455 புனித சூசையப்பர் ஆலயம், நாமகிரிப்பேட்டை


புனித சூசையப்பர் ஆலயம்

இடம் : நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அஞ்சல், 637406

மாவட்டம் : நாமக்கல்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : நாமக்கல்

நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்குகள் :
1. புனித செபஸ்தியார் ஆலயம், அரியக்கவுண்டன்பட்டி
2. புனித குழந்தை இயேசு ஆலயம், மூலப்பள்ளிப்பட்டி
3. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், கட்டப்புளியமரம்.
4. மெட்டாலா (ஆலயம் இல்லை)

பங்குத்தந்தை : அருட்பணி. தார்த்தீஸ், CM (இன்று பங்குத்தந்தையின் 7வது குருத்துவ அருட்பொழிவு தினம்)

குடும்பங்கள் : 52
அன்பியங்கள் : 3

ஞாயிறு : காலை 07.15 மணிக்கு திருப்பலி

வாரநாட்கள் : மாலை 07.15 மணிக்கு திருப்பலி.

செவ்வாய் : மாலை 07.15 மணிக்கு புனித அந்தோணியார் நவநாள் திருப்பலி.

புதன் : மாலை 07.15 மணிக்கு புனித சூசையப்பர் நவநாள் திருப்பலி

திருவிழா : மே மாதம் 1ம் தேதி.

வழித்தடம் : நாமக்கல் - இராசிபுரம் - நாமகிரிப்பேட்டை

சேலம் - இராசிபுரம் - நாமகிரிப்பேட்டை.

Location map : https://maps.google.com/?cid=7192948110427889484

வரலாறு :

கி.பி.1750 இல் மைசூர் மிஷன், வளர்ச்சியில் உச்சநிலையில் இருந்தது. அப்போது, தாலகாட் பகுதியில் காக்காவேரி, களங்காணி, தருமபுரி, வலிகம் போன்ற பங்குகளும், பாலகாட் பகுதியில் ஆனெக்கல்லும், பெங்களூரும் இருந்தன.

மேல் குலத்தோருக்காக காக்காவேரி பங்கில் குருவானவர் தங்கியிருந்து வெள்ளாண்டி வலசை (எடப்பாடி), மோகனூர், பாகல்பட்டி, சின்னப்பம்பட்டி, சவரியூர், விரலிக்காட்டூர், சம்பள்ளி, நாயம்பட்டி (இப்போது மேட்டூர் டேமில்) முதலிய ஊர்களின் விசாரனைகளை (நிர்வாகம்) கவனித்தார்.

தாழ்ந்த குலத்தோருக்காக குருவானவர் களங்காணி (கொசவம்பட்டிக்கு கிழக்கே 1கி.மீ தொலைவில் உள்ளது) பங்கில் தங்கிக்கொண்டு சேந்தமங்கலம், கருப்பன்பட்டி, பவித்திரம், வராகூர், மேட்டுப்பாளையம் (பேட்டப்பாளையத்திற்கு அருகில்), நாமகிரிப்பேட்டை, செந்தாரப்பட்டி, நாரியப்பனூர், சேலம் சேரிகள் (அந்தேரிப்பட்டி- அதாவது, அன்னதானப்பட்டி) மற்றும் P.G.R காவல் நிலையம் வீதி, கோட்டை (பழைய பேருந்து நிலையம்), கிச்சிப்பாளையம், ஜான்சன்பேட்டை, அரிசிப்பாளையம் முதலிய ஊர்களின் விசாரனைகளை கவனித்தார்.

1845-1853 காலகட்டத்தில் அருட்பணி. பிரிக்கோ அடிகளாரின் முறையை பின்பற்றி, அருட்பணி. குயோன் (மகிமைநாதர்) தனது பங்கை 5 ஆயத்தங்களாகப் (பங்கு) பிரித்து (1.கோவிலூர், 2.செவ்வாய்பேட்டை, 3.களங்காணி, 4.காக்காவேரி, 5.எடப்பாடி) ஒவ்வொன்றுக்கும் நிரந்தர உபதேசியாரை நியமித்தார். அதில் ஒரு ஆயத்தம் தான் காக்காவேரி.

காக்காவேரி ஆயத்தத்தில் மதியம்பட்டி (ஒரு கோவில்பிள்ளை), நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம், மோகனூர், புதூர் (கொசவம்பட்டிக்கு அருகில், தற்போது நவமங்கலம்), கொசவம்பட்டி ஆகிய ஊர்களின் விசாரணைகளுக்கு ஒரு உபதேசியார் மற்றும் ஒரு பண்டாரத்தை நியமித்தார்.

(குறிப்பு : அக்காலத்தில் உபதேசியார் என்பவர் மேல்குல மக்களிடம் பணி செய்யும் மறை ஆசிரியர். பண்டாரம் என்பவர் தாழ்ந்த குல மக்களிடம் பணி செய்யும் மறை ஆசிரியர்)

1870 -ல் அருட்பணி. புரோஸ்னே அவர்கள் நற்செய்தி அறிவித்து, நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, ஜேடர்பாளையம், புதுப்பாளையம் ஆகிய இடங்களில் 340 பேருக்கு திருமுழுக்கு கொடுத்தார்.

1871 ல் நாமகிரிப்பேட்டையில் முதல் ஆலயம் கட்டப்பட்டது. அருட்பணி. போர் அடிகளும், அருட்பணி. தெய்சதேர் அடிகளும் வாங்கிய நிலத்தில் கட்டப்பட்ட இந்த செபக்கூடம் பின்னர் மீண்டும் கட்டி புதுப்பிக்கப்பட்டது. காக்காவேரி பங்கின் கிளைப் பங்காக சிறப்பாக செயல்பட்டு வந்தது.

1885 ல் அருட்பணி. பிரிக்கோ அடிகளார் நாமகிரிப்பேட்டையில் ஒரு ஆலயமும் (128 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பாழடைந்த ஆலயம் இடிக்கப்பட்டு, அதே இடத்தில் இன்றைய புதிய ஆலயம் கட்டப்பட்டுள்ளது), கொசவம்பட்டியில் (1832ல் அருட்பணி. செசில் நாதர் என்கிற ஞானாதிக்கநாதர் அடித்தளமிட்டதில் பிறகு) புனித சவேரியார் பெயரில் ஒரு ஆலயமும் கட்டினார்.

1926ம் ஆண்டிற்குள் சேந்தமங்கலம் கிறிஸ்தவர்களில் பாதி பேரும், நாமகிரிப்பேட்டை கிறிஸ்தவர்களில் அநேகரும், நீலகிரி, பீர்மேடு (கேரளா) ஆகிய ஊர்களிலுள்ள தோட்டங்களுக்கு சென்றனர்.

நாமகிரிப்பேட்டை புனித சூசையப்பர் ஆலயப் பங்கானது 2011ம் ஆண்டில் காக்காவேரி பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு தனிப்பங்காக உயர்ந்த பிறகு, வின்சென்திய வேத போதக சபை குருக்களிடம் ஒப்படைக்கப் பட்டது.

பின்னர் நாமகிரிப்பேட்டையின் முதல் பங்குத்தந்தை அருட்பணி. ஷாஜி CM அவர்களின் முயற்சியால் புதிய ஆலயம் கட்டப்பட்டு 30.12.2013 அன்று சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சித்துப் புனிதப்படுத்தப் பட்டது.

தற்போதைய பங்குதந்தை அருட்பணி. தார்த்தீஸ் CM அவர்களின் முயற்சியால் 17.04.2018 அன்று பங்குதந்தை இல்லம் கட்டப்பட்டு மேதகு. ஆயர்.செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

பங்கின் பங்குத்தந்தையர்கள் :
1. அருட்பணி. ஷாஜி ஐயப்பன் பறம்பில் C.M (05.10.2011-03.07.2014)
2. அருட்பணி. கஸ்பார், C.M (04.07.2014- 28.04.2017)
3. அருட்பணி. தார்த்தீஸ், C.M (29.04.2017 முதல் தற்போது வரை..)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. தார்த்தீஸ் CM அவர்கள்.