புனித திருமுழுக்கு யோவான் ஆலயம்
இடம் : திருமனூர், திருமனூர் அஞ்சல், 636202.
மாவட்டம் : சேலம்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : ஆத்தூர்
நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்கு :
புனித மங்கள மாதா ஆலயம், மங்களபுரம்.
பங்குதந்தை : அருட்பணி. சார்லஸ்
குடும்பங்கள் : 52
அன்பியங்கள் : 4
திருப்பலி நேரங்கள் :
ஞாயிறு : காலை 09.30 மணிக்கு திருப்பலி
வாரநாட்கள் : மாலை 06.30 மணிக்கு திருப்பலி.
திருவிழா : ஜூன் 24-ம் தேதி.
திருமனூர் மண்ணின் மைந்தர்கள் :
1. அருட்பணி. தேவசகாயம் (சேசு சபை)
2. அருட்பணி. டோனி இராபர்ட் (சலேசிய சபை)
3. அருட்பணி. அருள் ரொசாரியோ (சலேசிய சபை)
4. அருட்பணி. ஸ்டேன்லி சேவியர்
5. அருட்சகோதரி. ஜெயராக்கினி (குளூனி சபை)
வழித்தடம் : மறைமாவட்ட தலைமை நகரான சேலத்திலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவிலும், மறைவட்ட தலைமை நகரான ஆத்தூரிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவிலும் திருமனூர் உள்ளது.
திருமனூர் ஆலய வரலாறு
நான்கு பக்கமும் மலையால் சூழப்பட்டு, அதன் நடுவிலே அமைந்திருக்கும் எழில்மிகு திருமனூர் ஊரில் உள்ள திருமுழுக்கு யோவான் ஆலய வரலாற்றைக் காண்போம்.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் கிறிஸ்தவம் துளிர் விட்டு, அதன் பலனாக மக்கள் கத்தோலிக்க திருமறையில் இணைந்துள்ளனர். திருச்சிலுவை ஆலயம் கட்டப்பட்டு மக்கள் இறைவனை வழிபட்டு வந்தனர்.
கி.பி.1955ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த அருட்பணி. லீசோன் அவர்கள் திருமனூரில் திருப்பலி நிறைவேற்றி வந்தார்.
கி.பி.1945ம் ஆண்டு முதல் அக்ரஹாரம் பங்கின் கிளைப்பங்காகவும், கி.பி.1969 ஆண்டு முதல் காக்காவேரி பங்கின் கிளைப்பங்காகவும், கி.பி.1975 ஆண்டு முதல் வாழப்பாடி பங்கின் கிளைப்பங்காகவும் செயல்பட்டு வந்தது.
சுமார் 200 ஆண்டுகள் பழைமையான திருச்சிலுவை வடிவிலான ஆலயம் பயன்படுத்த இயலாத நிலையில் இருந்ததால் 1977-78ல் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த அருட்பணி. மரியோ ரொடேசினி அவர்களால் தற்போதுள்ள ஆலயம் அழகிய பொலிவுடன் கட்டப்பட்டு, 02.04.1978 அன்று சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு. மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
மேலும் அவர் பங்குத்தந்தையாக இருந்தபோது மதம் பாராமல் அனைத்து ஏழை மக்களுக்கும் பல்வேறு வகைகளில் உதவி செய்தார். அவர் காலத்தில் பல விவசாயக்கிணறுகளை, கூலியாக கோதுமை வழங்கி வெட்டித்தந்தார். ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பல வகைகளில் உதவினார்.
திருமனூரின் வடக்கு கரட்டில் மண்ணின் மைந்தர் அருட்பணி. தேவசகாயம் அடிகளாரின் குடும்பத்தாரின் மூலம் புனித வனத்து சின்னப்பர் சிற்றாலயம் கட்டப்பட்டு, 27.01.1985 அன்று அன்றைய வாழப்பாடி பங்குத்தந்தை அருட்பணி. அல்போன்ஸ் அடிகளாரால் அர்ச்சிக்கப்பட்டது.
அதே இடத்தில், அன்றைய பங்குத்தந்தை அருட்பணி. தேவசகாயம் அவர்களின் முயற்சியால் ஒரு மிகப்பெரிய திருச்சிலுவை கட்டி முடிக்கப்பட்டு 22.01.1987 அன்று அர்ச்சிக்கப்பட்டது.
06.06.2010 அன்று வாழப்பாடி பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு, திருமனூர் தனிப்பங்காக உதயமானதும், பங்கின் முதல் பங்குதந்தையாக அருட்பணி. ஞானராஜ் அடிகளார் பொறுப்பேற்று சிறப்பாக வழிநடத்தினார்.
மேலும், பங்குத்தந்தை அருட்பணி. அலெக்ஸ் பிரபு அவர்களின் முயற்சியால் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, 01.01.2016 அன்று சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
புனித வனத்து சின்னப்பர் கெபியில் (கரடு), 12 அடி உயரமுள்ள உயிர்த்த ஆண்டவர் திருச்சுரூபமானது, பங்குத்தந்தை அருட்பணி. அலெக்ஸ் பிரபு அவர்களால் அமைக்கப்பட்டு, 17.04.2016 அன்று சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
பங்கில் உள்ள பக்தசபைகள் :
1.பங்குப்பேரவை
2.பெண்கள் மரியாயின் சேனை
3.மறைக்கல்வி குழந்தைகள்
4.இளையோர் இயக்கம்.
பங்கில் பணியாற்றிய அருட்தந்தையர்கள் :
1. அருட்பணி. ஞானராஜ் (2010-2015)
2. அருட்பணி. மதலைமுத்து (2015-2016)
3. அருட்பணி. அலெக்ஸ் பிரபு (2016-2017)
4. அருட்பணி. ஆல்பர்ட் அந்தோணிராஜ் (2017-2019)
5. அருட்பணி. சார்லஸ் (2019 முதல் தற்போது வரை...)
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. சார்லஸ் அவர்கள்.