞாயிறு

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. Fr. சவரிநாதன் (ஊட்டி மறைமாவட்டம்)

2. Fr. M. பெஞ்சமின் (தருமபுரி  மறைமாவட்டம்)

1. Sr. நிர்மலா (Servents of the poor)

2. Sr. கவிதா லில்லி (Servants of the poor)

3. Sr. தெஸ்சாந்தா (IHM)

4. Sr. மேக்தலின் மரியா (IHM)

5. Sr. பாஸ்கா மேரி (IHM)

6. Sr. ஜான்சி மேரி (CHF)

7. Sr. நம்பிக்கை மேரி (FSM)

8. Sr. R. ஜோஸ்பின் ராயப்பன் (FSM)

9. Sr. பாத்திமா கிரேசி (FSM)

10. Sr. I. ஆரோக்கியமேரி (DMI)

11. Sr. லிடியா (IHM)

12. Sr. ஹெலன் மார்கரேட் மேரி (ME Sisters)

வழித்தடம்:

கிருஷ்ணகிரியிலிருந்து, சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் ஒரப்பம் கிராமத்தில் இடதுபுறம் செல்லும் எலத்தகிரி சாலையில் சென்று, Gonzaga கல்லூரி அடுத்து வலப்புறம் செல்லும் காத்தான்பள்ளம் கிராமத்தின் மையத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

Map location: https://maps.app.goo.gl/vYKmw4XQN49py2hB8

🔔 வரலாறு:

எலத்தகிரிக்கு தெற்கே  ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிறிஸ்துவ குடியிருப்பே காத்தான்பள்ளம். எலத்தகிரி பங்கின் கிளைப்பங்குகளில் ஒன்றாக காத்தான்பள்ளம் இருந்தது.

ஒரப்பம் - எலத்தகிரி இடையில் உள்ள சிறிய பள்ளத்தாக்கு, அதிலும் காற்று அதிகம் வீசும் பள்ளத்தாக்கு என்பதால் காத்தான்பள்ளம் என பெயர் ஏற்பட்டது என்றும், தற்போது கொன்சாகா கல்லூரி எதிரில் ஒரு கல் மண்டபம் உள்ளது. அது 20ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் வணிகத்தில் சிறந்து விளங்கிய, செட்டியார் மக்களின் பாதுகாப்பைக் கருதி, ஒரு மண்டபத்தை நியமித்து அதில் காவலர்களை பணியில் அமர்த்தி வந்தனர். மேலும் வழிப்போக்கர்கள் அந்த மண்டபத்தை நிழற் கூடமாகவும் பயன்படுத்தி வந்தனர். இதன் மூலமாகவும் காத்தான்பள்ளம் என்ற பெயர் வழங்கப்பட்டது என்ற செய்தியும் உண்டு. 

கிபி 1820-க்கு பிறகு பல்வேறு ஊர்களில் இருந்து எலத்தகிரி பகுதியில் குடியேறிய கிறிஸ்தவர்கள் கந்திக்குப்பம், காத்தான்பள்ளம், சுண்ணடம்பட்டி, சூரங்கொட்டை, அச்சமங்கலம் மற்றும் புஷ்பகிரி ஆகிய ஊர்களில் வாழ ஆரம்பித்தனர். இவ்வாறு பாப்பு, நடுவீதி, மணியம் குடும்பத்தினர், காத்தான்பள்ளத்தில் தங்கி விவசாயம் செய்து வந்தனர். 

பிற்காலத்தில் கீரகத்தி, தோட்டம், நெசவு, சிப்பாய், குடும்பங்கள் திருமண உறவின் மூலம் இப்பகுதியில் ஏறத்தாழ 150 கிறிஸ்துவ குடும்பங்கள் உருவாகின. 

தனிகல்லறை:

1937 வரை எலத்தகிரி கல்லறையில் தான் காத்தான்பள்ளத்தில் இறந்த கிறிஸ்தவர்கள் உடல் அடக்கம் செய்யப்பட்டன. முறையான நடைபாதை வசதி இல்லாமலும், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலும், எலத்தகிரி கல்லறை தோட்டத்தை அடைய முடியாதாலும், 1937 இல் ஒருவர் காத்தான்பள்ளத்திலயே அடக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து காத்தான்பள்ளத்திலேயே கல்லறை உருவானது.

ஆலயநிலம்:

1995ஆம் ஆண்டளவில் அப்போதைய எலத்தகிரி பங்குதந்தை அருள்பணி. M. அருள்சாமி அடிகளாரின் அரிய முயற்சியாலும், அன்றைய பங்குப் பேரவையின் முழுமையான ஆதரவினாலும், காத்தான்பள்ளம் மக்களின் ஒத்துழைப்புடன் கொன்சாகா சபை கன்னியர்கள் தங்கள் இல்லத்தை உருவாக்க, நிலம் விலைக்கு வாங்கினர். இந்த காலகட்டத்தில் பாப்பு குடும்பத்தை சேர்ந்த பாபுராஜ், சவரிமுத்து, சவரியப்பன், சூசையப்பன், பவுல்ராஜ், குடும்பத்தினர் 1.69 ஏக்கர் நிலம் ஆலயம் கட்டுவதற்காக, அருள்தந்தை அருள்சாமியிடம் தானமாகக் கொடுத்தனர். இவ்வாறு தானமாக அளிக்கப்பட்ட நிலம் பாப்பு குடும்பத்தை சேர்ந்த சூசை (சிப்பாய்) என்பவரின் நிலம் ஆகும். அவருக்குப் பின் தன் தம்பி பிள்ளைகளுக்கு இந்நிலத்தை கொடுத்தார். அவர்கள் அந்த நிலத்தை ஆலயத்திற்கு தானமாக கொடுத்தனர். அவர் நினைவாக இவ்வாலையத்திற்கு புனித சூசையப்பர் என பெயரை வைக்க வேண்டும் என்று ஊர் மக்கள் அப்போதைய ஆயர் அவர்களிடம், பரிந்துரை செய்தனர். 

சிற்றாலயம்:

1997இல் அருள்பணி. M. அருள்சாமி அவர்கள் ஆரம்பித்த ஆலயப் பணிகளை, அவரைத் தொடர்ந்து எலத்தகிரி பங்கு பொறுப்பை ஏற்ற அருள்தந்தை M. ஜெகராஜ்*அவர்கள் செய்து முடித்தார். 13.02.1999 அன்று புனித சூசையப்பர் சிற்றாலயம் அன்றைய ஆயர் மேதகு ஜோசப் அந்தோணி இருதயராஜ் அவர்களால் புனிதப் படுத்தப்பட்டது.

1999 ஆம் ஆண்டு முதல் புதன்கிழமைகளில் மாலை நேரங்களில் திருப்பலி நடைபெற்று வருகிறது. 2010 ஆம் ஆண்டு மே முதல் அருள்பணி. A. சூசைராஜ் அவர்கள் ஞாயிறுதோறும் திருப்பலியை நிறைவேற்றி வந்தார். முதல் புதன்கிழமைகளில் தேர்வலம் சிறப்பிக்கப்பட்டு வந்தது. 

புதிய ஆலயம்:

திருப்பலியில் பங்கு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கவே, புதிய ஆலயத்துக்கான தேவை ஏற்பட்டது. எனவே தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் அவர்களின் ஆசீரோடும் அனுமதியோடும், புதிய ஆலயத்திற்கான பணிகள் பிப்ரவரி 2013 அன்று எலத்தகிரி பங்குத்தந்தை அருள்பணி. A. சூசைராஜ் அவர்கள் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து பின்வந்த பங்குத்தந்தை அருள்பணி. J. ஆரோக்கியசாமி அடிகளார், இறை மக்களின் தாராள உதவியுடன் ஆலயத்தை கட்டி முடித்து 23.12.2015 அன்று மேதகு ஆயர் லாரன்ஸ் பயஸ் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது .

அருள்பணி. J. ஆரோக்கியசாமி அடிகளாரின் சீரிய முயற்சியினாலும், பங்கு மக்களின் விருப்பத்தின் பேரில் 2017-ஆம் ஆண்டு மே மாதம் இவ்வாலயம் புதிய பங்காக மேதகு ஆயர் லாரன்ஸ் பயஸ் அவர்களால் அறிவிக்கப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. மார்ட்டின் கிறிஸ்துதாஸ் அவர்கள் 2018 ஆம் ஆண்டு பொறுப்பேற்று வழிநடத்தினார்.

கொன்சாகா அருள் சகோதரிகள்:

1998 ஆம் ஆண்டு காத்தான் பள்ளத்தில் கொன்சாக கன்னியர்கள் தங்கள் நவகன்னியர்கள் இல்லத்தை துவங்கினர். பின்னர் 2009 ஆம் ஆண்டு கொன்சாகா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி (Gonzaga) மற்றும் கொன்சாகா ஆங்கில மேல்நிலை பள்ளியையும் தொடங்கி,  கிராமத்தின் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகிறது.

கன்னியர்கள் சபை: 

பிரான்சிஸ்குவின் புனித கொன்சாகா கன்னியர்கள் சபை

பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புகள்:

1. மரியாயின் சேனை

2. பாலர் சபை

3. பீடச்சிறுவர்

4. மறைக்கல்வி

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி. மார்ட்டின் கிறிஸ்துதாஸ் (2018-2022)

2. அருட்பணி. ஜோசப் ரோசாரியோ (2022)

3. அருட்பணி. சவரியப்பன், HGN (2022-2023)

4. அருட்பணி. S. ஜேசுதாஸ் (2023 முதல்)

தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. S. ஜேசுதாஸ் அவர்கள்

தகவல்கள் சேகரிப்பில் உதவி மற்றும் புகைப்படங்கள்: திரு. ஏசுதாஸ் கிருஷ்ணகிரி