301 புனித சூசையப்பர் ஆலயம், மைக்கேல்பட்டி


புனித சூசையப்பர் ஆலயம்.

இடம் : மைக்கேல்பட்டி

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய அடைக்கல அன்னை ஆலயம், வேங்கிடகுளம்

மாவட்டம் : புதுக்கோட்டை
மறைமாவட்டம் : தஞ்சாவூர்

பங்குத்தந்தை : அருட்தந்தை ஜான் போஸ்கோ

குடும்பங்கள் : 200
அன்பியங்கள் : 4

திருப்பலி நேரங்கள் :
ஞாயிற்றுக்கிழமை காலை 06.00 மணிக்கும் மற்றும் புதன்கிழமை மாலை 6:30 மணிக்கும் திருப்பலி நடைபெறும்.

மாதத்தின் முதல் புதன்கிழமை புனித சூசையப்பரின் தேர் பவனியும், அதனைத் தொடர்ந்து சிறப்பு நவநாள் திருப்பலியும், தொடர்ந்து புனித எண்ணெய் பூசுதலும் நடைபெறும்.

திருவிழா :

ஏப்ரல் மாத இறுதியில் கொடியேற்றத்துடன் தொடங்கி மே மாதம் முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்பவனியுடன் சிறப்பாக நடைபெறும்.

திருவிழா திருப்பலி நேரம் :
சனிக்கிழமை மாலை 06:30 மணியளவில் ஆடம்பர பாடற்திருப்பலியும் அதன் பிறகு தேர்பவனியும் நடைபெறும்.

ஞாயிறு காலை 05:30 மணிக்கு முதல் திருப்பலியும் 08:30 மணிக்கு இரண்டாவது திருப்பலியும் நடைபெறும். மாலை தேர்பவனி மற்றும் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.

பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர்.

ஜூலை மாதம் நற்கருணை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

வரலாறு :

புதுக்கோட்டை to ஆலங்குடி சாலையில், புதுக்கோட்டையிலிருந்து சுமார் 15km தொலைவில் கோவிலூர் 4 ரோடு என்ற இடத்திலிருந்து தென்திசையில் சுமார் 1km தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது.

பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட பழைய ஆலயமானது 2008 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டு, 16-01-2009 அன்று பங்குத்தந்தை அருட்தந்தை R.இயேசுராஜ் மற்றும் தஞ்சை ஆயர் மேதகு M.தேவதாஸ் அம்புரோஸ் அவர்களால் புனிதம் செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

பிரிட்டிஷ் கட்டிட கலை முறையில் அமைந்துள்ள இவ்வாலயமானது, புனித சூசையப்பரின் அருள் ஆசீராலும், அப்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை V.பிரான்சிஸ் மற்றும் உதவி பங்குத்தந்தை அருட்தந்தை J.பிரிட்டோ அவர்களின் வழிகாட்டுதல்படியும், ஊர் மக்களின் விடாமுயற்சியினாலும் கட்டிமுடிக்கப்பட்டு, 19-01-2013 அன்று தஞ்சை ஆயர் மேதகு M.தேவதாஸ் அம்புரோஸ் அவர்களால் புனிதம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இக்கிராமமானது இறை அழைத்தலுக்காக 10 அருட்தந்தையர்களையும், 11 அருட் சகோதரிகளையும் தந்துள்ளது.

சூசையப்பரின் நல்லாசியுடன் இக்கிராமம் மென்மேலும் வளர இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்..!