683 புனித சவேரியார் ஆலயம், லாலுகாபுரம்

  
புனித சவேரியார் ஆலயம்

இடம்: லாலுகாபுரம், காந்திநகர் அஞ்சல், 627008

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: பாளையங்கோட்டை

மறைவட்டம்: பாளையங்கோட்டை

நிலை: கிளைப்பங்கு

பங்கு: தூய அடைக்கல மாதா ஆலயம், திருநெல்வேலி டவுன்

பங்குத்தந்தை: அருள்பணி. மை. பா. சேசுராஜ்

குடும்பங்கள்: 55

அன்பியங்கள்: 2

வியாழன் மாலை 06:30 மணிக்கு திருப்பலி

திருவிழா: நவம்பர் மாதம் 06-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை

மண்ணின் இறையழைத்தல்:

அருட்சகோதரர். சாமராய் டேரன்ஸ், SJ

வழித்தடம்: நெல்லை டவுன் -தென்காசி சாலையில் லாலுகாபுரம் அமைந்துள்ளது

வரலாறு:

கி‌‌.பி 19-ம் நூற்றாண்டில்  வீரவநல்லூர் பங்கை தலைமையிடமாகக் கொண்டு, பணிபுரிந்த இயேசு சபை அருள்பணியாளர் ஜூலியஸ் பில்லாஸ் அவர்களால் நிர்வகிக்கப்பட்ட கிராமங்களில், 20 கத்தோலிக்க குடும்பங்களைக் கொண்டு லூலுகாபுரத்தில் ஓலைக்குடில் புனித சவேரியார் ஆலயம் செயல்பட்டு வந்ததாக இயேசுசபை குறிப்புகள் கூறுகின்றன.

இதன் தொடர்ச்சியாக இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிறியதாக ஒரு ஆலயம் கட்டியுள்ளனர். இறைமக்களே ஆலயத்தையும் தொடர்ந்து பராமரித்து வந்துள்ளனர். 

பேட்டை தனிப்பங்கான போது அருள்பணி. ஜார்ஜ் ஜோசப் சே.ச அவர்கள் இந்த ஆலயத்தில் முதன் முதலாக திருப்பலி நிறைவேற்றினார். மேலும் மின் இணைப்பு பெற்றுத் தந்தார்.

அக்டோபர், நவம்பர் மழைக்காலங்களில் கொடிய நோய் தாக்குதல்கள் இருந்ததால், கொடிய நோய்களில் இருந்து பாதுகாக்கும் புனித செபஸ்தியாருக்கு நவநாள் ஜெபமும், ஊரைச் சுற்றி சப்பர பவனியும் நடத்தி வந்தனர். இதனால் இன்றுவரை கொடிய நோய்கள் அண்டாமல் பாதுகாப்பாக வாழ்கின்றனர். எனவே நவம்பர் மாதத்தில் இவ்வாலயத் திருவிழா மிகச் சிறப்பாக இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகிறது.

கி.பி 2003 -ம் ஆண்டு ஆலய நூற்றாண்டு விழாவானது, மேதகு ஆயர் A. ஜூடு பால்ராஜ் D.D, தலைமையில், அப்போதைய பேட்டை பங்குத்தந்தை அருள்பணி. V. K. S. அருள்ராஜ் அவர்களின் முன்னிலையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

2005 ஆம் ஆண்டு நெல்லை டவுன் தனிப்பங்கான போது, லூலுகாபுரம் அதன் கிளைப்பங்கானது.

இந்த சாலையில் (திருநெல்வேலி -குற்றாலம்) பயணிக்கும் பிற சமயத்தை சார்ந்தவர்களும், குறிப்பாக லாரி ஓட்டுநர்கள், கேரளாவிற்கு செல்லும் வாகனங்கள், மற்றும் பல வாகனங்களிலும் செல்பவர்கள், இறங்கி இந்த ஆலயத்தில் ஒரு நிமிடம் ஜெபித்து விட்டு தங்கள் பயணத்தைத் தொடர்கின்றனர்.

தகவல்கள்: பங்குத்தந்தை அருள்பணி. மை. பா. சேசுராஜ்

புகைப்படங்கள்: ஆலய உறுப்பினர்