439 புனித சூசையப்பர் ஆலயம், நாட்டார்குளம்


புனித சூசையப்பர் ஆலயம்

இடம் : நாட்டார்குளம், விட்டிலாபுரம் (PO)

மாவட்டம் : தூத்துக்குடி
மறை மாவட்டம் : தூத்துக்குடி
மறைவட்டம் : சாத்தான்குளம்.

நிலை : பங்குத்தளம்

கிளைப் பங்குகள் :
1. புனித மார்ட்டின் தே போரஸ் சிற்றாலயம், நாட்டார்குளம்.
2. புனித அன்னம்மாள் ஆலயம், வசவப்பபுரம்.
3. புனித குழந்தை தெரசாள் ஆலயம், ஆழிகுடி.
4. புனித அந்தோணியார் ஆலயம், முத்தாலங்குறிச்சி.

பங்குத்தந்தை : அருட்பணி. ராபின் ஸ்டான்லி

குடும்பங்கள் : 300
அன்பியங்கள் : 6

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு காலை 06.30 மணிக்கு ஜெபமாலை, 07.00 மணிக்கு திருப்பலி.

தினமும் காலை 05.00 மணி முதல் 06.00 மணி வரை திருமணி ஆராதனை.

06.00 மணிக்கு ஜெபமாலை, 06.30 மணிக்கு திருப்பலி.

தினமும் மதியம் 03.00 மணிக்கு இறை இரக்கத்தின் ஜெபமாலை நடைபெறும். மாலை 07.00 மணிக்கு ஜெபமாலை நடைபெறும்.

புதன் மாலை 06.00 மணிக்கு புனித சூசையப்பர் நவநாள் திருப்பலி.

ஆங்கில மாதத்தின் முதல் புதன்கிழமை மாலை 06.00 மணிக்கு

புனித சூசையப்பரின் தேர் பவனி, ஜெபமாலை பிரார்த்தனை, குணமளிக்கும் திருப்பலி, திவ்ய நற்கருணை ஆசிர்வாதமும் நடைபெறும்.

திருவிழா : மே 14 -ஆம் தேதி முதல் 23 -ஆம் தேதி வரையிலான பத்து நாட்கள்.

மண்ணின் இறையழைத்தல்கள்:
திரு இருதய சபை அருட்சகோதரிகள்:
1. அருட்சகோதரி. சாந்தாள்
2. அருட்சகோதரி. அந்தோணியம்மாள்.

வழித்தடம்:
திருநெல்வேலி- திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் செய்துங்கநல்லூர். இங்கிருந்து 1.5 கி.மீ தொலைவில் நாட்டார்குளம் உள்ளது. ஊரின் மையத்தில் புனித சூசையப்பர் ஆலயம் அமைந்துள்ளது.

Location map : St.Joseph Church Nattarkulam, Tamil Nadu 628809
https://g.co/kgs/EtxYKv

ஆலயவரலாறு :

கி.பி 1899 -ஆம் ஆண்டிலிருந்து 1939 -ஆம் ஆண்டு வரை, ஏறத்தாழ 40 ஆண்டுகள் வெறும் குடிசை கோயிலும் அதன் உட்புறம் சிலுவை வைத்து மக்கள் வழிபட்டு வந்தனர். செய்துங்கநல்லூர் பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது.

கி.பி 1939 ஆம் ஆண்டு அருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்களுடைய பணிக்காலத்தில், புனித சூசையப்பர் சுரூபம் நிறுவப்பட்டு, முதல் கற்கோவில் ஆலயம் கட்டப்பட்டது.

பின்பு இரண்டாவது முறையாக 2000 -ஆம் ஆண்டில் அருட்தந்தை கமிலஸ் அடிகளார் அவர்களுடைய முயற்சியினால் சேதமடைந்த ஆலயமானது பெரிய ஆலயமாக கட்டப்பட்டது.

அருட்தந்தை இருதய ராஜா அடிகளார் அவர்களுடைய பணிக்காலத்தின் போது 23.5.2010 அன்று மேதகு ஆயர் இவோன் அம்புரோஸ் ஆண்டகை அவர்களால் இவ்வாலயமானது செய்துங்கநல்லூர் இல் இருந்து பிரிக்கப்பட்டு தனிப் பங்காக உயர்த்தப் பட்டது.

விவசாயத்தை தொழிலாக கொண்ட இம் மக்கள் புனித சூசையப்பர் வழியாக பெற்ற நன்மைகள் ஏராளம் ஏராளம்.

திருவிழாக்கள் : மே மாதம் 14ஆம் தேதி கொடியேற்றப்பட்டு 23 ஆம் தேதி வரை பத்து நாட்கள் நவநாள் திருப்பலியும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும். 9 மற்றும் 10 ஆம் திருவிழா வின் போது தேர்பவனி நடைபெறும்.

கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, மற்றும் பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப் படுகிறது.

வாரத்தின் இரு நாட்கள் அன்பியம் நடைபெறும்.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :
1. அருட்தந்தை இருதய ராஜா அடிகளார் (2010-2014)
2. அருட்தந்தை இருதயசாமி அடிகளார் (2014-2019)
3. அருட்தந்தை ராபின் ஸ்டான்லி (2019 முதல் தற்போது வரை)

பக்த சபைகள்:
பாலர் சபை
நற்கருணை வீரன் சபை
மாதா சபை
தொன்போஸ்கோ இளையோர் இயக்கம்
புனித வளனார் இளையோர் இயக்கம் 🌷கோல்பிங் இயக்கம்
திருக்குடும்ப சபை.

பங்கில் உள்ள கெபிகள் :
1. லூர்து அன்னை கெபி
2. புனித மிக்கேல் அதிதூதர் கெபி
3. கோடி அற்புதர் புனித அந்தோணியார் கெபி
4. புனித ஆரோக்கிய அன்னை கெபி
5. புனித செபஸ்தியார் கெபி
6. புனித அமலோற்பவ அன்னை கெபி.