709 புனித சவேரியார் ஆலயம், தாண்டவசமுத்திரம்

  

புனித சவேரியார் ஆலயம்

இடம்: தாண்டவசமுத்திரம், கணக்கன்குப்பம் PO, 604151

மாவட்டம்: விழுப்புரம்

மறைமாவட்டம்: புதுவை -கடலூர் உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: செஞ்சி

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித லூர்து அன்னை ஆலயம், கணக்கன்குப்பம்

பங்குத்தந்தை: அருட்பணி. A. ஆரோக்கியதாஸ் 

குடும்பங்கள்: 154

வழிபாட்டு நேரம்:

ஞாயிறு திருப்பலி காலை 06:00 மணிக்கு

திருவிழா: ஏப்ரல் மாதம் 26-ம் தேதி முதல் மே மாதம் 05-ம் தேதி வரை

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. C. ஜான், SJ

2. அருட்பணி. அருள்ஒளி, SJ

3. அருட்பணி. தமாசின் அருளப்பன், SJ

4. அருட்சகோதரி. உத்திரிய மேரி

5. அருட்சகோதரி.‌ ரீட்டா மேரி

6. அருட்சகோதரி. விண்ணரசி, DMI

7. அருட்சகோதரி. பெர்னதத் புனிதா

வழித்தடம்: அனந்தபுரம் -தாண்டவசமுத்திரம்

கணக்கன்குப்பம் -தாண்டவசமுத்திரம்

Location map: https://maps.app.goo.gl/cBLcWo5RuGcH4ZFn6

வலாறு:

முற்காலத்தில் இந்தப்பகுதி தரிசை சரி செய்து தக்கபடி ஏர் நடத்தி ஆண்டு வந்தார்  தாண்டவயராயன் எனும் குறுநில மன்னர். இதனால் தான் தாண்டவசமுத்திரம்  உருவாகியது என்பது வரலாறு. தற்போது தாண்டவசமுத்திரத்தில் உள்ள ஏரியின் கோடியிறங்கும் வழியின் மறுப்பக்கத்தில் உள்ள புஞ்சை நிலங்கள் இதற்கு சாட்சியாக உள்ளன. அங்குள்ள கரடுமுரடான காடுகளைத் திருத்தி, நிலங்களாக மாற்றியதும், கூடி வாழ்ந்ததற்கு அடையாளமாக முதியோர்களை அடக்கம் செய்வதற்குப் பயன்படுத்திய பெரும் பானைகளும்  அகழாய்வில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. 

கிறிஸ்தவ குடும்பம் கணக்கன்குப்பத்தில் முதலில் தலையாரி குடும்பம் என ஆரம்பித்து, பெருந்தல்பட்டான், நக்காதூரான், கல்லாலிபட்டான், கல்பட்டான், கீழ்மலயான், கக்கனூரான், திருவாப்படியான், ஒதியத்தூரான், ஆயந்தூரான், மடவலத்தான், முதலூரான், பாஞ்சாலத்தான், பாலூரான், பவித்திரத்தான், ஆற்காட்டான் என நீண்ட பட்டியலைக் கொடுக்கிறது... 

ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திர காற்றை சுவாசிக்கும் முன்பே கணக்கன்குப்பம் சுதந்திரம் பெற்றுள்ளது. 1846 ஆம் ஆண்டில் கிளைப்பங்காக தெத்து (கணக்கன்குப்பம்) என்னும் பெயரில் உயர்ந்துள்ளது. தாண்டவசமுத்திரம் கணக்கன்குப்பம் ஆலயப்பகுதியாக இருந்து வந்தது.

1866 ம் ஆண்டு வரை அத்திப்பாக்கத்தின் கிளைப்பங்காகவும், அதன்பிறகு நங்காத்தூரின் கிளைப்பங்காகவும் கணக்கன்குப்பம் இருந்து வந்துள்ளது. இந்த கிளைப்பங்கினை அருட்பணி. ஆரோக்கியநாதர் அடிகளார் வழிநடத்தி வந்துள்ளார். வரலாறு காணாத பிண்ணாக்கு பஞ்சம் ஏற்பட்ட வேளையில் அருட்பணி. ஆரோக்கியநாதர் மக்களை பாதுகாத்து வழிநடத்தினார். 1890 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தாண்டவசமுத்திரத்தில் 17 கிறிஸ்தவ குடும்பங்கள் வாழ்ந்தன.

அருட்பணி. மிசான் அடிகள் (1926-1930) தாண்டவசமுத்திரத்தில் ஆலயம் கட்ட ரூ.150 க்கு 15 சென்ட் நிலம் வாங்கி 20.04.1928 அன்று பத்திரப்பதிவு செய்துள்ளார். 08.12.1927 -ல் தாண்டவசமுத்திரம் சவேரியார் பள்ளிக்கூடத்தை கூரை வீட்டில் நடுத்தெருவில் தொடங்கினார்.

அருட்பணி. லூர்துசாமி அவர்கள் 1931 ஆம் ஆண்டில் தாண்டவசமுத்திரத்தில் ஆலயத்தைக் கட்டினார்.

அருட்பணி. மசோ சுவாமிகள் 1938 மற்றும் 1939 ஆம் ஆண்டுகளில் ஆலயத்திற்கு நிலம் வாங்கினார்.

21.12.1946 அன்று தெத்து (கணக்கன்குப்பம்) தனிப்பங்காக மாற்றப்பட்டு. அருட்பணி. A. சூசை அடிகள் முதல் பங்குத்தந்தையாக பணிப் பொறுப்பேற்றார். இதுமுதல் தாண்டவசமுத்திரம் ஆலயமானது, கணக்கன்குப்பத்தின் கிளைப்பங்காக ஆனது. 

அருட்பணி. எம்மானுவேல் மேல்வட்டம் பணிக்காலத்தில் 1957 ஆம் ஆண்டில் கிளைப்பங்குகளான கல்லேரி மற்றும் தாண்டவசமுத்திரத்தில் கடன் திருநாள் திருப்பலி நிறைவேற்ற, பேராயர் அம்புரோஸ் ஆண்டகையிடம் அனுமதி பெற்றார். 1958 ஆம் ஆண்டில் தாண்டவசமுத்திரத்தில் திருக்காட்சி பெருவிழா திருப்பலி நடைபெற்றது. 1959 ஆம் ஆண்டு ஆலய மணியை நிறுவினார்.

அருட்பணி. ஜோசப் காந்தி பணிக்காலத்தில் 7.7.1964 ல் பள்ளிக்கூடத்திற்கு சுற்றுச்சுவர் கட்டினார். 

அருட்பணி. P. அந்தோணிசாமி அவர்கள் ஆலயம் கட்ட நிலம் வாங்கி, உரோமை மறைப்பரப்பு பேராயத்திடம் நிதியுதவி பெற்று புதிய ஆலயத்தைக் கட்டினார். புதிய ஆலயத்திற்கு நிதியுதவி செய்த கர்தினால் சைமன் லூர்துசாமி அவர்களால் 03.01.1989 அன்று ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது.

தொடர்ந்து பணியாற்றி வருகிற கணக்கன்குப்பம் பங்குத்தந்தையர்களின் வழிகாட்டுதலில் வளர்ச்சியை நோக்கி பயணிக்கின்றது தாண்டவசமுத்திரம் இறைசமூகம்.

ஆலயத்தில் உள்ள கல்வி நிறுவனம்: புனித பிரான்சிஸ்  சவேரியார் 

RC ஆரம்பப்பள்ளி, தாண்டவசமுத்திரம்

மாதா கெபி ஒன்றும் இறைமக்களின் ஜெப தேவைகளுக்காக கட்டப்பட்டுள்ளது.

தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. ஆரோக்கியதாஸ்

புகைப்படங்கள்: பங்கு ஆலய உறுப்பினர்