தூய செல்வநாயகி அன்னை ஆலயம்
இடம் : எடப்பாடி
மாவட்டம் : சேலம்
மறை மாவட்டம் : சேலம்
மறைவட்டம் : மேட்டூர்
பங்குத்தந்தை : அருட்பணி. பிரான்சிஸ் ஆசைத்தம்பி
குடும்பங்கள் : 527
அன்பியங்கள் : 25
நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்குகள் :
1. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், R. C.ரெட்டியூர்
2. புனித செபஸ்தியார் ஆலயம், சின்னப்பம்பட்டி
3. புனித தெரசம்மாள் ஆலயம், பில்லுக்குறிச்சி
4. புனித வேளாங்கண்ணி மாதா ஆலயம், கொங்கணாபுரம்
குருசடி & கெபி
1. புனித வனத்து அந்தோணியார் குருசடி, சிலுவைகரடு.
2. புனித வனத்து சின்னப்பர் குருசடி, தோப்புக்காடு
3. புனித பெரியநாயகி மாதா கெபி, குன்றத்துமேடு (R. C ரெட்டியூர்)
வழிபாட்டு நேரங்கள் :
ஞாயிறு திருப்பலி : காலை 08.30 மணிக்கு
திங்கள், புதன், வெள்ளி, சனி திருப்பலி : காலை 06.30 மணிக்கு
செவ்வாய் : மாலை 06.30 மணிக்கு புனித அந்தோணியார் நவநாள் திருப்பலி
வியாழன் : மாலை 06.30 மணிக்கு குழந்தை இயேசு நவநாள் திருப்பலி
மாதத்தின் முதல் வெள்ளி : மாலை 06.00 மணிக்கு திருப்பலி, நற்கருணை ஆராதனை.
திருவிழா : புனித வார சனி கொடியேற்றம். ஈஸ்டருக்கு அடுத்த வெள்ளி, சனி, ஞாயிறு பாஸ்கா பெருவிழா மற்றும் தேர்த்திருவிழா.
மண்ணின் இறையழைத்தல்கள் :
1. அருட்பணி. ஜேம்ஸ்
2. அருட்பணி. கோலாஸ்
3. அருட்பணி. கபிரியேல்
4. அருட்பணி. அமல்ராஜ்
5. அருட்பணி. செல்வம் பிரான்சிஸ் சேவியர்
6. அருட்பணி. பீட்டர் சூசைராஜ்
7. அருட்பணி. ஜேம்ஸ் இயேசு
8. அருட்பணி. அருள் நிர்மல்ராஜ்
9. அருட்பணி. அமிர்தம்
10. அருட்பணி. ஆரோக்கியராஜ்
11. அருட்பணி. லூர்துநாதன்
1. அருட்சகோதரி. சின்னம்மாள்
2. அருட்சகோதரி. ஜெயா பவுலின்
3. அருட்சகோதரி. பிரகாசம்
4. அருட்சகோதரி. சவரியம்மாள்
5. அருட்சகோதரி. பேப்பிரிசியா
6. அருட்சகோதரி. வெர்ஜினியா
7. அருட்சகோதரி. ஜோஸ்பின்
8. அருட்சகோதரி. ஆஞ்சலா
9. அருட்சகோதரி. ஜெயபிரிட்டோ
10. அருட்சகோதரி. குளோரி
11. அருட்சகோதரி. ஜெயா
12. அருட்சகோதரி. பாத்திமா ராணி
13. அருட்சகோதரி. அசுந்தா
14. அருட்சகோதரி. நிம்மி
15. அருட்சகோதரி. கிரேசி
16. அருட்சகோதரி. சாந்தி.
வழித்தடம் : சேலம்- மகுடஞ்சாவடி - கொங்கணாபுரம் -எடப்பாடி (பேருந்து நிறுத்தம்- வெள்ளாண்டி வலசு ).
ஈரோடு- சங்ககிரி- எடப்பாடி (பேருந்து நிறுத்தம்- வெள்ளாண்டி வலசு)
ஈரோடு- சங்ககிரி- கொங்கணாபுரம்- எடப்பாடி (பேருந்து நிறுத்தம்- வெள்ளாண்டி வலசு)
Location map : https://maps.google.com/?cid=14213281666694061903
வரலாறு :
அணைக்கரைப் பாளையம் என்னும் இடப்பேரி என்னும் பழங்கால பெயர் பெற்று தற்போது இடப்பாடி (எடப்பாடி) எனப் பெயர் பெற்று சிறந்து விளங்குகிறது.
வெள்ளைக்கார குருக்கள் (ஐரோப்பியர்கள்) வசித்ததால் இவ்வூர் (வெள்ளை + ஆண்டி + வலசை) வெள்ளாண்டி வலசை ஆனது.
கி.பி 17 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், 1623 ஆம் ஆண்டில் மதுரை மறைப்பணி போர்ச்சுக்கீசிய சேசு சபை குருக்களும், பாரீஸ் அன்னிய வேத போதக சபை குருக்களும் தமிழகம் வருகை புரிந்தனர்.
கி.பி 1650 இல் அருட்பணி. புருஎன்சா அவர்கள் ஆலயம் ஒன்றை வெள்ளாண்டி வலசையில் கட்டினார்.
கி.பி 1654 ல் அருட்தந்தை மனுவேல் ஆல்வாராஸ் அடிகள் கொங்குப்பட்டியில் (பழைய அணைக்கரை பாளையம்) இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு நிகழ்ச்சிகளை மூங்கில் பொம்மைகளைக் கொண்டு பாஸ்கா நாடக நிகழ்ச்சி (பொம்மலாட்ட பாஸ்கா நாடகம்) நடத்துத் காட்டினார். இது "முதல் பாஸ்கா" ஆரம்பம். இந்த பாஸ்கா விழா இன்றுவரை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
கி.பி 1640 முதல் கி.பி 1655 வரை டச்சுக்காரர்களுக்கும், போர்ச்சுக்கீசகயர்களுக்கும் இடையே கடற்சண்டை மற்றும் வேதகலாபனை. பல ஆலயங்கள் இடித்து நாசமாக்கப் பட்டன.
கி.பி 1674 இல் புனித அருளானந்தர் வெள்ளாண்டி வலசைக்கு வருகை புரிந்து, பாஸ்கா விழாவில் பங்கேற்றார்.
கி.பி 1676 இல் அருட்தந்தை வின்சென்ட் தூஆர்த்தே கொங்குப்பட்டி பங்குத் தலைமையை வெள்ளாண்டி வலசைக்கு மாற்றினார்.
1676 ல் பெரிய ஆலயமும், அறைவீடும் கட்டப் பட்டது. இவ்வாலயம் மதுரை மிஷனின் பெரிய கோவிலாக கருதப் பட்டது. அப்போது அருட்தந்தை வின்சென்ட் தூஆர்த்தே பணியாற்றினார்.
சேலம், தருமபுரி மறைமாவட்டங்களுக்கு தாய்க்கோவிலாக திகழ்ந்தது.
1678 ல் தீ விபத்தில் ஆலய மேற்கூரை பாதிப்படைந்ததால், சேமித்து வைத்த நெசவு தொழில் பொருட்கள் தீக்கிரையாயின. இந்த இழப்பை தாங்கிக் கொள்ள இயலாத அருட்தந்தை. வின்சென்ட் தூ ஆர்த்தே மரணமடைந்தார்.
1678 ல் இறந்து போன குருக்கள் கல்லறை மீது (அருட்பணியாளர்கள் இஞ்ஞாசி சேவியர், வின்சென்ட் தூஆர்த்தே, பாக்கியநாதர்) மணிமண்டபம் கட்டப் பட்டது. இன்றும் இங்கு வந்து மக்கள் ஜெபித்து நலம் பெற்று வருகின்றனர்.
1679 ல் கல்பாளையம் பங்குத்தந்தை அருட்பணி. ரோட்டரி பங்கை வழிநடத்தி ஆலயத்தை சரிசெய்தார்.
1680 ல் அருட்பணி. இஞ்ஞாசி சேவியர் (புனித அருளானந்தரோடு வந்தவர்) அவர்கள் வெள்ளாண்டி வலையில் பணி செய்து, மறைந்தார்.
(புனித அருளானந்தர் குறிப்பிலிருந்து) மராட்டிய மன்னர் படையெடுப்பு -ஆலயம் அழிப்பு. பின்னர் ஆலயத்தை வலுவுள்ளதாக்க, சூரிய மலைக்காட்டில் உள்ள மரங்களை வெட்டிக் கொள்ள மராட்டிய மன்னர் சாம்போஜியின் மைத்துனரான ஹார்ஜிமஹிர் என்பவரிடம் அனுமதி பெற்று ஆலயத்தை சரி செய்தனர்.
கி.பி 1682 ல் பாஸ்கு திருவிழாவில் திரளான இறை மக்கள் வருகை தந்தார்கள்.
கி.பி 1686 ல் நடைபெற்ற பாஸ்கா விழாவின் போது காலரா பரவியது. 200 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்து போயினர். எனவே சேலம், சின்னப்பம்பட்டி ஆகிய ஊர்களுக்கு பலர் புலம் பெயர்ந்தனர்.
கி.பி 1714 இல் வீரமாமுனிவர் கொண்டு வந்த சுரூபம் தான் சிலுவை நாயகி. இந்த அன்னையைத் தான் இறை மக்கள் தூய செல்வநாயகி என்று அன்போடு அழைக்கின்றனர்.
கி.பி 1794 ல் அருட்தந்தை அப்பேதுபுவா அவர்கள், திப்பு சுல்தான் படையெடுப்பால் சிறை பிடிக்கப்பட்டார். அதே ஆண்டில் தூய விண்ணரசி அன்னை பெருவிழாவைக் கொண்டாடினார். ஏறத்தாழ 3000 மக்கள் திருமுழுக்குப் பெற்றனர். ஆலயம் பழுது பார்க்கப் பட்டது.
கி.பி 1828 ஆம் ஆண்டில் R. C ரெட்டியூரில் ஆலயம் கட்டப்பட்டது. சேலம் மறை மாவட்டத்தின் முதல் அருட்சகோதரி. சின்னம்மாள் துறவு பூண்டார்கள்.
1850 ல் தற்போதுள்ள பாஸ்கா மேடை அமைக்கப்பட்டது.
பல்வேறு அருட்பணியாளர்களின் வழிகாட்டுதலில் 1927 ல் வெள்ளாண்டி வலசையில் ஒரு தொடக்கப் பள்ளி கட்டப் பட்டது. 1942 ல் பில்லுக்குறிச்சியில் ஒரு தொடக்கப் பள்ளியும் துவக்கப் பட்டது.
1947 அருட்பணி. மனுவேல் டிசோசா சுதந்திர தின விழா கொண்டாட வருகை புரிந்தார்.
பாஸ்கா நாடகத்தில் மாற்றம். கி.பி 1950 ல் இறை மக்களால் பேசியும், பாடி, நடித்தும் காட்டப் பட்டது. மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
1976 ல் அருட்தந்தை. செபஸ்தியான் அடிகளார் பணிக்காலத்தில் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டு, கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, 1979 ல் அப்போதைய சேலம் மறை மாவட்ட ஆயர் மேதகு. மைக்கேல் போஸ்கோ துரைசாமி ஆண்டகை புனிதப் படுத்தினார்.
பங்கில் பணிபுரிய கோவை புனித காணிக்கை அன்னை சபை கன்னியர் இல்லம் கட்டப்பட்டு 11.04.1980 ல் அருட்சகோதரி. டாரதி அவர்கள் திறந்து வைத்தார்கள், சேலம் மறை மாவட்ட ஆயர் மேதகு மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்கள் புனிப் படுத்தினார்.
ஆலயத்தில் உள்ள ஒருசில சுரூபங்கள் தந்தத்தால் அழகுற வடிவமைக்கப்பட்டவை ஆகும்.
பாஸ்கா விழா தனிச்சிறப்பு :
இவ்வாலயத்தின் தனிச்சிறப்பு பாஸ்கா விழா என்றால் அது மிகையாகாது. கி.பி 1655 ஆம் ஆண்டு காலகட்டத்திலேயே மூங்கில் பொம்மைகளை (பொம்மலாட்ட பாஸ்கா) வைத்து பாஸ்கா நிகழ்ச்சி நடத்தப் பட்டு வந்தது. இதற்காக பாஸ்கா மேடை ஒன்று கட்டப்பட்டது.
அருட்பணி. P. லூர்து சாமி அடிகளார் பணிக்காலத்தில் 1984 -86 காலகட்டத்தில் ஒலி, ஒளி வடிவில் சிறப்பாக நடத்தப்பட்டு வந்தது. இன்று வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளூர், வெளியூர், பிற மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் மக்கள் கலந்து கொள்வது தனிச் சிறப்பு. இவ்வருடம் (2020) 366 வது ஆண்டு பாஸ்கா விழாவை கொண்டாட இருப்பது குறிப்பிடத் தக்கது.
கெபி வரலாறு :
ஏறத்தாழ 366 ஆண்டுகள் பழைமை வாய்ந்த எடப்பாடி தூய செல்வநாயகி அன்னை ஆலயத்தில் அன்னைக்கென்று ஒரு கெபி கட்ட முடிவு செய்து, இறைமக்களின் நன்கொடைகளாலும், பொதுமக்களின் நன்கொடைகளாலும், வடிவமைப்பு திரு. அடைக்கலசாமி (சிற்பி) அவர்களாலும், வடிவம் கொடுத்தவர் திரு. பேனாரப்பன் அவர்களாலும், அன்றைய பங்குத்தந்தை அருட்பணி. அ. ஜேக்கப் அவர்களின் முயற்சிகளாலும் கட்டப்பட்டு, 10.05.2015 அன்று சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சித்து புனிதப்படுத்தப்பட்டது.
சேலம் மறைமாவட்டத்தின் இறை நம்பிக்கையில் முதல் வித்தாக பெயரும் புகழும் பெற்று விளங்கும் புண்ணிய பூமியில் நமக்கு இறை நம்பிக்கையை கொடுத்த வித்தகருள் ஒருவரான வீரமாமுனிவரின் திருக்கரங்களால் எடப்பாடி வெள்ளாண்டி வலசை மண்ணிற்கு சிலுவை நாயகி அன்னையை எடுத்து வந்தார். அந்த அன்னையின் ஆசியால் எண்ணற்ற செல்வங்களால் வளம் பெற்றனர். செல்வங்கள் கொடுத்த நமது சிலுவை நாயகியை செல்வநாயகி என அன்போடு அழைத்தனர். அத்தகைய சிறப்புமிக்க அருள்பாலிக்கும் அற்புத தாயான தூய செல்வநாயகி அன்னைக்கு அருமையான கெபி மிக அழகோடு அமைந்துள்ளது. இந்த அற்புத கெபியில் அன்றாடம் அற்புதங்கள் ஆயிரம் ஆயிரம் நடந்தேறிக்கொண்டு இருக்கின்றன. புனித அருளானந்தரின் பாதம் பட்ட இந்த புண்ணிய பூமியில் அமைந்துள்ள அற்புத கெபியை நீங்களும் காண...!பெற்றிட...!அனுபவிக்க...!குடும்பத்தோடு அருட்தலத்தை நாடி வாரீர்...! அன்னையின் ஆசீர் பெறுவீர்...!
மாதத்தின் ஒவ்வொரு இரண்டாம் சனிக்கிழமையும் மாலை 06.00 மணிக்கு சிறப்புத்தேர்பவனியும், நவநாள் செபங்களும், குணமளிக்கும் திருப்பலியும் நடைபெறுகிறது.நம்புங்கள்...! செபியுங்கள்...! நலம் பெறுவீர்கள்...!
பங்கில் உள்ள பக்தசபைகள் :
1. பங்குப்பேரவை
2. இளையோர் இயக்கம்
3. பீடப்பணியாளர்கள் இயக்கம்
4. புனித வின்சென்ட் தே பவுல் சபை
5. மரியாயின் சேனை
6. பாலர்சபை
7. அன்பியங்கள்.
பங்கின் கல்வி நிறுவனங்கள் :
1. புனித மரியாள் R. C தொடக்கப்பள்ளி, வெள்ளாண்டி வலசு
2. புனித மரியாள் ஆங்கிலப்பள்ளி, வெள்ளாண்டி வலசு
3. புனித குழந்தை தெரசாள் R. C தொடக்கப்பள்ளி, பில்லுக்குறிச்சி.
பங்கில் இறைப் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :
1623 ல் இயேசு சபை குருக்கள் வருகை
1. அருட்பணி. புருஎன்சா (1650)
2. அருட்பணி. ஆல்வாரால் (1655)
3. அருட்பணி. வின்சென்ட் தூ ஆர்த்தே (1676)
4. அருட்பணி. ரோட்டரி (1679)
5. அருட்பணி. இஞ்ஞாசி சேவியர் (1680)- புனித அருளானந்தரோடு இந்தியா வந்தவர்
6. அருட்பணி. புருஎன்சா
7. அருட்பணி. மனுவேல் தெ பிரிட்டோ
8. அருட்பணி. மனுவேல் ரோட்டரிக்
9. அருட்பணி. டல்மேய்டா
10. அருட்பணி. ரோட்டரிகஸ்
11. அருட்பணி. அந்துவான் புருஎன்சா
12. அருட்பணி. மனுவேல் டி சூசா
13. அருட்பணி. சாய்வா
14. அருட்பணி. அந்தோணி ஜோசப்
15. அருட்பணி. அமிர்த நாதர்
16. அருட்பணி. கரக்குட்டி (எ) யாகப்பநாதர்
17. அருட்பணி. அந்தோணி
18. அருட்பணி. பத்ருவா கோவை
19. அருட்பணி. பிரிக்கோ
20. அருட்பணி. குயோன்
21. அருட்பணி. பேரின்பநாதர்
22. அருட்பணி. ஆயர்லவு வெண்ணான்
23. அருட்பணி. போல்தெத்
24. அருட்பணி. மிக்கேல்நாதர்
25. அருட்பணி. கோடே
26. அருட்பணி. தெஸ் ச தெர்
27. அருட்பணி. தானியேல்
28. அருட்பணி. வான்னே
29. அருட்பணி. அப்பே தூ புவேல்
30. அருட்பணி. போன்னே
31. அருட்பணி. மரிய ஜோசப் நாதர்
32. அருட்பணி. சாமிநாதர்
33. அருட்பணி. பாக்கியநாதர்
34. அருட்பணி. ஞானாதிக்கம்
35. அருட்பணி. சூசை மாணிக்கம்
36. அருட்பணி. அமோதியா
37. அருட்பணி. மனுவேல் ஆல்வாரஸ்
38. அருட்பணி. மிஷேல் (1930-1932)
39. அருட்பணி. ஜீஸ்ஸோ (1932-1933)
40. அருட்பணி. மேத்யூ தலைச்சோரா
41. அருட்பணி. டேபினிங் சிங்கராயர் (1933-1936)
42. அருட்பணி. உர்மாண்ட் (1933-1936)
43. அருட்பணி. ஆண்ட்ரூ வெங்கத்தனம் (1936-1938)
44. அருட்பணி. இக்னேஷியஸ் களத்தியல் (1938-1939)
45. அருட்பணி. G. மெர்சியர் (1939-1940)
46. அருட்பணி. ரோக்கிமேஷம் (1940)
47. அருட்பணி. P. T. ஜோசப் (1944)
48. அருட்பணி. ரெக்கோட்டியார் (1940-1947)
49. அருட்பணி. T. C ஜோசப் (1947-1951)
50. அருட்பணி. பீட்டர் அட்டிப்பட்டி (1951-1954)
51. அருட்பணி. அந்தோணி களத்தியல் (1954-1961)
52. அருட்பணி. K. P. ஜோக்கிம் (1962-1968)
53. அருட்பணி. S. ஆரோக்கியசாமி
54. அருட்பணி. A. X. இருதயம் (1968-1969)
55. அருட்பணி. அல்போன்ஸ் (1970-1972)
56. அருட்பணி. R. சேவியர் (1969-1970)
57. அருட்பணி. கிராஞ்சாரா (1971-1975)
58. அருட்பணி. ஜான் ஜோசப் (1974-1975)
59. அருட்பணி. செபஸ்தியார் (1975-1981)
60. அருட்பணி. ஜெயராஜ் (1981-1984)
61. அருட்பணி. லூர்துசாமி (1984-1986)
62. அருட்பணி. பீட்டர் பிரான்சிஸ் (1987-1989)
63. அருட்பணி. P. சேவியர் (1990-1993)
64. அருட்பணி. M. ஞானபிரகாசம் (1994-1996)
65. அருட்பணி. S. சவரிமுத்து (1996-1997)
66. அருட்பணி. ஜோசப் லாசர் (1998-2001)
67. அருட்பணி. ஜான்போஸ்கோ பால் (2001-2006)
68. அருட்பணி. ஆண்டனி மரியஜோசப் (2006-2008)
69. அருட்பணி. Dr. R. மாசிலாமணி (2006-2010)
70. அருட்பணி. தோமினிக் சாவியோ (2009-2010)
71. அருட்பணி. Dr. A. ஜேக்கப் (2010-2015)
72. அருட்பணி. X. பீட்டர் ஜான்பால் (2015-2017)
73. அருட்பணி. ஜேக்கப் (பொறுப்பு) (2018)
74. அருட்பணி. ராபின்சன் (உதவிப் பங்குத்தந்தை) 2018
75. அருட்பணி. பிரான்சிஸ் ஆசைத்தம்பி (2019 முதல் தற்போது வரை...)
கவலைகள் கண்ணீர் கஷ்டங்களோடு வாழும் அனைவரும், வேண்டும் வரங்களைத் தரும் தூய செல்வநாயகி அன்னையிடம் வாருங்கள்..! அன்னையின் ஆசீரை நிறைவாக பெற்றுச் செல்லுங்கள்..! பாசமுடன் அழைக்கும் பங்குத்தந்தை, பங்கு மக்கள் எடப்பாடி.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. பிரான்சிஸ் ஆசைத்தம்பி.