497 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், புங்கவாடி

புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்

இடம் : புங்கவாடி, புங்கவாடி அஞ்சல், ஆத்தூர் தாலுக்கா, 636141

மாவட்டம் : சேலம்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : ஆத்தூர்

நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்குகள் :
1. புனித வனத்து சின்னப்பர் ஆலயம், கடம்பூர்
2. பைத்தூர் (ஆலயம் இல்லை)

பங்குத்தந்தை : அருட்பணி. சேவியர் கலைவாணன், VC

குடும்பங்கள் : 277
அன்பியங்கள் : 12

திருப்பலி நேரங்கள் :
ஞாயிறு : காலை 07.30 மணிக்கு திருப்பலி

திங்கள் முதல் வெள்ளி வரை : காலை 06.30 மணிக்கு திருப்பலி

சனி : மாலை 06.30 மணிக்கு புனித ஆரோக்கிய அன்னை நவநாள், திருப்பலி.

திருவிழா : மே மாதத்தில் மூன்றாம் வாரம்.

மண்ணின் மைந்தர்கள் :
1. அருட்பணி. ஆனந்தராஜ்
2. அருட்சகோதரி. வேளாங்கண்ணி.

வழித்தடம் : ஆத்தூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் மஞ்சினி வழியாக 7 கி.மீ தொலைவில் புங்கவாடி புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது.

Location map : https://maps.google.com/?cid=9220354135432626444

வரலாறு :

150 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது புங்கவாடி புனித ஆரோக்கிய அன்னை ஆலயம். தொடக்கத்தில் இந்தப் பகுதியில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, அனைவரும் இணைந்து புங்கவாடியில் ஒரு சிற்றாலயம் (ஓலையால் வேயப்பட்ட ஆலயம்) கட்டி, புனித ஆரோக்கிய அன்னையை பாதுகாவலியாகக் கொண்டு இறைவனை வழிபட்டு வந்தனர்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஓலையால் வேயப்பட்ட சிற்றாலயத்தை இடித்து விட்டு, புங்கவாடி இறைமக்களின் உதவியால் சிலுவை வடிவிலான ஆலயம் அமைத்து, ஆரோக்கிய அன்னையை வழிபட்டு வந்தனர்.

அன்னையின் அருளால் புங்கவாடியில் கிறிஸ்தவர்கள் அதிக அளவில் குடியேறினார்கள். புங்கவாடி கெங்கவல்லியின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்தது. எனவே, கெங்கவல்லியின் பங்குத்தந்தை அருட்பணி. P. சேவியர் அவர்களின் முயற்சியால் இவ்வாலயம் புதுப்பிக்கப்பட்டு, 11.01.1987 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

புனித ஆரோக்கிய அன்னையை பாதுகாவலாகக் கொண்டு கெங்கவல்லி பங்கின் கிளைப்பங்காக இருந்து வந்த புங்கவாடி, 03.06.2004 அன்று சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களின் தலைமையில் புதிய பங்காக உயர்த்தப்பட்டதுடன், வின்சென்சியன் சபை குருக்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாலயத்தின் முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. செபாஸ்டியன் படிஞாரேக்கூற்று VC அவர்கள் நியமிக்கப்பட்டார்.

இப்பங்கின் முதல் பங்குத்தந்தை அருட்பணி. செபாஸ்டியன் படிஞாரேக்கூற்று VC அவர்களின் முயற்சியால், பங்குத்தந்தை இல்லம் கட்டிமுடிக்கப்பட்டு, 09.03.2004 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

இரண்டாவது பங்குத்தந்தை அருட்பணி. ஜார்ஜி பூனாட் VC அவர்களின் பணிக்காலத்தில் புங்கவாடி பகுதியில் உள்ள மலையில் புனித வனத்து சின்னப்பர் கெபியானது கட்டப்பட்டு, இன்று வரையிலும் மக்கள் சென்று தங்களுடைய வேண்டுதல்களை வைத்து ஜெபித்து, நன்மைகள் பெற்றுச் செல்கின்றனர்.

மூன்றாவது பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்பணி. அலெக்ஸ் வல்லியாம் தடத்தில் VC அவர்கள் பங்கை சிறப்பாக வழிநடத்தி, மக்களை ஆன்மீகத்தில் வளரச் செய்ததுடன், பள்ளிக்கூடம் ஒன்று கட்டப்பட்டது.

தொடர்ந்து நான்காவது பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்பணி. தாமஸ் பாலக்காட் VC அவர்களின் முயற்சியாலும், வின்சென்சியன் சபை உதவியாலும், சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அவர்களின் உதவியாலும், பங்குமக்களின் உதவியாலும், நன்கொடையாளர்களின் உதவியாலும் புதிய ஆலயம் அழகுற கட்டப்பட்டு, 28.05.2015 அன்று சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

இன்றைய பங்குத்தந்தை அருட்பணி. சேவியர் கலைவாணன் VC அவர்களின் முயற்சியாலும், நன்கொடையாளர்களின் உதவியாலும் புங்கவாடி மலைப்பகுதியில் உயிர்த்த ஆண்டவர் கெபியும், புனித சூசையப்பர் கெபியும், புனித வனத்து சின்னப்பர் கெபியும், திருப்பலி காண வசதியாக திருப்பலி மேடையும் கட்டப்பட்டு வருகிறது. மேலும், ஆலய பலிபீடம் புனரமைப்புப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

பங்கில் உள்ள பக்தசபைகள் :
1. மரியாயின் சேனை
2. இளைஞர் அணி
3. பாடகற்குழு
4. பீடச்சிறுவர்கள் இயக்கம்
5. புனித சூசையப்பர் நற்பணி மன்றம்
6. அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள் இயக்கம்

பங்கில் உள்ள கல்விக்கூடம் :
St. Mary R. C. Primary School

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :
1. அருட்பணி. செபாஸ்டியன் படிஞாரேக்கூற்று, VC (2004-2007)
2. அருட்பணி. ஜார்ஜி பூனாட், VC (2007-2010)
3. அருட்பணி. அலெக்ஸ் வல்லியாம் தடத்தில், VC (2010-2013)
4. அருட்பணி. தாமஸ் பாலக்காட், VC (2013-2017)
5. அருட்பணி. சேவியர் கலைவாணன், VC (2017 முதல் தற்போது வரை..)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. சேவியர் கலைவாணன் VC அவர்கள்.