722 புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலயம், கானப்பாடிபுதூர்

 

புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலயம்

இடம்: கானப்பாடிபுதூர், செட்டியபட்டி அஞ்சல்

மாவட்டம்: திருச்சி

மறைமாவட்டம்: திருச்சி

மறைவட்டம்: மணப்பாறை

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித சவேரியார் ஆலயம், மலையடிப்பட்டி

பங்குத்தந்தை: அருட்பணி. ஜேம்ஸ்

குடும்பங்கள்: 22

மாதத்திற்கு ஒருமுறை திருப்பலி நடைபெறும்

திருவிழா : ஆகஸ்ட் மாதம் 4 -ஆம் தேதி புனித இஞ்ஞாசியார் திருவிழா கொண்டாடப்படுகிறது.

வழித்தடம்: மணப்பாறை -மலையடிப்பட்டி -பிச்சைமணியாரம்பட்டி -செட்டியபட்டி -கானப்பாடிபுதூர்

Location map:

https://maps.app.goo.gl/FzFaKpsXeBy9xTCL6

வரலாறு:

ஊர்ப் பெயர் காரணம் :

திண்டுக்கல் மாவட்டம், சித்தூர் என்னும் கானப்பாடி ஊரில் இருந்து வந்து குடியேறியதால் கானப்பாடி புதூர் என்ற பெயர் பெற்றது.

ஊர்ப் பின்னணி :

கானப்பாடி கிராமத்தில் இருந்து ஒரு குடும்பத்தினர் தம் மூன்று மகன்களுடன் பிழைப்பு தேடி கருங்குளம் என்னும் கிராமத்திலிருந்து வந்து குடியேறினர்.

கூலி வேலை செய்து வாழ்ந்து வந்த அவர்கள் நிலையான வசிப்பிடமின்றி ஊர்ஊராக வேலை தேடி அலைந்துள்ளனர். எங்கும் சரிவர வேலை கிடைக்காததால் இறுதியாக ஊத்துப்பட்டி, இளங்காகுறிச்சியை சுற்றியுள்ள பகுதிகளுக்குச் சென்று கூலி வேலை செய்து பிழைத்து வந்துள்ளனர். வீடுகள் இல்லாமல் கூடாரம் அமைத்து அதில் வாழ்ந்துள்ளனர்.

இன்னாசிமுத்து என்பவர் சிறிது சிறிதாக முன்னேறி தம் மூன்று மகன்களுக்காக மூன்று வீடுகளைக்கட்டி இவ்வூர் உருவாக காரணமாக இருந்துள்ளனர்.

ஊர்ப் பாதுகாவலர் மற்றும் அதற்கான காரணம் :

இவ்வூர் முன்னோர்கள் வந்து முதலில் குடியேறிய ஊரான கருங்குளம் புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வந்த காரணத்தால், அவரையே தங்கள் ஊர் பாதுகாவலராகக் கொண்டனர்.

ஆலய வரலாறு :

முதலில் ஒரு சிலுவை திண்ணை அமைத்து வழிபாடு செய்து வந்தனர். பின்னர் கி.பி.1985-ல் தொடங்கப்பட்ட ஆலய கட்டுமானப் பணியானது, தடைபட்டு மீண்டும் கி.பி.2001-ல் நன்கொடைகள் பெற்று கட்டப்பட்டு இறுதியாக கி.பி. 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மறைவட்ட அதிபர் அருட்பணி. லூர்துராஜ் அவர்களால் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டு வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

வரலாறு: மலையடிப்பட்டி மண்ணின் மைந்தர் அருட்பணி. ஜோசப் அற்புதராஜ், OFM Cap