373 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், புதுக்குடியிருப்பு


புனித ஆரோக்கியநாதர் ஆலயம்.

இடம் : புதுக்குடியிருப்பு, நாகர்கோவில்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்
மறை வட்டம் : தேவசகாயம் மலை

நிலை : பங்குத்தளம்
கிளைப் பங்கு : புனித குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், அருகுவிளை

பங்குத்தந்தை : அருட்பணி ஜெயச்சந்திர ரூபன்

குடும்பங்கள் : 216
அன்பியங்கள் : 7

ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணிக்கு.

திங்கள், புதன், வெள்ளி திருப்பலி : காலை 06.30 மணிக்கு.

செவ்வாய் மாலை 06.00 மணிக்கு செபமாலை, புனித ஆரோக்கியநாதர் நவநாள், திருப்பலி.

வியாழன் திருப்பலி : மாலை 05.30 மணிக்கு

சனிக்கிழமை திருப்பலி : மாலை 05.00 மணிக்கு.

திருவிழா : ஆகஸ்ட் மாதத்தில் பத்து நாட்கள்.

மண்ணின் மைந்தர்கள் :
Fr. Wellington
Sr. Steffi
Sr. Florence

வழித்தடம் : நாகர்கோவில் WCC Junction.

Google Map : St. Roch Church
Puthukudierupu, Nagercoil, Tamil Nadu 629001
https://g.co/kgs/zVxcGK

வரலாறு :

ஆரம்பத்தில் ஒரு சில குடும்பங்கள் கிறிஸ்துவின் பெயரால் ஒன்று கூடி அருட்பணி பர்ணபாஸ் அவர்களின் முயற்சியால் ஒரு ஆலயத்தைக்கட்டி, அதனை புனித ஆரோக்கியநாதருக்கு அர்ப்பணித்து, கோட்டார் திருச்சபையின் இணைப் பங்காக இருந்தது புதுக்குடியிருப்பு.

பின்னர் மக்களின் ஆன்மீக உணர்வை அதிகரிக்கும் பொருட்டு ஞாயிறு மறைக்கல்வி ஆரம்பிக்கப் பட்டது. அருட்சகோதரிகள் அனைத்து கத்தோலிக்க குடும்பங்களையும் அழைத்து வந்து, இந்த மறைக்கல்வி போதிக்கும் பணியை சிறப்புற செய்து வந்தனர்.

1970 ம் ஆண்டு புதுக்குடியிருப்பு புனித ஆரோக்கியநாதர் ஆலயமானது, கிறிஸ்துநகர் ஆலயத்தின் கிளைப்பங்காக ஆனது.

1975 ல் பங்கின் வெள்ளிவிழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.

2002 ல் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது.

28-02-2005 அன்று கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு லியோன் அ தர்மராஜ் அவர்களால் புதுக்குடியிருப்பு தனிப்பங்காக உயர்த்தப்பட்டு, அருகுவிளை புனித குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயத்தை கிளைப்பங்காகக் கொண்டு சிறப்பு பெற்று விளங்குகிறது.

தொடர்ந்து பங்கில் பணிபுரிந்த பங்குத்தந்தையர்களின் சிறப்பான வழிகாட்டுதலில் சிறப்பாக வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது புதுக்குடியிருப்பு இறைசமூகம்.

கிறிஸ்துநகர் ஆலயத்தின் கிளைப்பங்காக புதுக்குடியிருப்பு இருந்த போது பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் : 

Fr.Joakim (07.08.1970– 02.05.1975) 
Fr. Lucas (02.05.1975 – 28.10.1979) 
Fr. Jesu Marian (28.10.1979 – 26.06.1981) 
Fr. Antony Muthu (26.06.1981–01.01.1985) 
Fr. Servatius (01.01.1985 – 15.05.1986) 
Fr. Joseph Raj (15.05.1986 – 28.05.1990) 
Fr. Julius (28.05.1990 – 22.05.1992) 
Fr. Russel Raj (22.05.1992 –11.05.1996) 
Fr. Nobert Alexander (11.05.1996–05.07.1998) 
Fr. Dominic Kadacha Dhas (05.07.1998 – 14.05.2003) 
Fr. Amala Dhas Densingh (14.05. 2003 – 28.2.2005)

2005 ல் தனிப்பங்கான பின்னர் பணிபுரிந்த பங்குத்தந்தையர்கள் :

Fr. Maria Gladson (28.02.2005 – 25.05.2009) 
Fr. Besky M. Evangelian (25.05.2009 – 18.02.2014) 
Fr.Antony Jagan Aswin (18.02.2014 – 2019)
Fr Jeyachandra Ruban ( 2019 -Till today)