153 கிறிஸ்து அரசர் ஆலயம், முளவிளை


கிறிஸ்து அரசர் ஆலயம்

இடம் : முளவிளை

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
மறை வட்டம் : முளகுமூடு

நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்கு : புனித சவேரியார் ஆலயம், இளம்பிலாவிளை

பங்குத்தந்தை : அருட்பணி. லூக்காஸ்

குடும்பங்கள் : 650
அன்பியங்கள் : 16

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு

செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி திருப்பலி : காலை 06.30 மணிக்கு.

புதன்கிழமை மாலையில் 06.30 மணிக்கு நவநாள், திருப்பலி.

மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலையில் நற்கருணை ஆராதனை.

திருவிழா : டிசம்பர் மாதத்தில், கிறிஸ்துமஸ் விடுமுறையில் பத்து நாட்கள்.

வழித்தடம் : குளச்சல் -குலசேகரம் பேருந்து எண் 332.
தக்ககலை -கடையாலுமூடு : 13 H
மார்த்தாண்டம் -குலசேகரம் 89K.
அனீஸ் மினிபஸ்
இறங்குமிடம் வெட்டுக்குழி சந்திப்பு.

Location Map :

ஆலய வரலாற்றுப் பதிவுகள் :

தமிழகத்தின் தென்பகுதியான குமரி மாவட்டத்தில் குன்று, நீரோடை, குளங்கள், வயல்கள் என இயற்கை வளம் மிக்க பகுதியே முளவிளை சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் பறக்காவளாகம் அந்தோணியார் குருசடி, இரவிபுரத்துவிளை குருசடி ஆகியன இருந்தன.

* 100 ஆண்டுகளுக்கு முன் 12 கத்தோலிக்கக் குடும்பங்கள், பெரும்பாலான மக்கள் பனைமரங்களை நம்பியே வாழ்ந்தனர். வாழ்வாதாரம் - பனை மரங்களே......

* தொழில்கள் : பனை ஏறுதல், பத்தை அடித்தல், வாழைநார் கூடை பின்னுதல், குச்சித்தையல், கிழங்கு உடைத்தல், ஓலை முடைதல். ஆனி, ஆடி மாதங்கள் வறுமை மக்களை வாட்டியது. வைசூரி, பொக்கன், காலரா போன்ற கொடிய உயிர்க்கொல்லி நோய்கள் மக்களைத் தாக்கிய போது மக்களின் இறை உணர்வு உயர்வு பெற்றது. செபமாலையை ஆயுதமாக எடுத்தனர். எல்லா வீடுகளிலும் செபமாலை செபித்தனர். மக்களின் பயம் போக்க சப்பரப்பவனி நடைபெற்றது. மார்கழி மாதம் பஜனை என்னும் கூட்டுப்பாடல்கள் வீடுகள் தோறும் பாடினர். கிறிஸ்துப் பிறப்பு விழாவுக்காக பெண்கள் முனைப்பாலிகை தயார் செய்து
கொட்டு வாத்தியத்துடன் ஆலயம் கொண்டு வந்தனர்.

* 1923 - இல் குன்றுவிளை D.ஞானமுத்து அவர்களால் தானமாக வழங்கப்பட்ட நிலத்தில் புனித ஜோசப் தொடக்கப்பள்ளி அருட்பணி. தனிஸ்லாஸ் அவர்களால் தொடங்கப்பட்டது.

* 1923-இல் பணி தொபியாஸ் ஓலைக் குருசடியில் முதல் முதலாகத் திருப்பலி நிறைவேற்றினார். அந்நாளில் பாதுகாவலராக புனித பிலோமினாள் இருந்தார். அவர் புனிதர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதால் கிறிஸ்து அரசர் பாதுகாவலர்
ஆக்கப்பட்டார்.

* 1930 மே 26 - கோட்டாறு மறைமாவட்டம் உருவானது. அப்போது கொல்லம் மறை மாவட்டத்திலிருந்து நமது பங்கும் கோட்டாறு எல்லைக்குட்பட்டது.

 *54 சென்ட் நிலம் குன்றுவிளை D. பாக்கியன் & S.வறுவேல் கொடுத்தனர்.

 * 1943 கொல்லம் வருடம் 17-02-1118 - இல் கோட்டாறு ஆயர் T.R. ஆஞ்ஜிசாமி கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். அந்நாளில் மறைமாவட்டத்திலிருந்து RS.4,200/- கொடுக்கப்பட்டது.

*21.04 1950-இல் மணலிக்கரை பங்கு கார்மல் சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது முளவிளை அவர்கள் நிர்வாகத்தின் கீழ் வந்தது.

* 1950-களில் 60 ஓலை மற்றும் ஓட்டு வீடுகள் தாம் உண்டு . மக்கள் உழைப்பில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு 31.05.1959-இல் ஆலயம் ஆயர் T.R.ஆஞ்ஞகசாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

* மறைக்கல்விமன்றம் > கார்மல்சபை அருட்பணியாளர்கள் காலத்திலேயே உருவாக்கப்பட்டது.

* 1980-இல் தொடக்கப்பள்ளியாக 1923 முதல் 57 ஆண்டுகள் செயல்பட்ட பள்ளி நடுநிலைப்பள்ளியாக உயர்வு பெற்றது.

* 1984-இல் அரசு நிதியுதவியுடன் நடுநிலைப்பள்ளி அங்கீகாரம் பெற்றது.

* 21.08.1984 அன்று முளவிளை கார்மல் சபையினரிடம் விடைபெற்று கல்லறவிளை, இலம்பிலாவிளை ஆகிய கிளைப்பங்குகளுடன் தனிப்பங்காக உயர்வு பெற்றது. சுமார் 6 ஆண்டுகளுக்குப்பின் மச்சுவிளை உருவானது. 21.08.1984 - இல் முளவிளை முதல் பங்குப்பணியாளர் பணி. G. அல்போன்ஸ் நியமிக்கப்பட்டார்.

* 24.03.1985 - இல் முதல் அருட்பணிப்பேரவை பணி. G. அல்போன்ஸ் அவர்களால் உருவாக்கப்பட்டது. 1985 - இல் 9 அன்பியங்கள் பணி. G. அல்போன்ஸ் அவர்களால் உருவாக்கம் பெற்றன.

* 1986 - இல் அருட்பணிப்பேரவை அலுவலகம் உருவாக்கப்பட்டது.

* 24.07.1987 - கல்லறைத் தோட்டத்தில் புதிய குருசடி அர்ச்சிப்பு பணி. G.அல்போன்ஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. 24.08.1997 - கோயில் முன் புதிய கெபி முளவிளையின் முதல் பங்குப்பணியாளர் பணி.G.அல்போன்ஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. 26.12.1999 - இல் ஆயர் லியோன் தர்மராஜ் அவர்களால் விரிவான புதிய ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது. பழைய கோயில் கிராம முன்னேற்ற சங்கத்தால் சீரமைக்கப்பட்டு திருமண நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

* 2001 முதல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்து தற்போதைய நிலையை அடைந்தது.

* 01.01.2001 முதல் தொடக்கப்பள்ளி & உயர்நிலைப்பள்ளி இரு தலைமையாசிரியர்கள் நியமனம் பெற்று வளர்ச்சி பெற்றது. 06.02.2002 - இல் தொடக்கப்பள்ளியின் முதல் புதிய கட்டிடம் பணி. ஜாண்குழந்தை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

* 23.06.2002- இல் அருட்பணிப்பேரவை ஒருங்கிணையம் உருவானது.

* 28.07.2002 முதல் மறைக்கல்வி ஒருங்கிணையம் ஏழை மாணவர்கள் கல்விநிதி, மருத்துவ உதவிநிதி, பாலர்சபை, சிறுவழி இயக்கம், இளைஞர் இயக்க வளர்ச்சி நிதி போன்ற வைப்பு நிதிகள் உருவாக்கப்பட்டன. 2003 - இல் தவக்கால ஒறுத்தல் உண்டியல் திட்டம் தொடங்கப்பட்டது. நவம்பர் 2003 Rs.1,00,000/- சீட்டு தொடங்கப்பட்டது.

* 17.06.2005 - இல் பறக்கவிளாகம் அந்தோணியார் குருசடி பணி. ஜோசப் OCD அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது, முதல் செவ்வாய் திருப்பலி நடைபெறுகிறது. சூன் மாதம் 3 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது.

* 07.07.2004 - இல் இரண்டாவது புதிய பள்ளிக் கட்டிடம் ஆயர்.லியோன் தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. 01.05.2006 - இல் இரவிபுரத்துவிளையில் ஏ.சில்வெஸ்டர் தானமாக் கொடுத்த இடத்தில் சவேரியார் குருசடி பணி. வென்சஸ்லாஸ் O.C.D அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. அதில் மே மாதம் 1 நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது.

* 21.08.2009 - பங்கு உதயமாகி வெள்ளி விழா.

* நிலம் 3 ஏக்கர் 38 3/4 சென்ட் - ஆலயம், பள்ளி, கல்லறைத்தோட்டம், காலிமனை என முளவிளை பங்கிற்கு சொந்தமாக உள்ளது.

மக்களின் இன்றைய தொழில்கள் :
1) இரப்பர் பால் வெட்டுதல்
2) முந்திரி ஆலை
3) ஒப்பந்தக்காரர்
4) கட்டிட வேலை
5)சுயதொழில் குெடிசைத்தொழில்
7) சிறுவிவசாயம்
8) அரசு அலவலர்கள் 9)ஆசிரியர்கள்
10) தனியார் நிறுவன வேலை
11) வெளிநாடுகளில் பணி.

பங்கை வளப்படுத்திய பங்கேற்பு அமைப்புகள்
1) திருவழிபாட்டுக்குழு
2) பாடகர் குழு
3) மரியாயின் சேனை
4) வின்சென்ட் - தே பவுல் சபை
5) கிராம முன்னேற்ற சங்கம்
6) சமூக சேவைக்குழு
7) ஆண், பெண் இளைஞர் இயக்கங்கள்
8) இளம் கிறிஸ்தவ தொழிலாளர்கள் இயக்கம்
9) இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்
10) சிறுவழி இயக்கம்
11) பாலர் சபை
12) கல்வி வளர்ச்சிக்குழு
13) தணிக்கைக்குழு
14) பக்த சபைகள் ஒருங்கிணையம்.

21.08.1984 முதல் முளவிளை பங்கை வழிநடத்திய பங்கு அருட்பணியாளர்கள் :
1)பணி. G அல்போன்ஸ் (21.08.1984-27.05.1989)
2)பணி.S.வின்சென்ட் ராஜ் (1989-1991)
3)பணி. A.மரியதாஸ் (1991-1994)
4)பணி. G.அமிர்த ராஜ் (1994-1996)
5)பணி.S.K. ஜோஸ்ராபின்சன் (1996-1999)
6) பெணி.D. சைலட் மணி (1999-2002)
7)பணி. A ஜேசு மரியான் (2002-2004)
8)பணி.M.ஜோசப் வேய்ஸ்ராஜா (2004-2009)
9)பணி. கிறிஸ்துராஜ் (2009-2013)
10)பணி. A ஜோக்கின்ஸ் (2013-2018)
11)பணி. A. லியோ அலெக்சு (23.05.2018 முதல் 2019 வரை)
12. பணி. லூக்காஸ் (2019 முதல் தற்போது வரை)

முளவிளை ஆலயத் திருவிழா பங்கு குடும்ப விழாவாக டிசம்பர் இறுதி வாரம் பாதுகாவலர் கிறிஸ்து அரசருக்கு நன்றியாக பங்கு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
முன்னோர் வரலாற்றில் தடம் பதிப்போம் !
புதிய வரலாறு நாம் இன்று படைப்போம் !
அன்புடன்
முளவிளை
08.07.2018
பணி. லியோ அலெக்சு. அ. (முன்னாள் பங்குத்தந்தை)