இடம் : அம்பாங்காலை (திருவட்டாரிலிருந்து சுமார் 5 கிமீ தொலைவில்)
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.
நிலை: கிளைப்பங்கு
பங்கு : தூய கார்மல் அன்னை ஆலயம், கொல்வேல்.
குடும்பங்கள் : 120
அன்பியங்கள்: 5
ஞாயிறு திருப்பலி : காலை 10.30 மணிக்கு.
பங்குத்தந்தை : அருட்பணி. ஒய்ஸ்லின் சேவியர்.
திருவிழா : மே மாதத்தில்.
வரலாறு :
கி.பி 1970 ல் புத்தன்கடை பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி. பெல்லார்மின் பணிக்காலத்தில் அம்பாங்காலையில் ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது.
1973 ஆம் ஆண்டு கொல்வேல் தூய கார்மல் அன்னை ஆலயம் தனிப்பங்கான போது அதன் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.
10.10.2003 அன்று புதிய ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது.