117 தூய பாத்திமா அன்னை ஆலயம், கல்லுக்கூட்டம்


தூய பாத்திமா அன்னை ஆலயம்

இடம் : கல்லுக்கூட்டம்.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்
பங்குத்தந்தை : அருட்பணி ஜோக்கின்ஸ்

நிலை : பங்குதளம்
கிளை : தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், பிள்ளவிளை.

குடும்பங்கள் : 244
அன்பியங்கள் : 7

ஞாயிறு திருப்பலி : காலை 08.30 மணிக்கு.

திருவிழா : மே மாதத்தில்.

வரலாறு

தூய பாத்திமா அன்னை ஆலயம் அமைந்திருக்கும் இடம், தொடக்கத்தில் ஆலயமாக இருந்த இடமன்று. கல்லுக்கூட்டம் பகுதி கிறிஸ்தவர்கள் தங்கள் ஆன்மீகத் தேவைக்காக மாங்குழி பங்கு சமூகத்தை நாடிச் சென்று கொண்டிருந்த காலத்தில் 1957 ம் ஆண்டு இந்த இடம் பஜனை தொடங்கும் இடமாக உருவாக்கப் பட்டது. குறுகிய காலத்திலேயே அது ஒரு சிறிய குருசடியாக மாற்றப்பட்டது. காலஞ்சென்ற வேலூர் மறை ஆயர் மேதகு அந்தோணிமுத்து அவர்கள் மாங்குழியில் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய போது இக் குருசடியில் முதன் முதலாக திருப்பலி நிறைவேற்றினார். அதனைத் தொடர்ந்து திருமணத் திருப்பலியும், அடக்கத் திருப்பலியும் நிறைவேற்றி வந்ததுடன் ஆண்டு தோறும் மூன்று நாட்கள் திருவிழாவும் நடத்தப்பட்டது.

1960 ம் ஆண்டு முதல் மாங்குழி பங்கின் கிளைப் பங்காக செயல்படத் துவங்கியது. 1963 ம் ஆண்டு முதல் கிறிஸ்து பிறப்பு மற்றும் உயிர்ப்புத் திருப்பலியும் குருசடியில் நடைபெற்றது.

1964 ம் ஆண்டு கோணங்காடு பங்கு தனிப்பங்காக உருவானவுடன் கல்லுக்கூட்டம் அதன் கிளையானது. 1964 ம் ஆண்டு இம் மண்ணின் மைந்தரான காலஞ்சென்ற அருட்பணி இலாசர் அவர்களால் இன்றைய இவ்வாலத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஆலயத்திற்கு தேவையான மரங்களை அருட்பணி இலாசர் அவர்கள் தந்து உதவினார்கள். ஆலய கட்டுமானப் பணிகளுக்கு அன்றைய ஆயர் அவர்கள் இருதவணையாக ரூ 115447 ஐ தந்து உதவினார்கள். இவ்வுதவிகளுடன் ஊர் மக்களுடைய நன்கொடைகளையுப் சேர்த்து ஆலயமும், அருட்பணியாளர் இல்லமும் கட்டி முடிக்கப்பட்டு 17-05-1987 அன்று மேதகு ஆயர் மரியானூஸ் ஆரோக்கியசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

தற்போதைய ஆலயத்திற்கு 62 சென்ட் நிலமும், பொதுக்கல்லறை தோட்டத்திற்கு 41 சென்ட் நிலமும் உள்ளன. சத்துணவுக்கூடம் அமைக்க 2 சென்ட் நிலம் ஆலய நிலத்திலிருந்து கொடுக்கப் பட்டது. தற்போது அது வேறு இடத்தில் நிலம் கொடுக்கப்பட்டு மாற்றப் பட்டது.

கல்லுக்கூட்டம் பங்கில் 1960 முதல் மறைக்கல்வியும், 1965 முதல் கிறிஸ்தவ வாழ்வு சமூகமும், 1970 முதல் வின்சென்ட் தே பவுல் சங்கமும் செயல்பட்டு வருகின்றன. 1990 ல் திருவழிபாட்டுக் குழுவும், 1994 ல் அன்பியங்களும், 1999 ல் ஏனைய பிற இயக்கங்களும் உருவாக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கோணங்காடு பங்கின் கிளைப் பங்காக இருந்த கல்லுக்கூட்டம் பங்கானது, தனிப்பங்காக 29-01-2008 ல் மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் உயர்த்தப் பட்டது. அதன் பிறகு தூய பாத்திமா அன்னை அரங்கமும், தூய பாத்திமா அன்னை குருசடியும், புதிய பங்குத்தந்தை இல்லமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

தனிப்பங்காக மாறிய பிளகு பணியாற்றிய அருட்தந்தையர்கள்:

1. அருட்பணி மரியதாசன்
2. அருட்பணி ஆண்ட்ரூஸ்
3. அருட்பணி ஜோக்கின்ஸ் (தற்போது)

பங்கில் செயல்பட்டு வரும் அமைப்புகள்:

பாலர்சபை
சிறுவழி இயக்கம்
இளம் கிறிஸ்தவ மாணவ இயக்கம்
இளையோர் இயக்கம்
கிறிஸ்தவ வாழ்வு சமூகம்
வின்சென்ட் தே பவுல் சங்கம்
கைகள் இயக்கம்
அடித்தள முழு வளர்ச்சி சங்கம்
கோல்பின் இயக்கம்
மறைக்கல்வி
அன்பிய ஒருங்கிணையம்
பக்த சபை ஒருங்கிணையம்
வழிபாட்டுக் குழு
பங்கு அருட்பணிப் பேரவை
நிதிக்குழு.

மேலும் தூய பாத்திமா அன்னை பைனான்ஸ் செயல்படுகிறது. பங்கு மக்களின் சேமிப்பு பண்பை வளர்க்க சிறுசேமிப்பு திட்டமும் சிறப்பாக செயல்படுகிறது.

மண்ணின் இறை அழைத்தல்கள் :

(விண்ணில் மலர்ந்த மண்ணின் மலர்கள்)

Fr. இலாசர்
Sis . மரிய அலங்காரம்
Sis எபிசேபியா மேரி
Sis . மிக்கேலாள்
Sis. திபோர்சியுஸ்
Sis. இம்மாகுலேட் மேரி.

தற்போது இறைபணியாற்றுகின்ற மண்ணின் மைந்தர்கள் :

Fr. ஜான்
Fr. ஜெரால்டு ஜஸ்டின்
Fr. பிரைட் சிம்சராஜ்
Fr. ஜோண்ஸ்
Fr. வின்சோ ஆன்றனி
Sis. அமலா
Sis. மேரி மெற்றில்டா.

திங்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 06.00 மணிக்கு திருப்பலி.

புதன்கிழமை மாலை 05.30 மணிக்கு நவநாள் திருப்பலி.

சனிக்கிழமை சிறார் திருப்பலி.

வழித்தடம் : திங்கள்சந்தை- குளச்சல் வழித்தட சாலையில், கல்லுக்கூட்டம் சந்திப்பில் உள்ள சி. எஸ்.ஐ ஆலயத்திலிருந்து வலப்புற சாலையில் சுமார் அரை கி.மீ சென்றால் இவ்வாலயம் அமைந்துள்ளது.

தற்போது கல்லுக்கூட்டம் தூய பாத்திமா அன்னை இறைசமூகமானது பங்குத்தந்தை அருட்பணி ஜோக்கின்ஸ் அவர்களின் சீரிய வழிகாட்டுதலில் சிறப்புடன் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.