823 புனித அந்தோனியார் ஆலயம், அழகப்பபுரம்

            

புனித அந்தோனியார் ஆலயம்

இடம்: அழகப்பபுரம்

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: வடக்கன்குளம்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்& சிற்றாலயம்:

1. அன்னை வேளாங்கண்ணி ஆலயம், பொட்டல்குளம்

2. புனித சூசையப்பர் ஆலயம், வளன்நகர்

3. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், இந்திராநகர்

4. புனித சவேரியார் சிற்றாலயம், சவேரியார் நகர்

பங்குத்தந்தை அருட்பணி. க. செல்வ ராயர்

உதவிப் பங்குத்தந்தை அருட்பணி. வில்லியம் 

குடும்பங்கள்: 1946 (கிளைப்பங்குகள் சேர்த்து 2180)

அன்பியங்கள்: 41

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 05:00 மணி காலை 07:00 மணி, மாலை 04:45 மணி

திங்கள், புதன், வெள்ளி, சனி திருப்பலி காலை 05:00 மணி மற்றும் காலை 06:30 மணி

செவ்வாய், வியாழன் காலை 05:00 மணி திருப்பலி மாலை 06:30 மணி நவநாள் திருப்பலி

சனிக்கிழமை மாலை 06:30 மணி நற்கருணை ஆசீர்

தினமும் மாலை 06:30 மணி ஜெபமாலை, பிரார்த்தனை

திருவிழாக்கள்: ஜூன் மாதம் 04 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை புனித அந்தோனியார் திருவிழா

ஜனவரி மாதம் 24 ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 02 ஆம் தேதி வரை புனித காணிக்கை மாதா திருவிழா

வேளாங்கண்ணி மாதா கெபி திருவிழா: ஆகஸ்ட் முதல் சனிக்கிழமை நிறைவு பெறும் வகையில் பத்து நாட்கள்

குழந்தை தெரசாள் திருவிழா செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 01 ஆம் தேதி வரை.

அழகப்பபுரம் மண்ணின் இறையழைத்தல்கள்:

அருட்பணியாளர்கள்:

1. Rev. Fr. அந்தோனி

2. Rev. Fr. குரூஸ் மரியான்

3. Rev. Bro. கபிரியேல்

4. Rev. Fr. அந்தோனி சேவியர்

5. Rev. Fr. லூர்து மணி

6. Rev. Bro. திரவியம்

7. Rev. Fr. T. M. அம்புரோஸ்

8. Rev. Fr. பங்கிராஸ்

9. Rev. Fr. குரூஸ் அந்தோனி

10. Rev. Fr. மரியதாஸ்

11. Rev. Fr. பங்கிராஸ் M. ராஜா

12. Rev. Fr. ஜேம்ஸ், SJ

13. Rev. Fr. ஜோசப் சேவியர், SJ

14. Rev. Fr. ஜெகதீஸ்

15. Rev. Fr. ஜோசப் ஃபபியான்

16. Rev. Fr. T. நார்பர்ட்

17. Rev. Fr. ரெக்ஸ் லூமின்

18. Rev. Fr. விங்ளிங் ரவி

19. Rev. Fr. ஜோசப் இசிதோர்

20. Rev. Fr. ஜான் பிரிட்டோ

21. Rev. Fr. ஆரோக்கிய ராஜா

22. Rev. Fr. ரமேஷ், SMA

23. Rev. Fr. ரியோசில் பெப்பி

24. Rev. Fr. பாஸ்டிங் சஜி

25. Rev. Fr. ராஜன்

26. Rev. Fr. கால்டன்

27. Rev. Fr. சோபர்ஸ் மைக்கேல்

28. Bro. ஹரிலியோன்

29. Bro. அந்தோனி ஜாவிஸ் செல்வன்

30. Rev. Fr. Y. ஜோசப் கலைச்செல்வன்

31. Rev. Fr. Y. ஜோசப் பாஸ்கர்

32. Rev. Fr. தேவசகாயம்

33. Rev. Fr. D.பிரிட்டோ பங்கிராஸ், OSP 

மண்ணின் அருட்சகோதரிகள்:

1. Rev. Sr. ஞானம்மாள் 

2. Rev. Sr. எபிபானியா மேரி

3. Rev. Sr. டோமினிக் சாவியோ

4. Rev. Sr. அகஸ்டின்

5. Rev. Sr. விக்டோரியா

6. Rev. Sr. மரியம்மாள்

7. Rev. Sr. எவுலாலி

8. Rev. Sr. செசிலி கீவன்

9. Rev. Sr. ஞானாமிர்தம்

10. Rev. Sr. பிரடெரிக் பௌலீன்

11. Rev. Sr. ஈடித் ஜோ மேரி

12. Rev. Sr. சங்கீத ராணி

13. Rev. Sr. கெவின் மேரி

14. Rev. Sr. சுவீதின் மேரி

15. Rev. Sr. செசிலி

16. Rev. Sr. Mary Theresine of Child Jesus

17. Rev. Sr. லாரன்ஸ் மேரி

18. Rev. Sr. ராணி

19. Rev. Sr. லோயோலா

20. Rev. Sr. கிவேரியுஸ்

21. Rev. Sr. சுஜிதா சுடர்விழி

22. Rev. Sr. மிக்கேல் அம்மாள்

23. Rev. Sr. விமலா பொன்சியஸ்

24. Rev. Sr. தாமஸ் அக்வினாஸ்

25. Rev. Sr. ரோஸ்லெட்

26. Rev. Sr. லீமாரோஸ் மேரி

27. Rev. Sr. ஜார்ஜ் மிக்கேல்

28. Rev. Sr. ஆசீர்வாத மேரி

29. Rev. Sr. எலஸ்பான்

30. Rev. Sr. ஜெஸிந்தா மேரி

31. Rev. Sr. ஜெயா

32. Rev. Sr. விமலா

33. Rev. Sr. யேசு தங்கம்

34. Rev. Sr. மேரி

35. Rev. Sr. புஷ்ப ஜெயா

36. Rev. Sr. மேரி புஷ்ப லீலா

37. Rev. Sr. சின்ன ராணி சிறிய புஷ்பம்

38. Rev. Sr. கிளாறா மஸ்கிரீன்

39. Rev. Sr. லீமாரோஸ்

40. Rev. Sr. லீலா

41. Rev. Sr. கேத்தரின்

42. Rev. Sr. அந்தோனி பாப்பா

43. Rev. Sr. பனிமலர் ரீட்டா

44. Rev. Sr. எலிசபெத் விமலா

45. Rev. Sr. ஜாக்கேல் மேரி

46. Rev. Sr. ஜூலியட்

47. Rev. Sr. சகாய ஜெசி

48. Rev. Sr. மரிய விவி ஆஷா

49. Rev. Sr. சகாய அனுனிபா

50. Rev. Sr. அக்னெஸ் நிஸாந்தா

51. Rev. Sr. ஆசீர்வாத மேரி

52. Rev. Sr. பென்ஸி

53. Rev. Sr. சந்திரகித் ஜோ ஷைனி

54. Rev. Sr. ஹெப்ஸி அந்தோனி மஸ்கிரின்

55. Rev. Sr. மைக்கேல் குரூஸ் 

56. Rev. Sr. பிலோமினி

வரலாறு:

கி.பி. 1675-1700 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் அழகப்பபுரம் செங்குளம் புரவு நிலங்களின் தென்புறம், கோவில்பட்டியைச் சேர்ந்த திரு. மாலையணிந்தான் நாடார் என்பவர் தமது 8 பிள்ளைகளோடு வாழ்ந்து வந்தார்.  

வடக்கன்குளத்தைச் சேர்ந்த புண்ணியவதியான அருளாயி என்ற இல்லறத்துறவியார், திரு. மாலையணிந்தான் அவர்களையும், அவரது 8 பிள்ளைகளையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி, வடக்கன்குளம் பங்குத்தந்தை அருட்பணி. ஜான் பாப்தீஸ்து புத்தாரி, SJ அவர்களின் வழியாக, திருமுழுக்குப் பெற வைத்தார். திரு. மாலையணிந்தான் அவர்கள் சுவாமியடியான் என்னும் திருமுழுக்குப் பெயரை பெற்றுக் கொண்டார். பிள்ளைகளும் தங்களது பெயர்களை கிறிஸ்தவ பெயர்களாக மாற்றிக் கொண்டனர். அவர்கள் பெயர்கள் 1. மூத்தவர் பெயர் தெரியவில்லை. ஆகவே மூத்த நாடார் என்றே செல்லமாக அழைக்கப்பட்டதாக அறியப்படுகிறது. 2. தேவசகாயம், 3. மிக்கேல், 4. மரியான், 5. அருளப்பன், 6. மரியந்தோனி, 7. வியாகுலம், 8. மகள் பெயர் தெரியவில்லை.

அழகப்பபுரம் ஊர், செட்டிகுளத்தின் கிழக்கில் அமைந்துள்ள மூத்த நாடான் கல்லறைத் தோட்டம் இவர்களுடையது. இங்கு காணும் கல்வெட்டு ஒன்று சுவாமியடியான் அவர்களின் மூன்றாவது தலைமுறையினர், 1722 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கிறிஸ்தவராக வாழ்ந்ததாக தெரிவிக்கின்றது. 

1728-1729 காலகட்டத்தில் அழகப்ப முதலியார் என்ற படைத்தளபதி, தனது படையினருடன் இங்கு வந்து; பாம்புகள்,  கள்ளி போன்ற முட்புதர்கள் அடர்ந்த காடுகளை வெட்டி, அழித்தொழித்து பாளையம் அமைத்தனர். இப்படையினர் தங்களது உபயோகத்திற்காகத் தோண்டிய கிணறு (முதலியார் கிணறு), பஞ்சாயத்து அலுவலகக் கட்டிடத்தின் பின்புறமுள்ளது. பின்னர் இந்த ஊர் படைத்தளபதியின் பெயரால் "அழகப்பபுரம்" என்று அழைக்கப்பட்டது.

அழகப்ப முதலியாரும் அவருடைய படையினரும், வேணாட்டு மன்னர் மார்த்தாண்ட வர்மாவிற்கு எதிராக, இராமவர்ம மன்னரின் புதல்வர் பப்புதம்பி, இராமன்தம்பி ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு உதவ அழகப்பபுரத்தில் இருந்து வெளியேறி, மேற்கு நோக்கி கோட்டையைக் கடந்து வேணாடு சென்ற காலத்தில், அழகப்பமுதலியாரின் படைகள் பாளையம் இறங்கியிருந்த நிலப்பகுதியில், திரு. சுவாமியடியானும் அவரது குடும்பத்தினரும் குடியமர்ந்து, விவசாயம் செய்து வந்தனர். இவர்கள் தங்களது நிலத்தில் புனித அந்தோனியார் ஆலயம் ஒன்றை அமைத்தனர். மேலும் வடக்குப் பகுதியில் திரு. கனகப்பர் என்ற குடும்பத்தைச் சேர்ந்த திரு. கனக அருளப்பரின் நிலத்தில் புனித காணிக்கை மாதாவிற்கு ஓலைக்குடில் ஆலயம் ஒன்றை அமைத்தனர். 

1790 ஆம் ஆண்டு மானவீர நாட்டு இறுதி மன்னர் அன்புடையார், எதிரிகளால் விருந்து உணவில் நஞ்சு கலந்து கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டபோது, அவரது மனைவியும் புதல்வர்களான தொம்மையப்பர், எஸ்தாக்கியார் பாதுகாப்பு தேடி அழகப்பபுரம் வந்தனர். 

மானவீரநாட்டு இறுதி மன்னர் அன்புடையாரின் இரட்டைச் சிலுவை தாங்கிய கல்லறை, இரம்மதபுரத்தின் மேற்கில், நட்டாற்றின் கரையில், இன்று சிதைந்த நிலையில் காணப்படுகிறது. 

1790 ஆம் ஆண்டு கணக்கன் குடியிருப்பைச் சேர்ந்த திரு. குரூஸ் மிக்கேல் அவர்களும், அவரது இரண்டு மகன்களும் (மரியந்தோணி, அந்தோணிமுத்து) அழகப்பபுரம் வந்தனர். அவர்கள் மானவீர நாட்டு மன்னன் அன்புடையாரின் நிர்வாகத்தில் நிதித்துறையின் கணக்குகளை கண்காணித்து வந்தவர்கள். இவர்கள் தான் அழகப்பபுரத்தில் உள்ள கணக்கப்பிள்ளை குடும்பத்தினர்.

மானவீரநாட்டு மன்னர் அன்புடையாரும், அவரது கணக்கரும் தோமையர் காலத்து பாரம்பரிய கிறிஸ்தவர்கள் ஆவர்.

தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் பக்கமுள்ள வடுகன்பட்டியில் இருந்து திரு. சுப்பிரமணியம் குடும்பமும், பால்குளத்திலிருந்து அன்னமுத்தார் குடும்பமும், மாடன்பிள்ளைதருமத்தில் இருந்து உபாத்தியார் குடும்பமும், உசரவிளையில் இருந்து காளையார் குடும்பமும் அழகப்பபுரம் வந்தார்கள். தொடர்ந்து பல ஊர்களில் இருந்தும் ஏராளமான குடும்பங்கள் அழகப்பபுரம் வந்தனர். 

1910 ஆம் ஆண்டு பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் அழகப்பபுரம் வந்தது. இது அழகப்பபுரத்தை செழிப்பாக மாற்றியது.

அழகப்பபுரம் புனித அந்தோனியார் ஆலய வரலாறு:

திரு. சுவாமியடியானின் மூத்த மகன், மூத்த நாடான் என செல்லமாக அழைக்கப்பட்டவர். தனக்கு வாரிசு இல்லாதபடியால் தனது நிலத்தை ஆலயம் கட்ட தானமாகக் கொடுக்க, இன்றைய ஆலயம் இருக்கும் இடத்தில் சிலுவை வடிவில் புனித அந்தோனியார் ஆலயத்தை எழுப்பினர். 

ஆரம்பத்தில் அழகப்பபுரத்தில் புனித காணிக்கை மாதா ஆலயமும், பக்தியும் இருந்துள்ளதன் காரணமாகவே, இம்முன்னோர் மரபுப்படி இன்றளவும் புனித அந்தோனியார் திருவிழாவில், பத்தாம் நாள் தேரில் புனித காணிக்கை மாதா சுரூபம் வைக்கப்பட்டு வருகிறது. 

02.02.1957 அன்று அழகப்பபுரத்தில் புனித காணிக்கை மாதா திருவிழா முதன் முதலாக வடக்கன்குளம் பங்குத்தந்தை அருட்பணி. மார்ட்டின் அவர்களின் முயற்சியால் கொண்டாடப்பட்டது. அது இன்றுவரை தொடர்கிறது.

அக்காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குப் பகுதி கொல்லம் மறைமாவட்டத்துடனும், கிழக்குப் பகுதி திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்துடனும் சேர்க்கப்பட்டது. 1730 முதல் 1830 ஆம் ஆண்டு வரை அழகப்பபுரம் ஆலயமானது அணைக்கரை பங்கோடும், 1830 முதல் 1910 ஆம் ஆண்டு வரை வடக்கன்குளம் பங்கோடும், 1910 முதல் 1921 ஆம் ஆண்டு வரை கூட்டப்புளி பங்கோடும் இருந்தது. அழகப்பபுரம் இறைமக்கள், அணைக்கரை புனித பிரகாசியம்மாள் ஆலயத்துடன் இன்றுவரை மிகுந்த தொடர்பு கொண்டுள்ளனர். அந்நாட்களில் அழகப்பபுரம் பங்கு மக்கள் மாட்டு வண்டி கட்டியும், கால்நடையாகவும் அணைக்கரை திருவிழாவிற்கு சென்றார்கள்.

இப்போது ஆலயம் அமைந்துள்ள இடத்தில் பங்கு மக்கள் தங்களது முயற்சியால் ஆலயம் கட்டத் தொடங்கிய போது, தேவையான கட்டுமானப் பொருட்கள் கிடைக்காததால் வேலை தடைபட்டது. ஆகவே அப்போதைய வடக்கன்குளம் பங்குத்தந்தை அருட்பணி. சூசை கிரகோரிநாதர் 18.07.1860 அன்று திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானிடம் ஊருக்கு தென்புறமுள்ள பொத்தையில் (பாறைக்கூட்டம்) இருந்து கல் கொண்டுவர அனுமதி கேட்டு மனு செய்தார். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. தமது முயற்சியை கைவிடாத அருள்தந்தையவர்கள் மறுபடியும் 29.12.1860 அன்று அகஸ்தீஸ்வரம் தாசில்தாருக்கு, தெற்கு பொத்தையில் இருந்து தலைச்சுமையாக கல் எடுத்து வர அனுமதிக்க மனுசெய்து, அனுமதியும் பெற்றார். 

இவ்வாறாக பெரிய ஆலயத்தையும் (பழைய ஆலயம்), பங்குத்தந்தை இல்லத்தையும் 1861 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஊர் மக்கள் தங்களது சொந்த முயற்சியால், உழைப்பால் அரும்பாடுபட்டு இரண்டு தடவையாக கட்டி முடித்தனர்.

1865 ஆம் ஆண்டு கொடிமரம் அமைக்க அனுமதி பெறப்பட்டு, கொடிமரத்துக்கு தேவையான பெரிய தேக்கு மரம் வாங்கப்பட்டு, அதனை பழையாற்றில் மிதக்க விட்டு, வழுக்கன்பாறை பகுதியில் கரையேற்றி, அங்கிருந்து உருளைகள் மூலம் உருட்டி கொண்டு வந்து கொடிமரத்தை நிலை நிறுத்தினர்.

05.04.1887 ல் ஆலயமணி வாங்கப்பட்டு, ஒலிக்கப்பட்டது.

1905 ஆம் ஆண்டு முதன் முதலாக மே மாதத்தில் மாதா வணக்க மாதத்தை வடக்கன்குளம் பங்குத்தந்தை அருட்பணி. கௌசானல், SJ அவர்கள் தொடங்கி வைத்தார். அன்றிலிருந்து இன்றுவரை இது தொடர்கிறது.

1908 ஆம் ஆண்டு அருட்பணி. கௌசானல், SJ அவர்கள் ஆலயத்தில் திவ்யநற்கருணையை ஸ்தாபகம் செய்தார்.‌

1914 ஆம் ஆண்டு அருட்பணி. சூசையப்பர் பணிக்காலத்தில் பங்கு மக்கள் ஆலயம் கட்ட ஆரம்பித்தனர். முதல் உலகப்போர் காரணமாக கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பின்னர் பங்கு மக்களின் முயற்சியால் ஆலயம் சிறப்பாக கட்டப் பட்டது. 

தனிப்பங்கு:

1921 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கூட்டப்புளி பங்கில் இருந்து பிரிந்து,  அழகப்பபுரம் தனிப் பங்காக ஆனது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. ஸ்தனிஸ்லாஸ் ராஜா அவர்கள் பொறுப்பேற்று வழிநடத்தினார். இரஜகிருஷ்ணாபுரமும், திருமூலநகரும் அழகப்பபுரத்தின் கிளைப் பங்குகள் ஆயின.

1923 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, தூத்துக்குடி மறைமாவட்டம் உதயமான போது, அழகப்பபுரம் பங்கு தூத்துக்குடி மறைமாவட்டத்துடன் இணைக்கப் பட்டது.

இணைப் பாதுகாவலி புனித குழந்தை தெரசம்மாள்:

அழகப்பபுரம் ஊர் இயற்கையாகவே உவர்ப்பும், சதுப்பு நிலத்தன்மையும் கொண்டது. மழைக்காலங்களில், குறிப்பாக கார்த்திகை மாதத்தில் வாந்தி, பேதி என்ற கொடிய தொற்றுநோய் பலரை பலி கொண்ட காலம். 'சாக வேண்டுமென்றால் அழகப்பபுரம் போ', 'பிள்ளை வேண்டாமென்றால் அழகப்பபுரத்துக்கு கொடு' என்பது போன்ற வழக்கு சொற்கள் சுற்றுப்புறங்களில் வழங்கலாயின.

அழகப்பபுரத்தின் மூன்றாவது பங்குத்தந்தை அருட்பணி. தர்மநாதர் அவர்கள் இதற்கு ஒரே வழி, இறைவனின் இரக்கமும் அருளும் தான். ஆகவே புனித குழந்தை இயேசுவின் தெரசம்மாளுக்கு ஒரு கெபி அமைக்கத் தொடங்கினார். இதற்காக பிடியரிசி திட்டம் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நாளும் சமைப்பதற்காக எடுக்கும் அரிசியில் ஒருபிடி அரிசியை புனித குழந்தை தெரசம்மாள் கெபி கட்ட தனியாக எடுத்து வைத்து, அதனை சனிக்கிழமை தோறும் ஆலயத்தில் கொண்டு வந்து கொடுத்து, நிதி திரட்டப்பட்டது. அருட்பணி. T. S. தைரியநாதர் (1931-1934) பணிக்காலத்திலும் கெபி கட்டுமானப் பணிகள் தொடர்ந்தன.

அருட்பணி. S. மரியதாஸ் பணிக்காலத்தில் புனித குழந்தை தெரசம்மாள் கெபி கட்டி முடிக்கப்பட்டு, 03.10.1935 அன்று வடக்கன்குளம் முதன்மை குரு அருட்பணி. இஞ்ஞாசியார் அவர்களால் மந்திரிக்கப்பட்டது. அன்றிலிருந்து இந்த தொற்று நோய் நிரந்தரமாக விடைபெற்றது.

பங்கின் வளர்ச்சிப்படிகள்:

அருட்பணி. ஜோசப் பர்னாந்து அவர்களின் முயற்சியால் 11.08.1941 அன்று தபால் நிலையம் திறக்கப்பட்டது.

அருட்பணி. A. சூசை மிக்கேல் பணிக்காலத்தில் அழகப்பபுரத்தில், திருச்சி புனித அன்னாள் சபையின் இல்லமானது 04.06.1944 அன்று 'புனித செசிலியம்மாள் மடம்' என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு, அருட்சகோதரிகள் இல்லம் 22.06.1944 அன்று மேதகு ஆயர் திபூர்சியஸ் ரோச், SJ அவர்களால் மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது.   

அருட்பணி. அலோசியஸ் M. நவமணி அவர்களின் பணிக்காலத்தில், அழகப்பபுரம் ஆன்மீகம், கல்வி, சமூகம், சுகாதாரம் என்று எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் பெற்றது. ஆகவே இவரது பணிக்காலம் அழகப்பபுரத்தின் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது.

21.06.1952 அன்று அருட்பணி. அலோசியஸ் M. நவமணி அவர்களின் ஆதரவுடன், சகோதரி ஸ்கொலாஸ்டிக்கா அவர்களால் 'இயேசுவின் சிறிய சகோதரிகள்' என்ற பெயரில் ஒரு புதிய சபை அழகப்பபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அது இன்று "இயேசுவின் திருஇருதய சகோதரிகள்" என்ற பெயரில் வேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.

 அழகப்பபுரத்திற்கு புனித குழந்தை இயேசுவின் தெரசாள் அருளிக்கம், அருட்பணி. அலோசியஸ் M. நவமணி அவர்களின் முயற்சியால், தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு ரோச் ஆண்டகையின் வழியாக பெறப்பட்டது. தெரசம்மாள் திருவிழாவின் போது, அது மக்களுக்கு முத்தி செய்ய கொடுக்கப்படுகிறது.

08.02.1952 அன்று அழகப்பபுரம் வந்த இந்தியப் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்களுக்கு, சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. 

24.12.1954 அன்று இவ்வூருக்கு முதல் முறையாக மின்சாரம் வந்தது. ஆலயம், புனித தெரசம்மாள் கெபி, பங்கு இல்லம் ஆகியவற்றிற்கு மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டது.

அருட்பணி. ஸ்தனிஸ்லாஸ் பாண்டியன் பணிக்காலத்தில் 04.06.1967 அன்று புதிய கொடிமரம் அமைக்கப்பட்டது. மேலும் 28.02.1972 அன்று ஆலயத்தை விரிவாக்கம் செய்ய பங்குத்தந்தை அடிக்கல் நாட்டினார்.  

அருட்பணி. சிலுவை அந்தோனி அவர்கள் ஆலய விரிவாக்க கட்டடப்பணியை, அஸ்திவாரம் முதல் கூரை வரை புதிதாகவே கட்டிவிட திட்டமிட்டு செயல்பட்டு, பணிகளைத் தொடர்ந்தார். அருட்பணி. மரிய ஞானம் அவர்களின் பணிக்காலத்தில் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 01.05.1979 அன்று மேதகு ஆயர் அம்புரோஸ் அவர்களால் திருநிலைப்படுத்தப் பட்டது.

பம்பாய் -அழகை நல்வாழ்வு சங்கத்தின் வெள்ளிவிழா நினைவாக ஆலய வளாகத்தில் கலையரங்கம் கட்டப்பட்டு, பேரருட்பணி. பீற்றர் பர்னாந்து அவர்களால் 01.10.1995 திறந்து வைக்கப்பட்டது.

அருட்பணி. செல்வ ஜார்ஜ் பணிக்காலத்தில் புனித தோமையர் ஹால், தந்தை செல்வ ஜார்ஜ் கலையரங்கம், புனித அந்தோனியார் தொடக்கப்பள்ளி புதிய கட்டிடம் என பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அருட்பணி. ஜெரால்டு குரூஸ் பணிக்காலத்தில், பங்குப்பேரவையின் முயற்சியால் 110 அடி உயரத்தில் அழகிய மணிக்கோபுரம் கட்டப்பட்டு, புதிய மணியும் அமைக்கப்பட்டு, 04.06.2003 அன்று திறந்து வைக்கப்பட்டது.

 அருட்பணி. ததேயுஸ் ராஜன் பணிக்காலத்தில், 2004 ஆம் ஆண்டு ஆலய வெள்ளிவிழா (1979-2004) சிறப்பாக கொண்டாடப் பட்டது. பங்கு மண்டபம் கட்டப்பட்டு 01.05.2008 அன்று திறந்து வைக்கப்பட்டது.

அருட்பணி. பீற்றர் பால் பணிக்காலத்தில் ஊரில் உள்ள எல்லா கெபிகளும், குருசடிகளும் பங்குப் பேரவையின் கீழ் கொண்டு வரப்பட்டது.

 அருட்பணி. மைக்கிள் ஜெகதீசு பணிக்காலத்தில் கிளைப் பங்கான திருமூலநகர் தனிப் பங்கானது. நற்கருணை சிற்றாலயம் கட்டப்பட்டது. ஆலயத்தில் அலங்கார உட்கூரை அமைக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு புதிய தேர் செய்யப்பட்டது.

அருட்பணி. நெல்சன் பால்ராஜ் பணிக்காலத்தில் பல்வேறு நலத் திட்டங்கள் தொடங்கப்பட்டன.

காலரா என்ற கொடிய தொற்று நோயிலிருந்து அழகப்பபுரத்தைக் காக்க 1935 ஆம் ஆண்டு கட்டப்பட்ட, புனித குழந்தை இயேசுவின் தெரசம்மாள் கெபி முற்றிலுமாக நீக்கப்பட்டு, பங்குத்தந்தை அருட்பணி. க. செல்வராயர் அவர்களின் வழிகாட்டலில், பங்கின் நூற்றாண்டு விழா நினைவாக (1921-2021) புதிதாக அழகிய புனித குழந்தை இயேசுவின் தெரசாள் கெபி கட்டப்பட்டு, 05.08.2021 அன்று மேதகு ஆயர் ஸ்டீபன் அந்தோனி அவர்களால் மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது. மற்றும் சாலையோரத்தில் பயணிகளின் பாதுகாவலி வேளாங்கண்ணி மாதா கெபி கட்டப்பட்டு, 24.07.2021 அன்று பங்குத்தந்தை அருட்பணி. க. செல்வராயர் அவர்களாலேயே மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது.

அழகப்பபுரம் தனிப்பங்கானதன் நூற்றாண்டு விழா, பங்குத்தந்தை அருட்பணி. க. செல்வராயர் அவர்களின் வழிகாட்டலில், தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோனி அவர்கள் தலைமையில், 26.12.2021 அன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழா நினைவாக, "நூற்றாண்டுவிழா மலர்" மற்றும் "அழகையின் அழகே" ஒலிநாடாவும் வெளியிடப்பட்டது.

இவ்வாறாக 1921 முதல் 2022 வரை, அழகப்பபுரம் பங்கில் பணியாற்றிய 30 அருட்பணியாளர்களின் ஆன்மீக, சமூக, பொருளாதார வழிகாட்டலில்; இன்று தூத்துக்குடி மறைமாவட்டத்தில் உள்ள சிறந்த பங்குகளில் ஒன்றாக அழகை விளங்குகிறது. இவர்கள் செய்த பணிகள் ஏராளம் ஏராளம் அவற்றை எழுதினால் பல பக்கங்களுக்கு எழுதிக் கொண்டே செல்லலாம்......

பங்கில் உள்ள கெபிகள்:

1. புனித தெரசம்மாள் கெபி

2. வேளாங்கண்ணி மாதா கெபி

3. லூர்து மாதா கெபி

4. புனித தெரசம்மாள் கெபி

5. புனித தோமையர் கெபி

6. குழந்தை இயேசு கெபி

7. புனித செபஸ்தியார் கெபி

8. புனித மிக்கேல் அதிதூதர் கெபி

9. பாத்திமா மாதா கெபி

10. புனித ஞானப்பிரகாசியார் கெபி

11. பாலூர் மாதா கெபி

பங்கில் உள்ள கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை:

1. புனித அந்தோனியார் தொடக்கப்பள்ளி

2. புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளி

3. புனித வளனார் பெண்கள் உயர்நிலைப் பள்ளி

4. ஓசானாம் மருத்துவமனை

துறவற இல்லங்கள்:

1. வேலூர், திரு இருதய அருட்சகோதரிகள்

2. திருச்சி, புனித அன்னாள் சபை அருட்சகோதரிகள்  

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. சிறுமலர் சபை

2. சிறிய புஷ்பத்தின் சகோதரர்கள்

3. கார்மல் அன்னை ஜெபக்குழு

4. அமல அன்னை சபை

5. மரியாயின் சேனை

6. நற்கருணை வீராங்கனையர் சபை

7. பாலர் சபை

8. புனித சூசையப்பர் சபை

9. புனித மரிய கொரட்டி சபை

10. புனித தொன்போஸ்கோ சபை

11. தூய திருக்குடும்ப சபை

12. புனித வியாகுல மாதா சபை

13. புனித வின்சென்ட் தே பவுல் சபை

14. ஞாயிறு மறைக்கல்வி

15. பங்கு மேய்ப்புப் பணிக்குழு

16. அன்பிய ஒருங்கிணையம்

17. ஆலயப் பணியாளர்கள்

18. பாடகற்குழு

19. பீடச்சிறார்

20. திருவழிபாட்டுக் குழு

பங்கின் இதழ்: அழகைச் சாரல்.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி. ஸ்தனிஸ்லாஸ் ராஜா (1921-1925)

2. அருட்பணி. G. மைக்கிள் (1925-1926)

3. அருட்பணி. தர்மநாதர் (1926-1930)

4. அருட்பணி. T. S. தைரியநாதர் (1931-1934)

5. அருட்பணி. S. மரியதாஸ் (1934-1936)

6. அருட்பணி. ரொசாரியோ கொரேரா (1936-1938)

7. அருட்பணி. திருக்குடும்பதாசன் தல்மெய்தா (1938-1939)

8. அருட்பணி. J. V.  பூபால்ராயர் (1939-1940)

9. அருட்பணி. ஜோசப் பர்னாந்து (1940-1943)

10. அருட்பணி. A. மிக்கேல் (1943-1945)

11. அருட்பணி. J. பெரிய நாயகம் (1945-1947)

12. அருட்பணி. அலோசியஸ் M. நவமணி (1947-1954)

13. அருட்பணி. P. மரிய மாணிக்கம் (1954-1958)

14. அருட்பணி. ஜெரேமியாஸ் அரசரத்தினம் (1957-1960)

15. அருட்பணி. D. ஞானப்பிரகாசம் (1961-1962)

16. அருட்பணி. ஸ்தனிஸ்லாஸ் பாண்டியன் (1962-1972)

17. அருட்பணி. ஆ. சிலுவை அந்தோனி (1972-1974)

18. அருட்பணி. ஜான் சேவியர் பர்னாந்து (1974-1976)

19. அருட்பணி. A. மரிய ஞானம் (1976-1979)

20. அருட்பணி. பால் ராபின்ஸ்டன் (1979-1982)

21. அருட்பணி. ஜூலியன் (1982-1986)

22. அருட்பணி. M. ஜெபநாதன் (1986-1991)

23. அருட்பணி. அந்தோனி ராபர்ட் (1991-1996)

24. அருட்பணி. செல்வ ஜார்ஜ் (1996-2001)

25. அருட்பணி.‌ ஜெரால்டு குரூஸ் (2001-2003)

26. அருட்பணி. ததேயூஸ் ராஜன் (2003-2008)

27. அருட்பணி.‌ பீற்றர் பால் (2008-2013)

28. அருட்பணி.‌ மைக்கிள ஜெகதீசு (2013-2018)

29. அருட்பணி.‌ P. நெல்சன் பால்ராஜ் (2018-2020)

30. அருட்பணி.‌ க. செல்வ ராயர் (2020.....)

புனித அந்தோனியார் வழியாகவும், இணைப் பாதுகாவலி புனித குழந்தை இயேசுவின் தெரசாள் வழியாகவும் எண்ணற்ற ஆசீர்வாதங்களை பெற்று,  அருட்பணியாளர்களாகவும், அருட்சகோதரிகளாகவும், மருத்துவர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், ஆசிரியர்களாகவும், எழுத்தாளர்களாகவும், கணிப்பொறியாளர்களாகவும் மேலும் பல்வேறு துறைகளின் வல்லுநர்களாகவும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் அழகப்பபுரம் இறைமக்கள் சிறந்து விளங்குகின்றனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த அழகப்பபுரம் ஆலயத்திற்கு வாருங்கள்... இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்...

வழித்தடம்: நாகர்கோவில் -மயிலாடி -அஞ்சுகிராமம் சாலையில் அழகப்பபுரம் அமைந்துள்ளது. 

தூத்துக்குடி -திருநெல்வேலி -காவல்கிணறு -அஞ்சுகிராமம்

தூத்துக்குடி -திருச்செந்தூர் -கூடங்குளம் -அஞ்சுகிராமம் -அழகப்பபுரம்

Location map: St.Antony's Church https://maps.google.com/?cid=7794746592822170630&entry=gps

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் பங்குத்தந்தை அருட்பணி. க. செல்வராயர் அவர்கள்.

ஆலய வரலாறு: ஆலய நூற்றாண்டு விழா மலர்