புனித சந்தனமாதா ஆலயம்
இடம் : தெற்கு ஆறு புளி, வள்ளியூர் (Via), அச்சம்பாடு அஞ்சல், 627117.
மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : தூத்துக்குடி
மறை வட்டம் : வடக்கன்குளம்
நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித அன்னம்மாள் ஆலயம், கிழவனேரி.
பங்குத்தந்தை : அருட்பணி. பிரான்சிஸ் வசந்தன்.
குடும்பம் : ஒன்று
ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமையும் மாலை 06.00 மணிக்கும் திருப்பலி.
திருவிழா : மே மாதம் மூன்றாவது சனிக்கிழமை.
வழித்தடம் : வள்ளியூர் - திருச்செந்தூர் சாலையில், வள்ளியூரிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் அற்புதர் நகர் உள்ளது. இங்கிருந்து இடது பக்கமாக திரும்பி 2 கி.மீ தொலைவில் தெற்கு ஆறு புளி அமைந்துள்ளது.
Location map :
வரலாறு :
புளிய மரங்கள் நிறைந்த அழகிய பகுதியாக இந்தப் பகுதி விளங்கியதால், புளிய மரங்களை அடையாளமாகக் கொண்டு இவ்வூர் வடக்கு ஆறு புளி, தெற்கு ஆறு புளி, நடு ஆறு புளி என மூன்று ஊர்களாக பெயர் பெற்றது.
இவற்றில் தெற்கு ஆறு புளி என்னும் ஊரில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சிறு ஆலயம் கட்டப்பட்டு, புனித சந்தனமாதாவை (புனித அன்னம்மாள்) பாதுகாவலியாகக் கொண்டு, மக்கள் இறைவனை வழிபட்டு வந்தனர்.
கிழவனேரி பங்குத்தந்தையாக அருட்பணி. சூசை மரியான் அடிகளார் அவர்கள் பணியாற்றிய போது 08.01.1992 அன்று புதிய ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது.
அருட்பணி. A. J. ரெக்ஸ் அவர்களின் பணிக்காலத்தில் 12.05.2007 அன்று ஆலய மண்டபம் கட்டப்பட்டது.
தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி. பிரான்சிஸ் வசந்தன் பணிக்காலத்தில் ஜெபமாலை ஜெபிப்பதற்கு வசதியாக, 2015 -ஆம் ஆண்டு ஆலயத்தை சுற்றி ஜெபமாலை நடைமேடை அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 2-ஆம், 4-ஆம் சனிக்கிழமைகளில் நடைபெறும் திருப்பலிக்கு முன்பாக ஜெபமாலை ஜெபிக்கப்பட்டு மக்களின் இறை விசுவாசத்தை ஆழப்படுத்த வழிவகை செய்யப் பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டில் அசனகூடம், கழிப்பிட வசதிகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியன அமைக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2019 ஆம் ஆண்டில் ஆலய தரைப்பகுதிக்கு கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டு மெருகூட்டப் பட்டுள்ளது.
இங்கு வாழ்ந்த மக்களின் பெரும் பகுதியினரும் வேலை நிமித்தமாக அருகில் உள்ள ஊர்களில் குடியேறியதால், தற்போது இங்கு குடும்பங்கள் குறைந்து விட்டன. ஆயினும் திருவிழாவின் போது வெளியூர்களில் குடியேறிய, இப் பங்கு மக்கள் அனைவரும் தவறாது வந்து கலந்து கொண்டு திருவிழாவை மிகச் சிறப்பாக ஒருமித்து கொண்டாடுவது தனிச்சிறப்பு.