இடம் : சிங்கம்பாறை
மாவட்டம் : திருநெல்வேலி
மறைமாவட்டம் : பாளையங்கோட்டை
மறைவட்டம் : அம்பாசமுத்திரம்
நிலை : பங்குத்தளம் (திருத்தலம்)
கிளைப்பங்குகள்:
1. புனித லூர்து அன்னை ஆலயம், இலந்தைகுளம்
2. புனித பேதுரு பவுல் ஆலயம், மைலப்புரம்
3. புனித யோசேப்பு ஆலயம், முக்கூடல்
4. புனித அந்தோணியார் ஆலயம், செபஸ்தியார்புரம்
5. கிறிஸ்து அரசர் ஆலயம், பாப்பாகுடி
SUBSTATIONS WITHOUT CHURCHES
1. வெட்டுவான்குளம்
2. கரடிகுளம்
3. வீரனார்குளம்
4. களியன்குளம்
5. கபாலிபாறை
6. சிவலார்குளம்
7. சடையபுரம்
8. கல்லூர்
9. குறுவன்கோட்டை
பங்குத்தந்தை : அருள்பணி. ம. செல்வராஜ்
குடும்பங்கள்: 1100
அன்பியங்கள்: 30
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி: காலை 06:00 மணி காலை 08:00 மணி
திங்கள், செவ்வாய், புதன் திருப்பலி: காலை 6:00 மணி
வியாழன் மாலை 07:00 மணி புனித பவுல் நவநாள் திருப்பலி, குணமளிக்கும் வழிபாடு, நற்கருணை ஆசீர்
வெள்ளி திருப்பலி மாலை 07.00 மணி
சனிக்கிழமை மாலை 07.00 மணி சகாயமாதா நவநாள் திருப்பலி, நவநாள் ஜெபமும் நடைபெறும்
ஒவ்வொரு மாதமும் 25-ம் தேதி புனித சின்னப்பர் நவநாள் திருப்பலி நடைபெறும். தொடர்ந்து திருத்தலத்தை சுற்றி புனித சின்னப்பர் சுரூப பவனி செபமாலை செபத்துடன் நடைபெறும். இறுதியில் நற்கருணை ஆசீரும் நடைபெறும்.
தமிழ் மாதம் முதல் செவ்வாய் மாலை 07:00 மணி புனித அந்தோணியார் கெபியில் திருப்பலி
முதல் வெள்ளி காலை 06:00 மணி திருப்பலி நற்கருணை ஆசீர்
முதல் சனி மாலை 07:00 மணி புனித ஆரோக்கிய மாதா கெபியில் திருப்பலி
கடைசி வெள்ளி மாலை 07:00 மணி புனித மிக்கேல் அதிதூதர் கெபியில் திருப்பலி
கடைசி சனி மாலை 06:30 மணி தூய சகாய மாதா கெபியில் திருப்பலி
திருவிழா : ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் 25-ம் தேதி வரையிலான பத்து நாட்கள்
சிங்கம்பாறை மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருள்பணி. புதுமை (late)
2. அருள்பணி. ஜோசப் ஜான்சன்
3. அருள்பணி. ஜேம்ஸ் சேகர்
4. அருள்பணி. புதுமை
5. அருள்பணி. அருள் ஜோதி அலெக்ஸ்
6. அருள்பணி. சகாய பவுல்
7. அருள்பணி. மைக்கேல் சவரிராஜ்
8. அருள்பணி. சார்லஸ்
9. அருள்பணி. டேனியல்
10. அருள்பணி. அந்தோணி பிரதீப்
11. அருள்பணி. மிக்கேல் மகேஷ்
12. அருள்பணி. சகாய சின்னப்பன்
13. அருள்பணி. அந்தோணி செல்வம்
14. அருள்பணி. சுதர்சன்
15. அருள்பணி. லியோ ஜெரால்டு
16. அருள்பணி. வளன் ஆண்டனி
17. அருள்பணி. ஆரோக்கிய ராஜ்
18. அருள்பணி. சார்லஸ்
19. அருள்சகோதரர். ஞானப்பிரகாசம்
20. அருள்சகோதரர். பீட்டர்
மண்ணின் அருள்சகோதரிகள்:
1. Sr. கஸ்பார்
2. Sr. அன்னம்மாள்
3. Sr. ராஜரீகம்
4. Sr. பொனிபாஸ்
5. Sr. மேரி
6. Sr. ஞானமணி
7. Sr. புஷ்பம்
8. Sr. அமலோற்பவம்
9. Sr. ராணி
10. Sr. ஜெனிட்டா
11. Sr. சேவியர்
12. Sr. மார்த்தாள்
13. Sr. பேபி
14. Sr. விமலா
15. Sr. புஷ்பா
16. Sr. மெல்ரிட்
17. Sr. ஷைனி
18. Sr. ஜென்சி
19. Sr. கௌசல்யா
20. Sr. அமலோற்பவம்
21. Sr. ஜோஸப்பா
சிங்கம்பாறை வழித்தடங்கள்: திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் 31 கி.மீ, திருநெல்வேலி ஜங்சன் 25கி.மீ
வீரவநல்லூர் 9கி.மீ
மதுரை 180கி.மீ
அருகில் உள்ள இரயில் நிலையம்: வீரவநல்லூர்
அருகில் உள்ள விமான நிலையங்கள்: மதுரை 180கி.மீ, திருவனந்தபுரம் 148கி.மீ தூத்துக்குடி 63கி.மீ
பேருந்துகள்: திருநெல்வேலி -பாபநாசம் -அம்பாசமுத்திரம் -கடையம் -செங்கோட்டை - முக்கூடல் வழி. 34D, 34G உடையாம்புளி& மனுஜோதி ஆஸ்ரமம்
Location map: https://g.co/kgs/XoaBEp
திருத்தல வரலாறு:
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மறைமாவட்டத்தை சார்ந்த சிங்கம்பாறை தூய சின்னப்பர் திருத்தலத்தின் தொன்மைவாய்ந்த வரலாற்றைப் பார்ப்போம்.
புனித பிரான்சிஸ் சவேரியாரின் மறைப்பணியால் பிறப்புத்தொட்டே கிறிஸ்தவர்களாக இருந்த மூதாதையர் சோமாபுரி (சோமநாதபேரி) என்று சொல்லப்படும் கிராமத்திலிருந்து ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் வெளியேறி, பனை ஏறும் தொழில் செய்வதற்காக தாமிரபரணி ஆற்றின் வடகரையில் வளமும் நலமும் பெற்ற முக்கூடல் அருகே உள்ள மயிலப்புரம் என்னும் சிறிய கிராமத்தில் குடியேறி வசிக்கலாயினர். அப்பகுதியில் வாழ்ந்த பிராமணர்கள் தங்கள் விவசாய வேலைகளுக்கும், இவர்களை பயன்படுத்திக் கொண்டார்கள். அவ்வாறு வாழ்ந்து வந்த கத்தோலிக்க மக்களிடையே சிந்தனை மற்றும் எண்ணங்களில் ஏற்பட்ட ஒரு சில விரிசல்களால், முன்னோர்கள் மைலப்புர கிராமத்திலிருந்து வெளியேறி அதன் வடபகுதிக்கு இடம் பெயர்ந்தனர். அந்த வேளையில் மறைப்பரப்பு பணிக்காக வெளிநாட்டிலிருந்து வந்த அருட்தந்தை. பால்நாதர் அவர்களின் உதவியுடன், மைலப்புரத்தின் வடபகுதியில், பேட்டையில் இருந்த முஸ்லிம் மதத்தை சார்ந்த நிலக்கிழார் ஒருவருக்கு சொந்தமான இடம் ஒன்றை 1845-ம் ஆண்டில் வாங்கி அங்கே குடியிருந்தனர்.
பின் வசதியான குடியிருப்பு கிடைக்கப்பட்டவுடன் தங்களுக்கென்று ஒரு சிற்றாலயம் அமைத்தனர். ஆலயத்தில் வைத்து வழிபட சொரூபம் தேவைப்பட்டது. அதே நேரம் மயிலப்புரத்தில் இருந்த தூய இராயப்பர் கோவிலையும் இவர்கள் வணங்கியும் வந்தனர். இராயப்பர் மீது பற்றும், பாசமும் கொண்ட சிங்கம்பாறை மக்கள் எப்படி சுரூபத்தை எடுத்துச் செல்வது என்று யோசித்தனர். நேரடியாக கேட்டால் கிடைக்காது ஆகவே என்ன செய்வது என்று யோசனை செய்தனர். ஆகவே இராயப்பரை இரவோடு இரவாக தமது ஊருக்கு கொண்டு வர திட்டமிட்டனர். ஆனால் கடவுளின் திட்டமோ வேறுவிதமாக இருந்தது.
முடிவில் அமாவாசையன்று நள்ளிரவு ஊரே தூங்கும் வேளையில், மயிலப்புரம் கோவிலில் நுழைந்து அங்கிருந்த ஒரு சுரூபத்தை எடுத்து துணியில் கட்டிக்கொண்டு பயந்தபடியே அவசரம் அவசரமாக சிங்கம்பாறையை நோக்கி வந்தனர்.
பின் அந்த துணியை விலக்கிப்பார்த்தால் அங்கே ராயப்பர் கையில் நீளமான சாவி இருந்தது! அடேங்கப்பா...! இராயப்பர் கையில் நீளமான சாவி என்று வெளிச்சத்தை உண்டு பண்ணி பார்க்கும் போது இது சாவியில்லையே….! அப்படியென்றால் இவர் கையில் இருப்பது வாள்….! என்று அய்யோ மோசம் போய்விட்டோமே..! என அவர்கள் அதிர்ந்து போனார்கள். காரணம் அவர்கள் தூக்கிவந்தது இராயப்பர் இல்லை, சின்னப்பர் சுரூபம். பின்னர் அதையே வைத்து வழிபட ஆரம்பித்து விட்டனர். இவ்வாறு 1845 -ம் ஆண்டுக்கு பிறகு சிங்கம்பாறை ஆலயம் உருவானது.
1894 -ம் ஆண்டு கால கட்டத்தில் புனித சின்னப்பரின் சிற்றாலயம் விரிவுபடுத்தப்பட்டு ஓலைக்கூரை மாற்றப்பட்டு, ஓட்டுக்கூரையாக மாற்றம் பெற்றது.
சிங்கம்பாறை புதிய ஆலயம்:
கி.பி.1901-ம் ஆண்டு வரை சேந்தமரம் பங்கின் கிளைப்பங்காக இருந்து வந்தது. பின்னர் சிங்கம்பாறையானது வீரவநல்லூர் பங்குடன் இணைந்த கிளைப்பங்காக செயல்பட்டது. இப்போது இருக்கும் புனித சின்னப்பரின் திருத்தலத்திற்கான அடித்தளமானது அருட்தந்தை. கபிரியேல் அவர்களால் கி.பி 1901-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் 1929 -ல் அருட்தந்தை குத்தூரியர் காலத்தில் நிறைவடைந்தது. இவ்வூரில் கோயில் கட்ட பலரும் உழைத்தனர். தண்ணீருக்கு பதிலாக பதநீர் கொண்டே கட்டிடம் கட்டப்பட்டது. அருட்திரு. குத்தூரியர் அடிகளார் ஏற்பாட்டாலும், மக்கள் உழைப்பாலும் ஆலயம், குருவானவர் இல்லம் மற்றும் கன்னியர் இல்லம் கட்டப்பட்டது. இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் 6 மாதம் உடலை மூலதனமாக வைத்து பனையேறும் தொழிலை செய்து வரும் இவ்வூர் மக்கள் மற்ற 6 மாதம் கோவில் பணியை ஊதியம் இல்லாமல் செய்ததுதான். இதில் கோவில் வேலையென்றால் போட்டி போட்டுக்கொண்டு செய்வார்கள்.
கி.பி. 1931 ஆம் ஆண்டு சிங்கம்பாறையானது தனிப்பங்காக உருவெடுத்தது. அருட்தந்தை குத்தூரியர் அடிகளார் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று செயல்பட்டார்கள். இவர் காலத்தில் தான் கல்விக்கான விதை இம்மண்ணில் ஊன்றப்பட்டது. அவர் மாணவ, மாணவிகளின் கல்விக்காக முதல் பள்ளியை துவக்கி அவரே முதல் ஆசிரியரானார். தொடக்கப்பள்ளியாக ஆரம்பித்த விதை இன்று மேல்நிலைப்பள்ளியாக ஆலமரம் போல உயர்ந்து நிற்கிறது.
கி.பி. 1938 ஆம் ஆண்டு மதுரையிலிருந்து அமலவை கன்னியர்கள் பணியாற்ற வந்தனர்.
வளர்ச்சியடையாத சிறு குழந்தையாக இருந்த சிங்கம்பாறை பங்கை பல்வேறு வழிகளில் சிறந்ததாய் மாற்றிய பெருமை அருட்தந்தை குத்தூரியர் அவர்களையே சாரும். அருட்தந்தை டி. குரியன் சே.ச, அருட்தந்தை அந்தோணிசாமி மற்றும் அருட்தந்தை டயஸ் அடிகளார் ஆகியோர் உதவி பங்குத்தந்தையர்களாக அருட்தந்தை குத்தூரியர் சே.ச அவர்களுடன் பணியாற்றி பங்கை மேம்படுத்தினர்.
தனிப்பங்காக ஆனதன் 50 -வது ஆண்டு நினைவாக 1981-ம் ஆண்டு பங்குத்தந்தை அருள்பணி. S. L. அருளப்பன் அவர்களால், ஊரின் மேற்குப் பகுதிக்கு பொன்விழா நகர் என பெயர் சூட்டப்பட்டது.
1982 -ஆம் ஆண்டு ஆலயம் புதுப்பிக்கப் பட்டது.
1845 -ஆம் ஆண்டு சிறிய ஓலைக் குடிசையாக கருவான ஆலயம் 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் திருத்தலமாக உயர்த்தப் பட்டது. அப்போது பங்குத்தந்தையாக பணியாற்றிக் கொண்டிருந்த அருள்பணி. அலாய்சியஸ் துரைராஜ் (2007-2012) அவர்களால் புனித சின்னப்பர் திருத்தல ஜூபிலி ஆண்டை முன்னிட்டு குத்தூரியர் அரங்கம் விரிவாக்கம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. மேலும் திருத்தல கொடிமரம் அருகே புனித சின்னப்பர் அதிசய கெபியும் கட்டப்பட்டது.
அருள்பணி. செயபாலன் பணிக்காலத்தில் (2012-2016) திருத்தல பழைய பீடம் மாற்றப்பட்டு, புதிய பீடம் அழகுற அமைக்கப்பட்டது. புனித சின்னப்பர் பள்ளிக்கூடத்திற்கு புதிய கட்டிடமும் கட்டப்பட்டது.
கொடிமரத்தின் புதுமை:
கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக புனித சின்னப்பரின் அருள்கொடையால் திருத்தல வளாகத்தில் உள்ள கொடிமரத்தில், அற்புத நீரூற்று சுரந்து வருகிறது. அண்டி வரும் யாவரும் நோயிலிருந்து விடுதலை, குழந்தை வரம், கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை, திருமணம் நிறைவேறல், குடும்ப சமாதானம் என பல்வேறு நலன்களை பெற்றுச் செல்கின்றனர்.
திருத்தலத் திருவிழா சிறப்பு நிகழ்வுகள்:
1. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16-ம் தேதி காலை 08:00 மணிக்கு திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகும். அன்று கலந்து கொள்ளும் அனைவருக்கும் மதியம் அசனவிருந்து வழங்கப்படும்.
2. திருவிழா நடைபெறும் 10 நாட்களும் மாலை 07:00 மணிக்கு நவநாள் திருப்பலியும் நற்கருணை ஆசீரும் தொடர்ந்து இரவு உணவும் வழங்கப்படும்.
3. ஜனவரி 23-ம் தேதி 8-ம் திருவிழாவன்று காலை 07:00 மணிக்கு முதல் திருவிருந்து விழாத் திருப்பலி நடைபெறும். இதில் குறைந்தது 40 முதல் 50 குழந்தைகள் முதல் திருவிருந்து பெறுவது வழக்கம். அன்று மாலை 06:00 மணிக்கு ஊருக்கு வெளியே பொது இடத்தில் வைத்து திருப்பலி நடைபெறும். திருப்பலி நிறைவடைந்தவுடன் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக முதல் திருவிருந்து பெற்ற குழந்தைகள் மற்றும் இறைமக்களுடன் திவ்யநற்கருணை பவனியானது நடைபெறும். பவனி திருத்தலம் வந்தடைந்தவுடன் மறையுரையும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறும்.
4. ஜனவரி 24-ம் தேதி மாலை 07:00 மணிக்கு தேரடி திருப்பலி திருத்தல வளாகத்தில் வைத்து நடைபெறும். திருப்பலியைத் தொடர்ந்து புனிதரின் திருத்தேர் மந்திரிக்கப்பட்டு பவனியாக இரவு முழுவதும் ஊரின் அனைத்து வீதிகளில் உலாவந்து அதிகாலை திருத்தலம் வந்தடையும்.
5. ஜனவரி 25-ம் தேதி பத்தாம் திருவிழா. காலை 08:00 மணிக்கு திருவிழா நன்றி கூட்டுத்திருப்பலியும், காலை 10:00 மணிக்கு சிறப்பு திருமுழுக்கு திருப்பலியும் நடைபெறும்.
6. காலை 11:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட மூன்று திருத்தேர்களும் ஆலயமணி ஒலிக்க புறப்பட்டு அனைத்து வீதிகள் வழியாக சென்று இறைமக்களுக்கு ஆசீர் வழங்கி இரவு 08:00 மணியளவில் ஆலயமணி ஒலிக்க, வண்ணமிகு வாணவேடிக்கை முழங்க, மேளதாளங்கள் இசைக்க 3 தேர்களும் திருத்தலம் வந்தடையும்.
7. தேர் திருத்தலம் வந்தடைந்தவுடன் அனைத்து இறைமக்களும் புடைசூழ கொடியிறக்க நிகழ்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து நற்கருணை ஆசீர் நடைபெறும்.
8. 10-ம் திருவிழாவின் போது புனித சின்னப்பர் விளையாட்டுக் கழகம் மற்றும் சிங்கம்பாறை இளையோர் நல இயக்கத்தினர் மாநில அளவிலான கபடி போட்டியை (மின்னொளியில்) சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
சுமார் ஐம்பதாயிரம் பேர் வரை இத்திருவிழா நிகழ்வில் பங்கேற்று இறையாசீர் பெற்றுச் செல்கின்றனர். 10-ம் திருவிழா நிகழ்வுகள் https://www.facebook.com/singamparai.lions/
என்கிற Facebook page வழியாகவும் www.singamparai.com என்கிற இணையத்தளம் வழியாகவும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
மேலும் திருவிழாக் காலங்களில் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான இறைமக்கள் வந்து இறையாசீர் பெற்றுச் செல்கின்றனர்.
அமலவை அருட்சகோதரிகள் இல்லம்:
1938 ஆம் ஆண்டு முதல் சிங்கம்பாறையில் துவக்கப்பட்ட அமலவை அருட்சகோதரிகளுடைய பணிகள் இன்றியமையாதது.. கல்விப்பணி, ஆன்மீகப்பணி, நோயாளிகளுக்கு நற்கருணை வழங்குதல், மறைக்கல்விப்பணி, மணப்பெண்களுக்கு திருமண தயாரிப்பு, ஆலய தூய்மை, திருப்பலி பீட அலங்காரம், இல்லங்களை சந்தித்தல், முதல் திருவிருந்து பெறுகிற குழந்தைகளை தயாரித்தல், உறுதி பூசுதல் தயாரிப்பு என பல்வேறு பணிகளை சிறப்புற செய்து வருகின்றனர். 35 இண்டுகளாக சிங்கம்பாறை மண்ணில் பணியாற்றிய அருட்சகோதரி. கிளாரா புஷ்பம் அவர்களின் பணி என்றும் நினைவுகூரத் தக்கது.
திருத்தலத்தில் உள்ள சிற்றாலயம்& கெபிகள்:
1. புனித அந்தோணியார் சிற்றாலயம்
2. புனித அந்தோணியார் கெபி
3. வேளாங்கண்ணி மாதா கெபி
4. சகாய மாதா கெபி
5. புனித மிக்கேல் அதிதூதர் கெபி
இதுவரை திருத்தலம் மூலமாக 3 குறுந்தகடுகள் வெளியிடப்பட்டுள்ளது,
1) ஒப்பற்ற செல்வம்(2009)
2) நற்செய்தியின் தூதுவர் பவுல் (2014)
3) தூய பவுல் திருத்தல வரலாறு (2016)
திருத்தல பங்கேற்பு அமைப்புகள்:
1. மரியாயின் சேனை பெண்கள்,
2. புனித வின்சென்ட் தே பவுல் சபை,
3. மறைக்கல்வி
4. பீடப்பூக்கள்,
5. பாடகற் குழு
6. புனித சூசையப்பர் சபை முதியோர்
7. பாலர் சபை
8. நற்கருணை வீரர் சபை
9. பவுல் வளரிளம் இயக்கம் இளையோர் (ஆண்கள்)
10. அமல அன்னை வளரிளம் இயக்கம் (பெண்கள்)
11. மாதா சபை இளம்பெண்கள்
பங்கில் உள்ள கல்வி நிறுவனங்கள்:
1. St. Paul’s Higher Secondary School, Singamparai
2. R.C. Primary School, Singamparai
3. R.C. Primary School, Mukkudal
4. R.C. Primary School, Mylapuram
5. St. Paul’s Nursery School, Singamparai
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. அருள்பணி. அல்போன்ஸ் குத்தூரியர் (1931-1941)
2. அருள்பணி. R. விசுவாசம் (1941-1947)
3. அருள்பணி. வலண்டின் டயஸ், SJ (1947-1950)
4. அருள்பணி. மணலா, SJ(1950-1957)
5. அருள்பணி. K. S. விசுவாசம் (1957-1959)
6. அருள்பணி. P. S. அந்தோணிசாமி (1959-1960)
7. அருள்பணி. R. S. பீட்டர் (1960-1963)
8. அருள்பணி. A. அருளப்பர் (1963-1972)
9. அருள்பணி. M. பெர்க்மான்ஸ் (1972-1978)
10. அருள்பணி. S. L. அருளப்பன் (1978-1986)
11. அருள்பணி. M. அருள் அம்புரோஸ் (1986-1990)
12. அருள்பணி. I. லூர்துராஜ் (1990-1996)
13. அருள்பணி. S. ஜோக்கிம் (1996-1999)
14. அருள்பணி. S. A. அன்னாசாமி (1999-2001)
15. அருள்பணி. ஜான் பிரிட்டோ, OSM (2001-2004)
16. அருள்பணி. S. J. லாரன்ஸ் (2004-2007)
17. அருள்பணி. அலாய்சியஸ் துரைராஜ் (2007-2012)
18. அருள்பணி. A. செயபாலன் (2012-2016)
19. அருள்பணி. ம. செல்வராஜ் (2016-2021)
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பாளை மறைமாவட்ட இணையத்தளம், பங்கு உறுப்பினர் மற்றும் மண்ணின் அருள்பணியாளர்கள்.