615 தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், சிவபுராணி


தூய ஆரோக்கிய அன்னை ஆலயம் 

இடம் : சிவபுராணி, திருவிடைமருதூர் தாலுகா, திருலோகி அஞ்சல் 

மாவட்டம் : தஞ்சாவூர் 

மறைமாவட்டம் : கும்பகோணம் 

மறைவட்டம் : கும்பகோணம் 

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : திருஇருதய ஆண்டவர் ஆலயம், சிக்கல் நாயக்கன்பேட்டை

பங்குத்தந்தை : அருட்பணி. A. ஜேம்ஸ் ராஜ் 

குடும்பங்கள் : 21

மாதத்தில் இரண்டு ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு திருப்பலி 

வழித்தடம் : 

திருபனந்தால் -திருலோகி 

பேருந்து எண் : 40, 38

Location map : https://g.co/kgs/HmE6DA

வரலாறு : 

நெற்களஞ்சியமாம் தஞ்சை மாவட்டத்தில், சிவபுராணி என்னும் இயற்கை எழில் சூழ்ந்த கிராமத்தில், அமைந்துள்ள தூய ஆரோக்கிய அன்னை ஆலய வரலாற்றைக் காண்போம்.

சிவபுராணியில் வாழ்ந்த கத்தோலிக்க இறைமக்கள் அம்மன்பேட்டை யில் உள்ள ஆலயத்திற்கு வழிபாடுகளில் பங்கேற்க சென்று வந்தனர். இங்கிருந்து வெகுதொலைவில் உள்ள அம்மன்பேட்டைக்கு சென்று வருவது சிரமமாக இருந்ததால், அருட்பணி. சூசை அருள் அவர்களின் தொடர் முயற்சியில் சிவபுராணியில் நிலம் வாங்கப்பட்டு, அவரது பணிக்காலத்திலேயே ஆலயம் கட்டப்பட்டு, 12.10.1993 அன்று குடந்தை மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. 

பின்னர் சிக்கல் நாயக்கன்பேட்டை தனிப்பங்காக ஆனபோது, சிவபுராணி அதன் கிளைப் பங்காக மாற்றப்பட்டது. 

அருட்பணி. வின்சென்ட் ரோச் மாணிக்கம் பணிக்காலத்தில், கிறிஸ்தவ மக்களை ஒருங்கிணைத்து, மக்களின் கத்தோலிக்க விசுவாசத்தை ஆழப்படுத்தி, ஆலய ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்தார். 

அருட்பணி. யூஜின் K. சவரிமுத்து பணிக்காலத்தில் வெளிநாட்டு நன்கொடை மற்றும் உள்ளூர் நன்கொடையாளர்களின் நிதியுதவியுடன் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, 11.06.2020 அன்று அர்ச்சிக்கப் பட்டது.

தகவல்கள் : பங்குத்தந்தையின் வழிகாட்டுதலில் ஆலய உறுப்பினர்.