825 தூய அடைக்கல மாதா ஆலயம், குலப்பெண்பட்டி

         

தூய அடைக்கல அன்னை ஆலயம்

இடம்: குலப்பெண்பட்டி

பல்லவராயன் பத்தை அஞ்சல்,

கரம்பக்குடி தாலுகா.

மாவட்டம்: புதுக்கோட்டை

மறைமாவட்டம்: தஞ்சாவூர்

மறைவட்டம்: புதுக்கோட்டை

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித வளனார் ஆலயம், கோட்டைக்காடு

பங்குத்தந்தை அருட்பணி. செங்கோல், MMI

குடும்பங்கள்: 217

அன்பியங்கள்: 7

ஞாயிறு திருப்பலி: காலை 07:30 மணி

மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலையில் தேர்பவனி, ஜெபமாலை, திவ்ய நற்கருணை ஆசீர், திருப்பலி தொடர்ந்து அன்பின் விருந்து.

திருவிழா: உயிர்ப்பு பெருவிழாவைத் தொடர்ந்து வரும் 40-வது நாள்

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. பெர்னார்ட், தஞ்சாவூர் மறைமாவட்டம்

2. அருட்பணி. வின்சென்ட், தஞ்சாவூர் மறைமாவட்டம்

3. அருட்பணி. ஜஸ்டின், MSFS

4. அருட்பணி. ஆன்றோ ரீகன், MMI

5. அருட்பணி. பெர்னாட்ஷா, MMI

6. அருட்பணி.‌ பிரவின், தஞ்சாவூர் மறைமாவட்டம்

7. அருட்பணி. ஜெரால்டு, MSFS

8. அருட்சகோதரி. மெல்கி

9. அருட்சகோதரி. ஜெயா

10. அருட்சகோதரி.‌ தெரசா

11. அருட்சகோதரி. சோபியா

வரலாறு

இயற்கை எழில் கொஞ்சும் அழகிய ஊர் குலப்பெண்பட்டி. இவ்வூரில் அமைந்துள்ள தூய அடைக்கல மாதா ஆலய வரலாற்றைக் காண்போம்....

இயேசு சபை குருக்களால் இப்பகுதியில் கத்தோலிக்க விதை விதைக்கப்பட்டு, இங்கிருந்து சுமார் 60கி.மீ தொலைவில் உள்ள பாதிரக்குடி பங்கு ஆலயத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. 

அக்காலத்தில் இங்கு வாழ்ந்த பெண்கள் மிகுந்த கத்தோலிக்க விசுவாசிகளாகவும், பண்பாளர்களாகவும் விளங்கியதால் 'குலப்பெண்பட்டி' என்று இவ்வூர் அழைக்கப்பட்டது. 

கி.பி பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் குலப்பெண்பட்டியில் பனை ஓலை வேய்ந்த சிறு ஆலயம் இருந்ததாகவும், ஏலாக்குறிச்சியில் பணிபுரிந்த சேசுசபை குருவான வீரமாமுனிவர் அவர்களால் இந்த ஆலயத்திற்கு தூய அடைக்கல மாதாவின் சுரூபம் வழங்கப்பட்டதாகவும், பனையோலை ஏடுகளின் வழியாக அறிகிறோம்.

1898 ஆம் ஆண்டு கோட்டைக்காடு பங்கு உருவான போது குலப்பெண்பட்டி அதன் கீழ் வந்தது.

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பனை ஓலை ஆலயம் மாற்றப்பட்டு, ஓடு வேய்ந்த சிறிய ஆலயம் கட்டப்பட்டு, தினமும் மாலை வேளையில் ஜெபம் செய்து இறைவனை வழிபட்டு வந்தனர். 

பின்னர் 1976 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த ஆலயம் அமைக்கப்பட்டது. 

பழைய ஆலயமானது மிகவும் பழுதடைந்து போனதால் அது அகற்றப்பட்டு, தற்போது உள்ள புதிய ஆலயத்திற்கு 17.05.2012 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, குலப்பெண்பட்டியைச் சேர்ந்த வெளிநாட்டில் பணிபுரியும் மக்கள் மற்றும் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடன் அழகுற கட்டப்பட்டு, 27.04.2016 தஞ்சை மறைமாவட்ட ஆயர் மேதகு M. தேவதாஸ் அம்புரோஸ் மற்றும் கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் மேதகு F. அந்தோணிசாமி, ஆகியோரால் அர்ச்சிக்கப்பட்டது.

புதுமைகள்:

குழந்தை பேறின்றி தவிப்போர் சனிக்கிழமைகளில் இவ்வாலயம் வந்து, விளக்கேற்றி ஜெபித்து செல்கின்றனர். பின்னர் குழந்தை வரம் பெற்று ஆலயம் வந்து சாட்சியம் பகிர்கின்றனர். மேலும் திருமண வரன் தடைபடுவோர், திருமண பாக்கியம் பெறுகின்றனர். இவ்வாறு எண்ணற்ற புதுமைகள் அடைக்கலம் மாதாவின் கருணையால் குலப்பெண்பட்டி ஆலயத்தில் நிகழ்ந்து வருகின்றது.

புனித வனத்து அந்தோனியார் சிற்றாலயம்:

ஓடு வேய்ந்த  புனித வனத்து அந்தோனியார் ஆலயமானது, குலப்பெண்பட்டி பிரதான சாலை ஓரத்தில் ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு, 24.08.1999 அன்று தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் மேதகு Dr. M. தேவதாஸ் அம்புரோஸ் அவர்களால் புனிதம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

சிற்றாலயத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலையில் ஜெபம் செபிக்கப்படுகிறது. தேவைப்படும் நேரங்களில் திருப்பலி நடைபெறுகிறது. புனித வனத்து அந்தோனியார் சிற்றாலயத் திருவிழாவானது ஆவணி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை. (ஆகஸ்ட் மாதத்தில்)

,குலப்பெண்பட்டி வாருங்கள்.... அடைக்கலம் தரும், அடைக்கல மாதாவின் ஆசி பெற்றுச் செல்லுங்கள்...

வழித்தடம்: புதுக்கோட்டை -கரம்பக்குடி மழையூர் வழி, குலப்பெண்பட்டி பேருந்து நிறுத்தம்.

Location map: https://maps.app.goo.gl/kGfT4z29RqQ8GUb96

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: ஆலய உபதேசியார், மண்ணின் மைந்தர் அருட்பணி. வின்சென்ட் மற்றும் ஆலய உறுப்பினர்கள்