577 புனித மகதலா மரியாள் ஆலயம், கோதூர்

   

புனித மகதலா மரியாள் ஆலயம் 

இடம் : கோதூர்

மாவட்டம் : நாமக்கல்

மறைமாவட்டம் : சேலம்

மறைவட்டம் : நாமக்கல்

நிலை : கிளைப்பங்கு

பங்கு : புனித பவுல் ஆலயம், இளநகர்

பங்குத்தந்தை : அருள்பணி. செல்வம் பிரான்சிஸ் சேவியர்

குடும்பங்கள் : 12

சனி : மாலை 06.30 மணிக்கு திருப்பலி

திருவிழா : ஜூலை மாதம் 22ம் தேதி.

வழித்தடம் : இளநகரிலிருந்து 10கி.மீ தொலைவில் கோதூர் உள்ளது.

வரலாறு :

கோதூர் கிராமமானது, இளநகர் பங்கின்கீழ் செயல்பட்டு வருகிறது. இளநகர் பங்கில் பணியாற்றிய அன்றைய பங்குத்தந்தை அருள்பணி. I. செல்வரத்தினம் (1968-1969) அவர்களின் பணிக்காலத்தில் கோதூரில் ஆலயம் எழுப்ப திட்டமிடப்பட்டு, ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.

நீண்டகாலமாக வளர்ச்சியை காணாத கோதூர் இறைமக்கள், இன்றைய பங்குத்தந்தை அருள்பணி. செல்வம் பிரான்சிஸ் சேவியர் அவர்களால் வளர்ச்சியைக் கண்டனர். பங்குத்தந்தையின் முயற்சியால் ஆலயம் முழுவதும், பீடமும், சுற்றுவளாகமும் புனரமைக்கப்பட்டு, 24.08.2019 அன்று சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

தகவல்கள் : பங்குத்தந்தை அருள்பணி. செல்வம் பிரான்சிஸ் சேவியர். 

புகைப்படங்கள் : அருள்சகோதரி 

தகவல் சேகரிப்பு : SPB காலனி பங்கின் பீடச்சிறுவன்.