827 புனித அந்தோனியார் ஆலயம், கட்டக்குடி

   

புனித அந்தோனியார் ஆலயம்

இடம்: கட்டக்குடி, உடையார் தெரு, 614013

மாவட்டம்: திருவாரூர்

மறைமாவட்டம்: தஞ்சாவூர்

மறைவட்டம்: பட்டுக்கோட்டை

நிலை: கிளைப்பங்கு

பங்கு: குழந்தை இயேசு ஆலயம், மன்னார்குடி

பங்குப்பணியாளர் அருட்பணி. ஜோசப் மரிய வியான்னி

குடும்பங்கள்: 80

அன்பியம்: 1

மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை மாலை 06:00 மணி சப்பர பவனி, மாலை 07:00 மணி திருப்பலி

திருவிழா: ஜூன் மாதம் 13ஆம் தேதி

மண்ணின் இறையழைத்தல்கள்: 

அருட்சகோதரி.‌ அடைக்கலம்

அருட்சகோதரி. குழந்தையம்மாள்

வரலாறு:

1950 ஆம் ஆண்டில் கட்டக்குடி -உடையார் தெருவில், அதிகமாக வாழ்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் ஆன்மீகத் தேவைக்காக புனித அந்தோனியாரை பாதுகாவலராகக் கொண்டு, ஒரு ஓலைக் குடிசை ஆலயம் கட்டப்பட்டது. 1954 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடும் மழை, காற்றின் காரணமாக கூரை ஆலயம் சேதமடைந்தது. ஆகவே அருகில் இருந்த ஓட்டு வீட்டில் சுரூபங்களை வைத்து இறைவனை வழிபட்டு வந்தனர்.‌

பின்னர் வேளாங்கண்ணி திருத்தலப் பேராலய பொருளாளர் அருட்பணி. J. தேவநேசன் அவர்களின் உதவியுடன், மண்ணால் ஆன ஓடு வேய்ந்த சிறிய ஆலயம் கட்டப்பட்டது.

இந்த ஆலயத்தில் போதிய இடவசதி இல்லாததால், 1988 ஆம் ஆண்டு அருட்பணி. J. தேவநேசன் அவர்கள் கல்சுவர், ஓடு வேய்ந்த கூரை கொண்ட ஒரு ஆலயத்தை கட்டி 19.12.1990 அன்று அருட்பணி. J. தேவநேசன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 

இந்த ஆலயமானது 1990 ஆம் ஆண்டு முதல் மன்னார்குடி புனித சூசையப்பர் ஆலயத்தின் கிளைப்பங்காகவும், 2009 ஆம் ஆண்டு முதல் குழந்தை இயேசு திருத்தலத்தின் கிளைப் பங்காகவும் செயல்பட்டு வருகிறது.

1980 ஆம் ஆண்டு ஆதிச்சபுரம் புனித அந்தோனியார் திருத்தலத்தின் தேர் எடுத்து வந்து, கட்டக்குடி ஆலயத்தில் முதன் முதலில் திருவிழா கொண்டாடப் பட்டது. அதன் பிறகு மக்கள் ஒருங்கிணைந்து மூன்று மகிமைத் தேர் செய்து, ஒவ்வொரு வருடமும் திருவிழாவையொட்டி சிறப்பாக நடத்தி வருகின்றனர். 

2011 ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற அருட்பணி. ஜேம்ஸ் ராஜ் அவர்கள் கட்டக்குடி இறைமக்களை சிறப்புற வழிநடத்தினார்.

2016 ஆம் ஆண்டு அருட்பணி. அருளரசு அவர்கள் கட்டக்குடி இறைமக்களுக்கு பல்வேறு உதவிகள் புரிந்தார். குறிப்பாக கஜா புயல் ஏற்பட்ட காலத்திலும், கொரோனா காலத்திலும் உதவிகள் செய்தார்.  

2021 ஆம் ஆண்டு முதல் அருட்பணி. ஜோசப் மரிய வியான்னி அவர்கள் சிறப்புற வழிநடத்தி வருகிறார்.

தற்போது இந்த ஆலயமானது மிகவும் பழுதடைந்து நிலையில் உள்ளதால், புதிய ஆலயம் அமைக்க உள்ளனர். ஆகவே புதிய ஆலயம் கட்டும் இவர்களது முயற்சிக்கு இறைவன் தாமே வேண்டிய உதவிகள் கிடைத்திட வழிவகைகள் செய்து நிறைவாக ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.

புதுமைகள்:

கட்டக்குடி புனித அந்தோனியாரிடம் வந்து கண்ணீருடன் ஜெபிக்கும் மக்கள் வேண்டிய வரங்களைப் பெறுகின்றனர்.

வழித்தடம்: மன்னார்குடி -காரக்கோட்டை பேருந்து நிறுத்தம். இங்கிருந்து 2கி.மீ தொலைவில் கட்டக்குடி -உடையார் தெரு அமைந்துள்ளது.

Location map: புனித அந்தோனியார் ஆலயம் https://maps.app.goo.gl/n23B5huG5Lbq9L3u8

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை, ஆலய பொறுப்பாளர்கள் மற்றும் ஆலய உறுப்பினர்கள்.