796 புனித கத்தரீனம்மாள் ஆலயம், இரவிபுத்தன்துறை

                       

புனித கத்தரினம்மாள் (காதரின்) ஆலயம்

இடம்: இரவிபுத்தன்துறை, தூத்தூர் அஞ்சல்

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: திருவனந்தபுரம் உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: தூத்தூர்

நிலை: பங்குத்தளம்

தொடர்புக்கு: 04651 218 053

பங்குத்தந்தை: அருட்பணி. ரஜீஸ் பாபு

குடும்பங்கள்: 1200

அன்பியங்கள்: 36

ஞாயிறு திருப்பலி காலை 06:00 மணி (Malayalam), காலை 08:30 மணி (தமிழ், மறைக்கல்வி மாணவர்களுக்கு)

நாள்தோறும் காலை 05:30 முதல் 06:00 வரை நற்கருணை ஆராதனை, தொடர்ந்து 06:00 மணிக்கு திருப்பலி.

புதன்கிழமை மாலை 05:30 மணி புனித சூசையப்பர் நவநாள் திருப்பலி (புனித சூசையப்பர் திருத்தலம்)

மாதத்தின் முதல் புதன்கிழமை காலை 10:00 மணிக்கு புனித சூசையப்பர் திருத்தலத்தில் நோயாளிகளுக்கு சிறப்பு ஆராதனை மற்றும் திருப்பலி, தொடர்ந்து அன்பு விருந்து. 

ஒவ்வொரு மாதமும் 25 ஆம் தேதி மாலை 05:30 மணிக்கு, புனித கத்தரினம்மாள் நவநாள் சிறப்பு திருப்பலி, பவனி, நற்கருணை ஆராதனை.

(திருப்பலிகள் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் நடைபெறும்)

திருவிழா: நவம்பர் 25 ஆம் தேதி நிறைவுபெறும் வகையில் ஏழு நாட்கள்

புனித சூசையப்பர் திருத்தல திருவிழா மே 1-ஆம் தேதியை மையமாகக் கொண்டு பத்து நாட்கள். (இந்த பங்கின் மிக முக்கியமான திருவிழா)

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. ராஜன் (late)

2. அருட்பணி. ஜெறோம் G. பர்னாண்டஸ் 

3. அருட்பணி. ருடால்ப், CMF

4. அருட்பணி.‌ டார்வின் Peters

5. அருட்பணி. சிமின் G. பர்னாண்டஸ், OSST

6. அருட்பணி. சோனி, CMF

7. அருட்பணி. ஹெலின், CMF

8. அருட்பணி.‌ சுரேஷ்

9. அருட்பணி.‌ சூசை ஆன்றனி, CMF

1. அருட்சகோதரி.‌ விக்டோரியா மேரி, (late) St. Anns

2. அருட்சகோதரி. விட்டன் மேரி, St. Ann's

3. அருட்சகோதரி. ஜெயந்தி, Benediction

4. அருட்சகோதரி.‌ ராணி, Our Lady of Rosary

5. அருட்சகோதரி. சரிதா, Holy Cross

6. அருட்சகோதரி.‌ ஷாரோன், Vimala Hrudhayam

7. அருட்சகோதரி.‌ ரெஜின்ஷா, FMM

8. அருட்சகோதரி.‌ நிர்மலா, FMM

9. அருட்சகோதரி.‌ மெடோனா, FMM

10. அருட்சகோதரி. கில்பர்ட் மேரி

11. அருட்சகோதரி.‌ சிறுபுஷ்பம், FMM

12. அருட்சகோதரி.‌ லிஜி மரியா, DSS

13. அருட்சகோதரி.‌ ஆஷ்லி, DSS

14. அருட்சகோதரி. விஜி பயஸ், (late) DSS

15. அருட்சகோதரி.‌ லிட்டி, DSS

16. அருட்சகோதரி. பெல்சி டோல்பஸ், DSS

17. அருட்சகோதரி. சந்தியா, DSS

18. அருட்சகோதரி.‌ அபிஷா அகஸ்டின், Dominican

19. அருட்சகோதரி.‌ காதரின் புஷ்பா

20. அருட்சகோதரி.‌ ஷியாமா, DMI

வரலாறு:

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பெரிய வளர்ச்சியடைந்த பட்டணங்களில் ஒன்றுதான் ஆதிச்சன்துறை. சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தினால் பூவார் துவங்கி, இரையுமன்துறை வரையிலும், செயற்கையான ஒரு சானல் மார்த்தாண்ட வர்மா மகாராஜாவால் உருவாக்கப்பட்டது. ஆதிச்சன்துறை வழியாக, அந்த சானல் சென்று கொண்டிருந்ததால், ஆதிச்சன்துறை தெற்கு, வடக்கு என்று பிரித்து விட்டது. ஆகவே இரு கரையும் இணையும் விதமாக குறுக்காக ஆதிச்சன்துறை பாலம் கட்டப்பட்டது.

ஆற்றின் இருபக்கமும் மக்கள் வாழத் தொடங்கினர். ஒருகாலகட்டத்தில் தொற்று நோய்கள் பரவவே, கிராமத்தை விட்டு குடும்பம் குடும்பமாக கிழக்கு திசை நோக்கி நகர்ந்து, ஒரு கடற்கரை கிராமத்திற்கு குடிபெயர்ந்தனர். குடிபெயர்ந்த ஊருக்கு புத்தன்துறை என்று பெயரிட்டனர்.

பின்னர் கடல்சீற்றங்களாலும், சமூக விரோதிகளாலும் பற்பல இன்னல்களுக்கு உள்ளான புத்தன்துறை மக்களை, இரவி குட்டிப்பிள்ளை என்ற போர்வீரர்  காப்பாற்றினார். ஆகவே நன்றிக்கடனாக கிராமத்திற்கு இரவிபுத்தன்துறை என்று பெயர் வைத்தனர்.

1542 ஆம் ஆண்டு நற்செய்தி பணிக்காக இந்தியா வந்த புனித பிரான்சிஸ் சவேரியாரின் வருகையே கன்னியாகுமரி மாவட்ட மக்களின் மனமாற்றத்திற்கு காரணமாக அமைந்தது.

பிற்காலத்தில் ஆங்கிலேயர்களின் அதிகாரத்தில் இருந்த போது இங்கு 1860 ஆம் ஆண்டு ஒரு அழகிய ஆலயத்தைக் கட்டிமுடித்து, பாதுகாவலியாக புனித காதரின் ஆஃப் அலெக்சாண்டிரியாவை தேர்ந்தெடுத்துக் கொண்டனர். அதிலிருந்து இந்த ஊர், "சாந்த கத்தரீனாள்" என்னும் சிறப்புப் பெயரில் அழைக்கப்படுகிறது.

1886 ஆம் ஆண்டு ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

தூத்தூர் பங்குடன் இணைந்து இருந்த இரவிபுத்தன்துறை, 1967 ஆம் ஆண்டு மேதகு ஆயர் பீட்டர் பெர்னார்ட் பெரைரா அவர்களால் தனிப் பங்காக உயர்த்தப்பட்டது.

1972 ஆம் ஆண்டு திரு. டென்னிஸ் கணக்கப்பிள்ளை எனும் பெரியவர், புனித சூசையப்பர் குருசடியை தமது பெரும் முயற்சியால் நிறுவினார். தற்போது இந்த குருசடியில் ஏராளமான அற்புதங்கள் நடந்து வருகின்றன. கடந்த வருடம் இந்த திருத்தலத்தின் பொன்விழாவனது மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அருட்பணி. ஜஸ்டின் அலெக்ஸ் பணிக்காலத்தில் ஆலயம் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, அருட்பணி. மரிய டோமினிக் பணிக்காலத்தில் நிறைவு பெற்று, 04.02.1990 அன்று மேதகு ஆயர் Dr. M. சூசை பாக்கியம் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

கலை இலக்கியங்களில் மிகவும் முன்னேறியுள்ள கடற்கரை கிராமங்களில் இரவிபுத்தன்துறையும் ஒன்று.‌

தற்போதைய புதிய ஆலயமானது பங்குத்தந்தை அருட்பணி. ஜெறோம் அமிர்தயான் அவர்களின் தலைமையில் கட்டிமுடிக்கப்பட்டு, 22.12.2021 அன்று கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் மற்றும் மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ் ஆகியோரின் முன்னிலையில், திருவனந்தபுரம் மறைமாவட்ட பேராயர் Dr. M. சூசை பாக்கியம் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. மேலும் இதே நாளில் ஆராதனை ஆலயமும் திறந்து வைக்கப்பட்டது.

சிறப்புகள்:

1. புனித சூசையப்பர் குருசடி

2. ஆராதனை ஆலயம்

3. St. Joseph Middle School

4. Asha Sagar convent

5. Asha Sagar Nursery school 

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. மரியாயின் சேனை

2. திரு இருதய சபை (ஆண்கள் & பெண்கள்)

3. குழந்தை இயேசு சபை (ஆண்கள்)

4. புனித சூசையப்பர் சபை (ஆண்கள் & பெண்கள்)

5. Little Way

6. Jesus Youth

7. Education Development Group

8. மாதா சபை

9. புனித வின்சென்ட் தே பவுல் சபை

10. ஜெபக்குழு

11. பாடகற்குழு

12. பங்குப் பேரவை

13. நிதிக்குழு

14. மறைக்கல்வி

நூலகங்கள்:

1. FASC Library

2. St. Catherine Library

Former priests - St. Catherine's Church, Eraviputhenthurai

Rev. Fr. Andrews (late)

Rev. Fr. Neetany (late)

Rev. Fr. John D Bosco (late)

Rev. Fr. Xavier Alexander (late)

Rev. Fr. Joseph Maria (late)

Rev. Fr. P. X. Pulluvila (late)

Rev. Fr. Justin Alex (late)

Rev. Fr. Micheal Thalaketty (late)

Rev  Fr. George A.G.

Rev. Fr. Maria Dominic Z.

Rev. Fr. Lazer Benedict

Rev. Fr. Rajan A. (Late)

Rev. Fr. George Paul 

Rev. Fr. Stansilaus 

Rev. Fr. Maria Antony

Rev. Fr. Churchill 

Rev. Fr. Tony Hamlet

Rev. Fr. Muthappan Appoli

Rev. Fr. Dyson

Rev. Fr. Aristo

Rev. Fr. Jerome Amirthayyan

வழித்தடம்: மார்த்தாண்டம் -நித்திரவிளை -இரவிபுத்தன்துறை

களியக்காவிளை -சின்னத்துறை. சின்னத்துறையில் இருந்து வலப்புறமாக சுமார் 1 கி.மீ தூரத்தில் இரவிபுத்தன்துறையை அடையலாம்.

பேருந்து தடம் எண் 302: மணக்குடி -இரவிபுத்தன்துறை

Location map: St. Catherine Church വിശുദ്ധ കാതറിൻ ദൈവാലയം 04651 218 053

https://maps.app.goo.gl/9sXwt3B6gVeN6VFj7

தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. ரஜீஸ் பாபு அவர்கள்

வரலாறு மற்றும் புகைப்படங்கள்: ஆலய துணைச் செயலர் திரு. ஃபெரி பெர்னாண்டஸ் அவர்கள்.