163 தூய சீயன்னா கத்தரினம்மாள் ஆலயம், கப்பியறை


தூய சீயன்னா கத்தரினம்மாள் ஆலயம்

இடம் : கப்பியறை

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

நிலை : பங்குதளம்
கிளைகள் : இல்லை

பங்குத்தந்தை : அருட்பணி இராபர்ட்

குடும்பங்கள் : 277
அன்பியங்கள் : 10

ஞாயிறு திருப்பலி : காலை 07.30 மணிக்கு

திங்கள், புதன், வியாழன், சனி காலை 06.30 மணிக்கு திருப்பலி.

வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணிக்கு நவநாள் திருப்பலி.

திருவிழா : மே மாதத்தில் பத்து நாட்கள்.

தூய சீயன்னா கத்தரினம்மாள் ஆலயம், கப்பியறை வரலாறு :

வயல்கள், நீர்நிலைகள், பனை மரங்கள், முக்கனிகள், புன்னையும், தென்னையும், கொன்றையும் நிறைந்த கூவரவிளையில் (கப்பியறை) 150 பூர்வீக கிறிஸ்தவ குடும்பங்கள் இருந்தன.

கொள்ளை நோய்களான காலரா, வைசூரி-யுடன் இருளும் இன்னல்கள் செய்த கால கட்டம்.

நோய் நீங்கவும், பயம் போக்கவும் கூடி செபிக்கும் இடமாக கித்தேரியம்மாள் குருசடி உருவானது.

குருசடியை ஒட்டியுள்ள சாவடியில், தஞ்சம் புகுந்த நோயாளிகள் நோய் நீங்கி இறை நம்பிக்கை பெற்றார்கள்.

தொடக்கத்தில் #முள்ளங்கினாவிளை பங்கின் கிளைப் பங்காக கப்பியறை இருந்தது.

பின்னர் பள்ளியாடி பங்கின் கிளையாக இருந்து செயல்பட்டது.

கி.பி 1946 ல் பள்ளியாடி பங்குத்தந்தை அருட்பணி பால் செபாஸ்டின் அவர்களின் முயற்சியாலும், நல்லுள்ளம் கொண்ட பங்கு மக்களின் 17 குடும்பங்களிடமிருந்து இலவசமாக பெற்ற 24 சென்ட் நிலத்தில், குருசடி இருந்த இடத்தில் ஆலயம் கட்ட கருத்துருவாக்கம் பெற்றது.

அத்துடன் ஞாயிறு தோறும் குருசடியில் திருப்பலி நிறைவேற்றப் பட்டு வந்தது.

1949 ல் ஆலயம் கட்ட அடிக்கல் நிறுவப்பட்டு, அருட்பணி வின்சென்ட் பெரைரா அவர்கள் பணிக்காலத்தில், பங்கு மக்களின் அயராத உழைப்புடன் கட்டப்பட்ட ஆலயம் 25-11-1954 ல் அர்ச்சிக்கப்பட்டது.

அருட்பணி பெஞ்சமின் பணிக்காலத்தில் பங்குப்பணியாளர்கள் N. J ஜார்ஜ், R.பெல்லார்மின் ஜியோ ஆகியோர் இக்கிளைப் பங்கின் வளர்ச்சிக்கு பாடுபட்டனர்.

அருட்பணி R. பெல்லார்மின் ஜியோ அவர்களால் வாரம் இருமுறை திருப்பலிகளும் (புதன், ஞாயிறு) பரிசுத்த வார வழிபாடுகளும் சிறப்புற நடைபெற்று வந்தது.

அருட்பணி ஜோக்கிம் அவர்களால் கிளைப்பங்கான கப்பியறையை தனிப்பங்காக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டன.

தனிப் பங்கின் முதல் பங்குத்தந்தையாக 1988 ல் அருட்பணி வெ. மரிய அல்போன்ஸ் அவர்கள் பொறுப்பேற்றார்.

புதிய ஆலயம் கட்ட நிதி திரட்டும் முயற்சியை முதன் முதலில் தொடங்கிய பெருமை அருட்தந்தை ஜி. அல்போன்ஸ் அடிகளாரையே சாரும்.

ஆலய கட்டுமானப் பணிகளுக்கு வெளிநாட்டு உதவியை பெற்றுத் தந்தவர் அருட்தந்தை சேவியர் புரூஸ்.

ஆலயம் அமைந்திட அடித்தளமிட்டு கட்டுமானப் பணிகளை தொடங்கியவர் அருட்பணி போ. வின்சென்ட் .

ஆலயத்தை பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பு மற்றும் நன்கொடைகளால் சிறப்பாக கட்டி முடித்து 27-09-2008 ல் அர்ச்சிப்பு விழாவை எடுத்தவர் அருட்பணி சி. கிறிஸ்டோபர்.

இயேசுவின் திரு இருதய சகோதரிகள் இல்லம் 10-06-1989 ல் நிறுவப்பட்டது.

பங்கின் பாதுகாவலி தூய காதரின் பெயரில் 1919 ல் தொடங்ஙப்பட்ட தொடக்கப்பள்ளி, 1965 ஆம் ஆண்டு அரசு அனுமதி பெற்று அருட்சகோதரிகளின் சிறப்பான பணியில் இனிதே நடத்தப் பட்டு வருகிறது.

FAM IUDICA Dispensary சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பல்வேறு சபைகளும் இயக்கங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தற்போது பங்குத்தந்தை அருட்பணி இராபர்ட் அவர்களின் வழிகாட்டுதலில் சிறப்பாக வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி செல்கிறது.

மண்ணின் இறை அழைத்தல்கள் :

1. அருட்பணி ஐசக் ராஜ்
2.அருட்பணி பிரான்சிஸ் சேவியர்

1. அருட்சகோதரி விஜி பிரான்சிஸ்

கப்பியறை பங்கை வழிநடத்திய அருட்பணியாளர்கள் :

1. Fr வெ மரிய அல்போன்ஸ் (1988-1991)
2. Fr சு சேவியர் புரூஸ் (1991-1992)
3. Fr அ. மரிய ஆரோக்கியம் (1992-1994)
4. Fr மேரி ஜான் (1994-1996)
5. Fr ஜி அல்போன்ஸ் (1996-2001)
6. Fr முனைவர் A. அல்போன்ஸ் (2001-2002)
7. Fr டேவிட் தே. வில்சன் (2002-2004)
8. Fr பொ வின்சென்ட் (2004-2006)
9. Fr சி கிறிஸ்டோபர் (2006-2011)
10. Fr ஞானதாஸ் (2011-2015)
11. Fr R. ஆன்றனி (2015)
12.Fr வென்ஸஸ்லாஸ் (2015-2017)
13.Fr V. இராபர்ட் (தற்போது 2017........)