புனித அந்தோனியார் ஆலயம்
இடம்: கரடிக்கல்
மாவட்டம்: ஈரோடு
மறைமாவட்டம்: உதகை
மறைவட்டம்: அந்தியூர்
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித செபஸ்தியார் ஆலயம், நகலூர்
பங்குத்தந்தை: அருள்தந்தை. ஜோசப் அமலதாஸ்
குடும்பங்கள்: 25
அன்பியம்: 1
மாதத்தின் முதல் செவ்வாய் மாலை 06:30 மணிக்கு திருப்பலி, ஆராதனை, தேர்பவனி
திருவிழா: ஜூன் 13-ம் தேதிக்கு பின்னர் வருகிற ஞாயிற்றுக்கிழமை
வழித்தடம்: அந்தியூர் -நகலூர் -பெருமாபாளையம் -கரடிக்கல்
Location map:
வரலாறு:
நகலூர் பங்கின் ஒருபகுதியான கரடிக்கல் ஊரில், 2005 ஆம் ஆண்டு கரடிக்கல் பகுதிவாழ் மக்களின் முயற்சியால் புனித அந்தோனியார் கெபி எழுப்பப்பட்டது.
பின்னர் புனித வேளாங்கண்ணி பாதயாத்திரை குழு (சென்னை) உறுப்பினர்களால் 2008 ஆம் ஆண்டு சிற்றாலயமாக வடிவமைக்கப்பட்டது. தொடர்ந்து நகலூர் பங்கின் கிளைப்பங்காக சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
மாதந்தோறும் முதல் செவ்வாய்க்கிழமைகளில் திருப்பலி, நற்கருணை ஆசீர், வேண்டுதல் தேர் நடைபெறும். தொடர்ந்து அன்பின் விருந்தும் வழங்கப்படுகிறது.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. ஜோசப் அமலதாஸ்