206 ஆரோக்கிய அன்னை ஆலயம், ஆரோக்கிய அன்னை நகர்


தூய ஆரோக்கிய அன்னை ஆலயம்

இடம் : ஆரோக்கிய அன்னை நகர் (ஆலம்பாறை)

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

பங்குத்தந்தை : அருட்பணி காட்வின் சௌந்தர்ராஜ்

நிலை : கிளைப்பங்கு
பங்கு : நல்லாயன் ஆலயம், நல்லாயன்புரம் (மலையடி)

குடும்பங்கள் : 75
அன்பியங்கள் : 3

ஞாயிறு திருப்பலி : காலை 08.30 மணிக்கு

வெள்ளிக்கிழமை திருப்பலி : இரவு 07 மணிக்கு

திருவிழா : செப்டம்பர் 08- ம் தேதியை உள்ளடக்கிய எட்டு நாட்கள்.

ஆரோக்கிய அன்னைநகர் ஆலய வரலாறு :

கேரளா மாநிலம் நெய்யாற்றின்கரை மறை மாவட்டம், நெடுவான்விளை பங்கின் கிளைப்பங்காக இருந்த சிறைக்கோணம் தூய அந்தோணியார் ஆலயத்தில், தமிழ்நாடு ஆலம்பாறை பகுதியை சேர்ந்த கத்தோலிக்க மக்கள் உறுப்பினர்களாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.

தமிழக மக்களுக்கு தமிழ் மொழியில் வழிபாட்டை கொடுக்கும் உயரிய நோக்குடன் அப்போதைய கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியூஸ் மற்றும் நெய்யாற்றின்கரை மறை மாவட்ட ஆயரான மேதகு வின்சென்ட் சாமுவேல் - இருவரும் இணைந்து ஆரோக்கிய அன்னைநகர் என்ற இப்பங்கை 14-08-2012 அன்று உருவாக்கினர்.

கிளைப்பங்காக அறிவித்த மறுநாளிலிருந்தே, ஏற்கனவே தூய அந்தோணியார் குருசடி இருந்த 3 சென்ட் நிலத்தை பயன்படுத்தி புதிய ஆலயம் மற்றும் மறைக்கல்வி பயன்பாட்டிற்காக மேல்தளம் அமைக்கப்பட்டு 03-10-2012 அன்று தூய ஆரோக்கிய அன்னையை பாதுகாவலாகக் கொண்டு இயங்கும் 'ஆரோக்கிய அன்னைநகர் பங்கு ' என்ற ஆணை மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் பிறப்பிக்கப்பட்டது.

தற்போது அருட்தந்தை காட்வின் சுந்தர்ராஜ் அவர்கள் பங்குமக்களுடன் இணைந்து திட்டமிட்டு இப்பங்கின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக பாடுபட்டு கொண்டிருக்கிறார்கள் என்பது சிறப்பு வாய்ந்தது.

பளுகல் - மணலி வழித்தடத்தில், மணலியிலிருந்து இடது பக்கமாக 2 கி.மீ தொலைவில் உள்ள ஆலம்பாறையில் இவ்வாலயம் அமைந்துள்ளது.