குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம்
இடம் : சந்தனபுரம்
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித சிலுவை அருளப்பர் ஆலயம், #சிலுவைபுரம்
பங்குத்தந்தை : அருட்தந்தை விக்டர் குரூஸ்
குடும்பங்கள் : 125
அன்பியங்கள் : 6
ஞாயிறு திருப்பலி : காலை 06.15 மணிக்கு
திருவிழா : மே மாதத்தில் ஐந்து நாட்கள்.
வரலாறு :
சந்தனபுரம் குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம் 1978 -ஆம் ஆண்டு அருட்பணி ராபர்ட் அவர்களால் திட்டமிடப்பட்டு, அருட்பணி பெனடிக்ட் அலெக்சாண்டர் அடிகளாரின் முயற்சியால் 1979 -ஆம் ஆண்டு சந்தனபுரம்- சானல்கரை ஓரத்தில் ஆலயம் நிறுவப்பட்டு, சிலுவைபுரம் பங்கின் கிளையாக செயல்பட்டது.
இவ்வாலயமானது அமைந்திருந்த இடம் வசதி குறைவான இடமாதலாலும், சானல்கரை ஓரமாக இருந்ததாலும் ஆலயம் இடிக்கப்பட்டு, சுமார் 200 அடிகள் தள்ளி புதிய ஆலயம் கட்டப்பட்டு 1990 - ஆம் ஆண்டு ஆயர் லியோன் அ தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. 1991 -ஆம் ஆண்டு சிலுவைபுரம் பங்கிலிருந்து சூழால் தனிப்பங்கானது. பின்னர் சந்தனபுரம் ஆலயம் சூழாலின் கிளைப்பங்காக இணைக்கப்பட்டது.
ஆண்டுகள் பல கடந்தன. பல பங்குத்தந்தையர்களின் வழிநடத்துதலில் பல்வேறு விதங்களில் மாற்றங்களும் வளர்ச்சியும் அடைந்து வந்தது. சூழால் பங்கிலிருந்து பிரிந்து இருதயபுரம் 2002- ல் தனிப்பங்காகி, சந்தனபுரம் ஆலயம் இதன் கிளைப்பங்காக இணைக்கப்பட்டது.
அன்பியங்களின் எண்ணிக்கை 3 லிருந்து 6 ஆக உயர்த்தப்பட்டது.
2006- ஆம் ஆண்டு அருட்பணி சுஜன்குமார் அவர்களின் வழிநடத்துதலில் நற்கருணை பேழையும், பீடமும் ஆலயத்தின் முன்புறமுள்ள கலையரங்கமும் புதிதாக நடந்தேறியது.
2009 -ஆம் ஆண்டு சந்தனபுரம் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் நிலம் வாங்கப்பட்டு, அதில் மரியன்னை குருசடி கட்டப்பட்டு மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
2010 -ஆம் ஆண்டு வெளிநாட்டு உதவி மற்றும் பங்கு மக்களின் உதவி ஒத்துழைப்போடும் நிலம் வாங்கி சமூக நலக்கூடம் கட்டப்பட்டது.
2012 -ஆம் ஆண்டு அருட்பணி பால் ரிச்சர்ட் ஜோசப் அவர்களின் வழிநடத்துதலாலும், மக்களின் ஒத்துழைப்புடன் ஆலயம் விரிவாக்கப்பட்டு மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
2015 -ஆம் ஆண்டு ஆலயத்தின் வெள்ளிவிழா ஆண்டின் நினைவாக கொடிமரம் வைக்கப்பட்டு அருட்பணி சதீஷ்குமார் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
தற்போது பங்குத்தந்தை அருட்தந்தை விக்டர் குரூஸ் அவர்களின் வழிகாட்டுதலில் சந்தனபுரம் இறைசமூகம் வளர்ச்சிப் பாதையில் சிறப்பாக முன்னேறி செல்கிறது.
வழித்தடம் :
கொல்லங்கோடு - நித்திரவிளை சாலையில் மஞ்சத்தோப்பு சந்திப்பில் இருந்து பாலவிளை திருப்பில் சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தில் சந்தனபுரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.