773 புனித அந்தோனியார் ஆலயம், பாறைக்குட்டம்

 

புனித அந்தோனியார் ஆலயம்

இடம்: பாறைக்குட்டம்

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: குறுக்குச்சாலை

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், கொம்பாடி

பங்குத்தந்தை: அருட்பணி. A. லாசர்

குடும்பங்கள்: 11 

ஞாயிறு திருப்பலி காலை: 09:30 மணி 

திருவிழா: மே மாதத்தில் கடைசி சனிக்கிழமை

வழித்தடம்: புளியம்பட்டி -ஓட்டப்பிடாரம் -மணியாச்சி -பாறைக்குட்டம்

Location map: Paraikuttam

https://maps.app.goo.gl/CcMvbG2XxQQZPGnW7

வரலாறு:

ஓட்டப்பிடாரம் -மணியாச்சி சாலையில் அமைந்துள்ள மிகச் சிறிய ஊர் தான் பாறைக்குட்டம். இந்த வட்டாரம் எங்கும் சுண்ணாம்பு பாறைகள் நிறைந்து காட்சி தருகிறது. பாறைகூட்டத்திற்கு நடுவில் சிறிய குளம் ஒன்று உள்ளது. வழக்கு மொழியில் நீர் தேங்கிய சிறிய பகுதியை 'குட்டை' என்று சொல்வார்கள். ஆகவே பாறைகள் சூழ்ந்த குட்டையின் அருகே அமைந்துள்ள ஊர் பாறைக்குட்டை என்றாகி, பின்னர் மருவி "பாறைக்குட்டம்" என்று அழைக்கப்படுகிறது.

மறைப்பணியாளர்களின் தன்னலமற்ற நற்செய்திப் பணிகளால், பாறைக்குட்டம் மக்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு கிறிஸ்தவர்களாகினர். 1910 ஆம் ஆண்டு புனித அந்தோனியாரின் பெயரில் ஒரு சிற்றாலயம் கட்டப்பட்டது.  அந்த காலகட்டத்தில் சுமார் 50 கத்தோலிக்க குடும்பங்கள் கூடிவந்து இறைவனை ஆராதித்து வந்துள்ளனர்.

மிகவும் பழைமையான இந்த ஆலயம் பல்வேறு காலகட்டங்களில் பழுது பார்க்கப்பட்டு, பராமரிக்கப் பட்டுள்ளது. அருட்பணி.‌ பெரியநாயகம் பணிக்காலத்தில் 1957 ஆம் ஆண்டு ஆலயம் புனரமைக்கப்பட்டது.

பின்னர் அருட்பணி. ரெனால்ட் மிசியர் பணிக்காலத்தில் 1987 ஆம் ஆண்டு பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டது.

அருட்பணி. எஸ். பிரான்சிஸ் பணிக்காலத்தில் ஆலய வளர்ச்சிக்கு பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.‌ வறட்சி மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தின் காரணமாக பல குடும்பங்கள் இங்கிருந்து வெளியேறி, வெளியூர்களில் குடிபெயர்ந்தனர். ஆகவே குடும்பங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. 

2004 ஆம் ஆண்டு ஆலயம் மீண்டும் புனரமைக்கப்பட்டு 2005 ஆகஸ்ட் மாதம் மேதகு ஆயர் யுவான் அம்புரோஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. A. லாசர் அவர்கள்

ஆலய வரலாறு:  கொம்பாடி பங்கின் பவளவிழா மலர்