720 புனித இஞ்ஞாசியார் ஆலயம், நக்கனேரி

    

புனித இஞ்ஞாசியார் ஆலயம்

இடம்: நக்கனேரி - சந்தோஷபுரம், இராஜபாளையம், அய்யன் கொல்லங்கொண்டான் அஞ்சல், 626142

மாவட்டம்: விருதுநகர்

மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: ஸ்ரீவில்லிபுத்தூர்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. வேளாங்கண்ணி மாதா ஆலயம், தேசிகபுரம்

2. முரம்பு

பங்குத்தந்தை: அருட்பணி. D. டேவிட், MMI

உதவிப் பங்குத்தந்தை: அருட்பணி. ஏசுதாசன், MMI

குடும்பங்கள்: 132

அன்பியங்கள்: 5

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 08:30 மணிக்கு

நாள்தோறும் திருப்பலி மாலை 06:30 மணிக்கு

சனிக்கிழமை காலை 11:30 மணிக்கு திருப்பணிகள் மற்றும் இறைமக்களுக்காக குணமளிக்கும் வழிபாடு, ஜெபமாலை தொடர்ந்து சிறப்பு திருப்பலி

மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 06:00 மணிக்கு அன்னையின் தேர்பவனி, ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆராதனை

திருவிழா: பிப்ரவரி இரண்டாம் தேதி துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் மாதாவின் திருவிழா

ஜூலை 31-ம் தேதி புனித இஞ்ஞாசியார் திருவிழா

வழித்தடம்: இராஜபாளையம் -தென்காசி வழித்தடத்தில் 6கி.மீ தொலைவில் நக்கனேரி அமைந்துள்ளது

Location map: https://g.co/kgs/SEsXXm

வரலாறு

சுந்தரநாச்சியார்புரம் பங்கின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்த நக்கனேரியில், சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு சுண்ணாம்பு காரையால் ஆலயம் கட்டப்பட்டது. 

1986 ஆம் ஆண்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்டது.

நக்கனேரி ஆலயமானது 31.07.2017 அன்று தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. டேவிட், MMI அவர்கள் பொறுப்பேற்று வழிநடத்தி வருகின்றார்.

துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னை கெபி: 

பங்குத்தந்தை அருட்பணி. டேவிட், MMI அவர்களின் வழிகாட்டலில் மாதாவின் கெபி கட்டப்பட்டு, 12.02.2018 அன்று மேதகு பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

புதுமைகள்:

திருமண வரன் வேண்டி வந்து ஜெபித்தவர்கள், மாதாவின் புதுமையால் குழந்தைச் செல்வம் பெற்றுள்ளனர்.

18.04.2021 அன்று பங்குத்தந்தை அருட்பணி. டேவிட், MMI அவர்கள் திருப்பலி முடிந்து வருகையில், அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தது. அப்போது கையில் ஜெபமாலை (32 வருடங்களாக ஒரே ஜெபமாலையை பயன்படுத்தி வருகின்றார்) இருந்தது. மாதாவிடம் ஜெபித்துக் கொண்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆன்ஜியோகிராம் செய்வதற்கு அனுமதிகாகப்பட்ட வேளையிலும், ஜெபமாலையை கையில் இறுகப் பற்றிக் கொண்டே ஜெபம் செய்தார்.. மாதாவின் புதுமையால் பூரண நலம் பெற்று சாட்சியம் பகிர்ந்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த குடும்பத்தினர் வாழ்க்கையில் எல்லாம் இழந்து துன்ப முடிச்சுகளால் கட்டுண்டு கண்ணீருடன் இவ்வாலயம் வந்துஜெபித்து, மாதாவின் புதுமையால் இழந்த அனைத்தையும் மீண்டும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.

நத்தம்பட்டி -யைச் சேர்ந்த எஸ்ஐ ஒருவர் தீராத நோய் தீர்ந்து சாட்சி பகிர்ந்துள்ளார்.

கால் சுகவவீனத்தால் நடக்க இயலாமல் இருந்தவர், மாதாவின் புதுமையால் நடக்கின்றார்.

குழந்தை வரம் இல்லாத தம்பதியர் குழந்தை வரம் பெற்றுள்ளனர்.

சனிக்கிழமை நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்கவும், முதல் சனிக்கிழமை நடைபெறும் வழிபாடுகளிலும் பங்கேற்று ஆசி பெறவும் சுற்றுப்புறம், வெளியூர்கள் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான இறைமக்கள் நக்கனேரி வருகின்றனர்.

பங்கின் சபைகள் இயக்கங்கள்:

1. பீடச்சிறார்

2. பாடகற்குழு

3. பெண்கள் பணிக்குழு

4. ஆமா அறக்கட்டளை

5. மறைக்கல்வி

புதுமைகள் நிறைந்த நக்கனேரி ஆலயத்திற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்... பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்கள்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. டேவிட், MMI