842 அன்னை வேளாங்கண்ணி ஆலயம், KTCநகர்

       

அன்னை வேளாங்கண்ணி ஆலயம்

இடம்: KTC நகர், பாளையங்கோட்டை, திருநெல்வேலி -11

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: பாளையங்கோட்டை

மறைவட்டம்: பாளையங்கோட்டை 

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்கு: புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், பொட்டல்குளம்

பங்குத்தந்தை அருட்பணி. Y. சேவியர் ராஜ்

குடும்பங்கள்: 300

அன்பியங்கள்: 10

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 08:00 மணி

திங்கள், புதன், வெள்ளி திருப்பலி மாலை 06:30 

செவ்வாய், வியாழன் திருப்பலி காலை 06:30   

சனிக்கிழமை மாலை 06:30 மணி நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர் 

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மாலை 06:30 மணி திருப்பலி, நற்கருணை ஆசீர்

மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 06:00 மணிக்கு ஆலயத்தைச் சுற்றி, ஜெபமாலையுடன் அன்னையின் சப்பர பவனி தொடர்ந்து திருப்பலி நற்கருணை ஆசீர்

மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மாலை 06:00 மணி முதல் இரவு 08:30 மணி வரை குணமளிக்கும் வழிபாடு.  இறுதியில் அனைவருக்கும் உணவு வழங்கப்படும்.

திருவிழா: ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 08 ஆம் தேதி வரையிலான பத்து நாட்கள்

வரலாறு:

பாளையங்கோட்டை கே.டி.சி நகர் பகுதியில் வாழ்ந்த கத்தோலிக்க கிறித்தவர்கள், சாந்திநகர் ஆலயத்திற்கு ஆன்மீகக் காரியங்களுக்கு சென்று வந்தனர். 

1996 ஆம் ஆண்டில் KTC நகர் பகுதியில் வாழ்ந்த 30 கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களைக் கொண்டு நிர்வாகக் குழு ஆரம்பிக்கப்பட்டு, 2001 ஆம் ஆண்டில் இம்மக்களின் முழு பங்களிப்புடன் KTC நகரில் ஆலயம் அமைக்க, 58 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. 

வாங்கப்பட்ட நிலத்தில் 2006 ஆம் ஆண்டு சிற்றாலயம் ஒன்று கட்டப்பட்டு, சாந்திநகர் பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது. அப்போது 60 கத்தோலிக்க குடும்பங்கள் வசித்து வந்தனர்.

15.8.2009 அன்று தற்போதைய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 2013 ஆம் ஆண்டு தகர கூரை வேய்ந்த ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.

07.09.2012 அன்று KTC நகர் பங்கு உதயமானது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. அருள்ராஜ் அவர்கள் பொறுப்பேற்று (2012-2018) சிறப்பாக வழிநடத்தினார்.

ஆலயகூரை பழுதுபட்டதால் மழைக்காலங்களில் ஒழுக ஆரம்பிக்கவே, 2018 ஆம் ஆண்டு பங்குத்தந்தையாக பொறுப்பேற்றுக் கொண்ட அருட்பணி. சார்லஸ் அவர்களின் முயற்சி மற்றும் வழிகாட்டலில், KTC நகர் மக்களின் நிதிபங்களிப்புடன்  ஆலயமானது விரிவாக்கம் செய்யப்பட்டு, அழகுற புதுப்பிக்கப்பட்டு 15.08.2022 அன்று பாளை மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனி சாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. இந்த ஆலயமானது கீழ்த்தளத்தில் திருமண மண்டபமாகவும், மேல்த்தளம் ஆலயமாகவும், வேளாங்கண்ணியில் உள்ளது போல இருபுறமும் சாய்வு தளங்களுடன், சிலுவை வடிவில் அழகுற கட்டப்பட்டுள்ளது.

ஆலயத்தின் முன்புறம் ஆரோக்கிய மாதா குருசடி உள்ளது. 

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. மறைக்கல்வி

2. மரியாயின் சேனை

3. பீடப்பணியாளர்கள்

4. பாடகற்குழு

5. வழிபாட்டுக் குழு

6. இளையோர் இளம் பெண்கள் இயக்கம்

7. நிர்வாகக் குழு

பங்கின் பங்குத்தந்தையர்கள்:

1. அருட்பணி. அருள்ராஜ் (2012-2018)

2. அருட்பணி. M. சார்லஸ் (2018-2023)

3. அருட்பணி. Y. சேவியர் ராஜ் (20.05.2023 முதல்...)

தவக்கால திருப்பயணம் செல்ல அருமையான ஆலயம்.

Location map: Our Lady Of Health Catholic Church

https://maps.app.goo.gl/PvomPY9zsiJJqfJC6

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: அப்போதைய பங்குத்தந்தை (2022) அருட்பணி. சார்லஸ் அவர்களின் வழிகாட்டலில் ஆலய நிர்வாகி திரு. மிக்கேல் அவர்கள்.