216 தூய சவேரியார் ஆலயம், வேம்பார்


தூய சவேரியார் ஆலயம்

இடம் : சவேரியார்புரம்(அக்கரை), வேம்பார்

மாவட்டம் : தூத்துக்குடி
மறை மாவட்டம் : தூத்துக்குடி

நிலை : சிற்றாலயம்
பங்கு : தூய தோமையார் ஆலயம், தென்மயிலை நகர், வேம்பார்

பங்குத்தந்தை : அருட்தந்தை C. ஜார்ஜ் ஆலிபன்

ஞாயிறு திருப்பலி : இல்லை

மாதத்தின் முதல் வியாழக்கிழமை மாலை 06.30 மணிக்கு செபமாலை , சிறப்பு திருப்பலி, அசனம்

திருவிழா : நவம்பர் 24 ம் தேதி கொடியேற்றம் டிசம்பர் 03 ம் தேதி திருவிழா.

தனித்தன்மைகள் :

தூய சவேரியார் மறைபரப்பு பணிக்காக பல்வேறு இடங்களுக்கு செல்கையில், வேம்பார் பகுதிகளில் வந்த போது, தற்போது சிற்றாலயம் இருக்கும் இடத்தில் நின்ற மரத்தடியில் இறைப்பாறி, அருகிலுள்ள ஊற்றிலிருந்து தண்ணீர் அருந்திச் சென்றதாகவும். மேலும் வேம்பார் குளத்தில் விழுந்து இறந்த குழந்தையை தூய சவேரியார் தொட்டு உயிர் கொடுத்தையும் இப்பகுதியில் தூய சவேரியார் செய்த புதுமைகளாக உள்ளன.

1981 ம் ஆண்டு இந்த சிற்றாலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.

வேம்பார் பகுதியை சுற்றிலும் பனை மரங்கள் நிறைந்து காணப்படுவதால், இங்கு தூய்மையான பதநீர், கருப்புக்கட்டி மற்றும் பனை பொருட்கள் கிடைக்கின்றது.

இச்சிற்றாலயத்தை சுற்றிலும் பனை மரங்கள் நிறைந்து காணப்படுவது தனிச்சிறப்பு.