408 புனித ஆரோக்கிய மாதா ஆலயம் KPL நகர்


புனித ஆரோக்கிய மாதா ஆலயம்,

இடம் : KPL நகர்

மாவட்டம் : நாமக்கல்
மறை மாவட்டம் : சேலம்
மறை வட்டம் : திருச்செங்கோடு

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய தமத்திரித்துவ ஆலயம், SPB காலனி.

பங்குத்தந்தை : அருட்பணி. த. ஜான் கென்னடி

குடும்பங்கள் : 50
அன்பியங்கள் : 3

மாதத்தின் முதல் செவ்வாய் மாலை 06.00 மணிக்கு புனித அந்தோணியார் நவநாள், திருப்பலி, நற்கருணை ஆசீர், தொடர்ந்து அன்பின் விருந்து.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று மாலை 06.00 மணிக்கு திருச்செபமாலை, புனித பௌர்ணமி மாதா நவநாள் செபம், திருப்பலி, நற்கருணை ஆசீர், அன்பின் விருந்து.

திருவிழா : செப்டம்பர் மாதம் இரண்டாம் ஞாயிறு.

வழித்தடம் : சேலம் -திருச்செங்கோடு -ஈரோடு செல்லும் வழியில் காடச்சநல்லூர் பேருந்து நிறுத்தத்திற்கும், ஐந்துபனை பேருந்து நிறுத்தத்திற்கும் இடையில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

வரலாறு :

SPB காலனி பங்கின் பங்குத்தந்தை அருட்பணி. ஜெயசீலன் அவர்களின் முயற்சியால் KPL நகர் பகுதியில் 12.02.2012 அன்று புனித ஆரோக்கிய அன்னைக்கு கெபி கட்டப்பட்டு, அருட்பணி. பிரான்சிஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

பின்னர் புதிதாக நிலம் வாங்கப்பட்டு அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி. இக்னேஷியஸ் பிதேலிஸ் அவர்களின் முயற்சியாலும், இறை மக்களின் நன்கொடைகளாலும் சிறு கெபி கட்டப்பட்டு, 10.09.2017 அன்று மேதகு ஆயர் சிங்கராயர் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

இவ்வாலயத்தில் பௌர்ணமி மாதா திருப்பலியின் போதும், புனித அந்தோணியார் திருப்பலியின் போதும், இறைமக்களின் சாட்சிகள் எடுத்துரைக்கப் படுகின்றன. தற்போது SPB காலனி பங்கின் ஒரு கிளைப்பங்காக இவ்வாலயம் செயல்பட்டு வருகிறது.

மேலும் புதிய ஆலயம் கட்டுவதற்கான முயற்சிகளை மக்களின் ஒத்துழைப்புடன் பங்குத்தந்தை அருட்பணி. ஜான் கென்னடி அவர்கள் மேற்கொண்டு வருகிறார்.

விரைவில் புதிய ஆலயம் கட்டப்படவும், இவ்வாலயத்தை நாடி வருகிற மக்களின் எண்ணங்கள் ஈடேறவும் புனித ஆரோக்கிய அன்னையின் வழியாக இறைவனிடம் ஜெபிப்போம்..!

தகவல்கள் : பங்குத்தந்தையின் வழிகாட்டுதலுடன் ஆலய பீடச் சிறுவன்.