571 புனித அந்தோனியார் ஆலயம், கொடைக்கானல்

        
 

புனித அந்தோனியார் ஆலயம் 

இடம் : கொடைக்கானல்

மாவட்டம் : திண்டுக்கல் 

மறைமாவட்டம் : மதுரை உயர் மறைமாவட்டம் 

மறைவட்டம் : கொடைக்கானல்

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : திருஇருதய ஆண்டவர் ஆலயம், மூஞ்சிக்கல், கொடைக்கானல். 

பங்குத்தந்தை : அருள்பணி. எட்வின் சகாயராஜா (வட்டார முதல்வர்) 

உதவிப் பங்குத்தந்தை : அருள்பணி. டேவிட் சுகுமார்

குடும்பங்கள் : 260

அன்பியங்கள் : 10

செவ்வாய் மாலை 06.00 மணிக்கு புனித அந்தோனியார்  நவநாள் திருப்பலி. 

மாதத்தின் முதல் செவ்வாய் மாலை 06.00 மணிக்கு நவநாள் திருப்பலி மற்றும் சிறப்பு நற்கருணை ஆசீர். 

நாள்தோறும் மாலை 06.30 மணிக்கு  நவநாள் ஜெபம் நடைபெறும். 

திருவிழா : பெப்ரவரி மாதத்தில் நடைபெறும். 

ஜூன் 13 -ஆம் தேதி சிறப்பு திருப்பலி நடைபெறும். 

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. அருள்பணி. வின்சென்ட், 

2. அருள்பணி. ஜான் ரிச்சர்ட் 

3. அருள்சகோதரி. ஆரோக்கிய மேரி, (லேட்) 

4. அருள்சகோதரி. மரியம்மாள்

5. அருள்சகோதரி. ஜெயமேரி.

வழித்தடம் :

கொடைக்கானல் நகரின் மையப்பகுதியில், பேருந்து நிலையத்திற்கு பின்புறம் இவ்வாலயம் அமைந்துள்ளது.

Location map : St. Antony's Church Woodville Rd, Kodaikanal, Tamil Nadu 624101 https://goo.gl/maps/uZf2QmafHw1V2gZZ6

வரலாறு :

மலைகளின் இளவரசி கொடைக்கானல் மலையில் அமைந்துள்ள கோடி அற்புதர் புனித பதுவை அந்தோனியார் ஆலய வரலாற்றைக் காண்போம். 

1921 ஆம் ஆண்டு லூர்து மாதாவின் திருப்படம் வைத்து, லூர்து மாதா குருசடி உருவாக்கப்பட்டது. இந்த குருசடியில் காலை மாலை வேளைகளில் மக்கள் ஜெபம் செய்தும், ஊர் கூடி பஞ்சாயத்து வைக்கும் இடமாகவும் பயன்படுத்தி வந்தனர். 

திரு. மரியநாயகம் குடும்பத்தினர்  ஆலயம் அமைக்க கொடுத்த நிலத்தில் லூர்து மாதா ஆலயம் 01.05.1921 அன்று எழுப்பப்பட்டது. ஆலயத்தில் லூர்து மாதா சுரூபம் நிறுவ அப்போதைய பங்குத்தந்தையிடம் ஏற்பாடு செய்தனர். அந்தகாலட்டத்தில் கொடைக்கானல் முழுவதும் ஒரே பங்குத்தளமாக இருந்தது. அந்த வேளையில் அட்டுவம்பட்டியில் புனித அந்தோனியார் பெயரில் குருசடி ஒன்று கட்டப்பட்டது. அவர்களும் பங்குத்தந்தையிடம் புனித அந்தோனியார் சுரூபம் கேட்டுள்ளனர். 

அன்றைய காலகட்டத்தில் இப்போது உள்ளது போன்று சுரூபங்கள் வாங்க இயலாத நிலை இருந்ததால், இரண்டு இடத்திற்கும் சுரூபங்கள் ஒரே இடத்தில் ஆர்டர் செய்யப்பட்டு வரவழைக்கப்பட்டது. 

பெட்டிகளில் வந்த சுரூபங்களில் ஒன்றை இங்கேயும், மற்றொன்றை அட்டுவம்பட்டிக்கும் பங்குத்தந்தை கொடுத்துள்ளார். பெட்டிகள் ஒரேமாதிரியாக இருந்ததால் புனித அந்தோனியார் சுரூபம் இங்கேயும், புனித லூர்து மாதா சுரூபம் அட்டுவம்பட்டிக்கும் மாறிச் சென்றது. நீண்ட விவாதங்களுக்குப் பிறகு ஊர் பெரியவர்களின் ஆலோசனையின்படி, கைகளில் குழந்தை இயேசு இல்லாத புனித அந்தோனியார் சுரூபம் இவ்வாலயத்தில் வைக்கப்பட்டு புனிதப் படுத்தப் பட்டது. 

1921 ஆம் ஆண்டிற்கு முன்பு பிலிஸ்வில்லா கிழக்கு மற்றும் மேற்கு என்று திசையை வைத்து பிரித்திருந்தனர். புனித அந்தோனியார் ஆலயம் புகழ்பெறத் தொடங்கிய பின்னர் அந்தோனியார் தெரு எனப் பெயர் வந்தது. 

1978 ஆம் ஆண்டு அருள்பணி. S. R. இக்னேஷியஸ், அவர்களால் தற்போது உள்ள ஆலயமானது ஆஸ்பெஸ்டாஸ் கூரையுடன் கட்டப்பட்டது. 

அதன்பிறகு 1997 ஆம் ஆண்டு அருள்பணி. ஆனந்தம் அவர்கள், ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையை அகற்றி கான்கிரீட் கூரையாக அமைத்தார். 

ஆலயத்தினுள் மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபடுவதால் அதிகமாக புகை படிந்து காணப்படுவதை கருத்தில் கொண்டு, 2013 ஆம் ஆண்டு ஆலயத்தை ஒட்டி சிறிய அளவில் கட்டுமானம் செய்து, அதில் புனிதரின் சுரூபம் வைக்கப்பட்டது. 

அழகிய மணிக்கூண்டு இளைஞர்கள் மற்றும் மக்களின் முயற்சியால் கட்டப்பட்டு, 2016 ஆம் ஆண்டில் பங்குத்தந்தை அருள்பணி. ஏரோணிமூஸ் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. 

இளம் பெண்கள் இணைந்து ஆலயத்திற்கு தரைத்தளம் அமைத்து கொடுத்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டு ஆலயத்திற்கு அழகிய  வெண்கல கொடிமரம் வைக்கப்பட்டது.

தனிச்சிறப்புகள்:

புனித அந்தோனியாரின் புகழை அவரது மகிமை நாட்களான 13 தினங்களுக்களான 13 தேவார மன்றாட்டுகள் அக்கால இலத்தீன் முறையிலான ராகத்தில் பாடப்பட்டு வருவது இவ்வாலயத்தின் முக்கிய நிகழ்வாகும். 

கடந்த நூறு வருடங்களாக தவக்காலத்தில் இயேசுவின் பாடுகளை சித்தரிக்கும் வகையிலான அம்மானை எனப்படும் ஓடக்கூறு பாடல், (இயேசுவின் முதன்மை சீடரான இராயப்பன் புலம்பல்) இன்றளவும் பழைமை பொருந்திய இலத்தீன் ராகத்தில், தேன்தமிழ் மொழியில், இயேசுவின் பாடுபட்ட சுரூபத்தை வைத்து அனைவரும் இணைந்து பாடி காணிக்கை பெறப்படுகிறது. இவ்வாறு கிடைக்கும் காணிக்கைகளை ஆண்டவரின் உயிர்ப்பு நாளன்று முதியோர் இல்லம், சிறுவர் இல்லம், ஊனமுற்றோர் இல்லங்களுக்கு கொடுத்து உதவுவது சிறப்புக்குரியதும், பாராட்டுக்குரியதுமாகும். 

பெப்ரவரி மாதக் கடைசியில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்ள தமிழகத்தின் பிற பகுதியிலும் இருந்தும் ஏராளமான இறை மக்கள் வந்து சிறப்பு செய்கின்றனர். 

புனிதரின் பரிந்துரையால் எண்ணிலடங்கா அற்புதங்கள் நடந்து வருகின்றன. ஆகவே ஆலயத்தில் சாதி சமய பேதமின்றி மக்கள் வந்து ஜெபித்து, தங்கள் வேண்டுதல்களை புனிதரின் வழியாக பெற்று வருகின்றனர்.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருள்பணி. சேராக் (1921-1923)

2. அருள்பணி. வின்சென்ட் விக்னன் (1924-1931)

3. அருள்பணி. ஜான் அமாத் தூஸ் (1933-1935)

4. அருள்பணி. ஜோசப் ஆகன் (1936-1939)

5. அருள்பணி. முன்ச் ஸ்டீபன் (1939-1942)

6. அருள்பணி. தாமஸ் (1942-1944)

7. அருள்பணி. சந்தியாகு ஜோசப் (1944-1945)

8. அருள்பணி. ஜோசப் ஆகன் (1945-1946)

9. அருள்பணி. போன்ஹரே (1947-1948)

10. அருள்பணி. செம்பரி (1949)

11. அருள்பணி. நார்மன் ஷெட்டி (1950-1956)

12. அருள்பணி. ஹெல்சன் (1957-1962)

13. அருள்பணி. கிளேட்டன் (1963)

14. அருள்பணி. அலெக்சிஸ் பெர்னாண்டோ (1964-1965)

15. அருள்பணி. குழந்தைராஜ் (1965-1972)

16. அருள்பணி. அமல்ராஜ் (1973-1976)

(1976 ஜுலை வரை இயேசு சபையினரின் கீழ் செயல்பட்டு வந்த பங்கு, அதன்பிறகு மதுரை உயர் மறைமாவட்டத்தின் கீழ் செயல்படத் தொடங்கியது)

1. அருள்பணி. S. R. இக்னேஷியஸ் (1976-1981)

2. அருள்பணி. அருள்ஜோசப் (1981-1983)

3. அருள்பணி. வேதமாணிக்கம் (1983-1985)

4. அருள்பணி. சூசை மிக்கேல்ராஜ் (1985-1989)

5. அருள்பணி. அருள் (1989-1992)

6. அருள்பணி. ஜேம்ஸ் பால்ராஜ் (1992-1994)

7. அருள்பணி. அம்புரோஸ் (1994-1995)

8. அருள்பணி. ஆனந்தம் (1995-1999)

9. அருள்பணி. சேவியர்ராஜ் (1999-2005)

10. அருள்பணி. சார்லஸ் ஹெஸ்டன் (2005-2007)

11. அருள்பணி. அப்போலின் கிளாரட் ராஜ் (2007-2012)

12. அருள்பணி. பால் இக்னேஷியஸ் (2012-2014)

13. பேரருள்பணி. ஜோசப் செல்வராஜ் (பொறுப்பு) (2014-2015)

14. அருள்பணி. ஜெரோம் எரோணிமூஸ் (2015-2018)

15. அருள்பணி. எட்வின் சகாயராஜா (2018 முதல் தற்போது வரை..)

தகவல்கள் : பங்குத்தந்தையின் வழிகாட்டுதலில் ஆலய உறுப்பினர்.