638 புனித செபஸ்தியார் ஆலயம், அய்யம்பட்டி

    

புனித செபஸ்தியார் ஆலயம் 

இடம் : அய்யம்பட்டி, இளையான்குடி தாலுகா 

மாவட்டம் : சிவகங்கை 

மறைமாவட்டம் : சிவகங்கை 

மறைவட்டம் : பரமக்குடி 

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : தூய சகாய அன்னை ஆலயம், சாலைக்கிராமம் 

பங்குத்தந்தை : அருள்பணி. M. ரமேஷ் 

குடும்பங்கள் : 14

திருப்பலி : மாதத்தில் ஒரு தினம் 

வழித்தடம் : RS மங்கலம் - சாலைக்கிராமம் வழித்தடத்தில் அய்யம்பட்டி உள்ளது. 

வரலாறு :

அய்யன்பட்டி என பெயர் விளங்கிய ஊரானது, காலப்போக்கில் அய்யம்பட்டி என்று ஆனது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தப்புக்கொட்டி கிராமத்தை சேர்ந்த நெசவுத் தொழில் செய்யும் முன்னோர்கள் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் சாலைக்கிராமம் பங்கிற்கு உட்பட்ட அய்யம்பட்டி கிராமத்தில் குடியேறினர். காலப்போக்கில் இவர்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு விவசாயத்தை முக்கியத் தொழிலாக கொண்டுள்ளனர். 

சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னர் அய்யம்பட்டி மக்களின் முயற்சியால் தற்போதைய ஆலயத்தின் முன்புறம் மண்சுவர், பனை ஓலை கொண்டு சிறு ஆலயம் கட்டப்பட்டது. இவ்வாலயம் சுமார் 50 ஆண்டுகள் செயல்பட்டு வந்தது. பின்னர் தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்தில் சாலைக்கிராமத்தில் பணிபுரிந்த வெளிநாட்டு அருள்பணியாளரால் சிறு ஆலயம் கட்டப்பட்டது. 

பின்னர் சாலைக்கிராமத்தில் பங்குத்தந்தையாக பணிபுரிந்த அருள்பணி. மரிய பங்கிராஜ் (1974 -1980) அவர்களும், பின்னர் பங்குத்தந்தை அருள்பணி. வின்சென்ட் அமல்ராஜ் (1984-1988) அவர்களும் புதிய ஆலயம் அமைய காரணமாக இருந்தனர். 

கிராம மக்களின் உடல் உழைப்பு, நிதியுதவி, பிற சமய மக்களின் நன்கொடை ஆகியவற்றின் உதவியுடன் ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது. 30 ஆண்டுகளுக்கு பிறகு முகப்பு மண்டபம் அமைக்கப் பட்டது. 

வழிபாட்டு நிகழ்வுகள் :

தினமும் மாலை 07.00 மணிக்கு கரவு செபம். 

தவக்காலங்களில் மிகச் சிறப்பாக செபம், செபமாலை, தவமுயற்சிகள், திருப்பயணங்கள், பக்தி முயற்சிகள் நடைபெறுகின்றன. 

மே மாதம் முழுவதும் சிறப்பாக பக்திமுயற்சிகள் நடத்தப்படுகின்றன. கிறிஸ்து பிறப்பு விழா, இறந்தோர் நினைவுத் திருப்பலி மற்றும் கிராம மக்களின் தேவைகளுக்கேற்ப அழைக்கும் போது பங்குத்தந்தையால் திருப்பலிகள் நிறைவேற்றப் படுகின்றன. 

ஆலயத்தில் உள்ள பங்கேற்பு அமைப்புகள் :

மரியாயின் சேனை 

புனித வின்சென்ட் தே பவுல் சபை

புனித செபஸ்தியார் இளைஞர்/ இளம் பெண்கள் இயக்கம்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் :

பங்குத்தந்தை அருள்பணி. M. ரமேஷ்