இடம் : RC செட்டிப்பட்டி,
காமலாபுரம் அஞ்சல்,
ஓமலூர் தாலுக்கா, 636455.
மாவட்டம் : சேலம்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : மேட்டூர்
நிலை : திருத்தலம்
கிளைப்பங்குகள் :
1. புனித பாத்திமா மாதா ஆலயம், ஓமலூர்
2. புனித வனத்து சின்னப்பர் ஆலயம், புனித வனத்து சின்னப்பர் நகர்
பங்குத்தந்தை : அருட்பணி. A. எட்வர்ட் ராஜன்
குடும்பங்கள் : 515
அன்பியங்கள் : 17
திருப்பலி நேரங்கள் :
ஞாயிறு : காலை 08.30 மணிக்கு திருப்பலி
திங்கள், புதன், வெள்ளி : காலை 06.15 மணிக்கு திருப்பலி
செவ்வாய் : மாலை 06.15 மணிக்கு புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி
வியாழன் : மாலை 06.15 மணிக்கு புனித இராயப்பர் சின்னப்பர் நவநாள் திருப்பலி.
சனி : காலை 06.15 மணிக்கு புனித சகாய மாதா நவநாள் திருப்பலி.
சனி : மாலை 06.00 மணிக்கு திருப்பலி (புனித வனத்து சின்னப்பர் நகர்)
ஞாயிறு : காலை 07.00 மணிக்கு திருப்பலி (ஓமலூர்)
மாதத்தின் முதல் வெள்ளி : மாலை 06.15 மணிக்கு திருப்பலி, நற்கருணை ஆசீர்.
பங்கில் நடைபெறும் திருவிழாக்கள்:
1. பங்கின் பாதுகாவலர்கள் திருவிழா : ஜூன் மாதம் 29ம் தேதி.
2. ஜனவரி மாதம் 15ம் தேதி (தை 1) - புனித வனத்து சின்னப்பர் திருவிழா.
3. டிசம்பர் மாதம் 8 -ம் தேதி- புனித அமலோற்பவ அன்னை திருவிழா.
4. செப்டம்பர் மாதம் 8ம் தேதி- புனித ஆரோக்கிய அன்னை திருவிழா.
5. ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி- புனித விண்ணேற்பு அன்னை திருவிழா.
மண்ணின் மைந்தர்கள் :
1. அருட்பணி. A. சிங்கராயன்
2. அருட்பணி. கிறிஸ்துதாஸ்
மற்றும், 5 அருட்சகோதரிகள்.
வழித்தடம் : ஓமலூரிலிருந்து தருமபுரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை வழியாக 2கி.மீ தொலைவில் R.C.செட்டிப்பட்டி உள்ளது.
Location map : https://g.co/kgs/unM63v
வரலாறு :
பழைமையும் பெருமையும் மிகுந்த ஒளிரும் செட்டிப்பட்டி பங்கு, கி.பி.1868 -ம் ஆண்டு வரை சேசுசபை குருக்களாலும் அதன் பின்னர், புதுவை மறைமாநில வேதபோதக சபை குருக்களாலும் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளது. கி.பி.1890 -ம் ஆண்டு புனித இராயப்பர் சின்னப்பரை பாதுகாவலர்களாக கொண்டு செட்டிப்பட்டி பங்கு உருவானது. 140 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து இப்புனிதர்களுக்கு ஜூன் மாதம் 29 ம் நாள் அன்று விழா எடுத்து கொண்டாடப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியா வந்த அருட்பணி. டென்னிஸ் ஜீஸ்ஸோ அடிகளார் 21.08.1958 -ல் RC செட்டிப்பட்டிக்கு வருகை புரிந்தார். இங்கு தொடர்ந்து 10 ஆண்டுகள் மறைப்பணியாற்றி வந்த அருட்தந்தையவர்கள், 31.03.1968 அன்று இறைவனடி சேர்ந்தார். அவரது உடல் இங்குள்ள ஆலய வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. அவரது கல்லறை இன்றளவும் இப்பங்கில் உள்ளது. இவருடைய காலத்தில்தான் RC செட்டிப்பட்டியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. இப்போதுள்ள பங்கு ஆலயமானது இரண்டாவது முறையாக கட்டி புதுப்பிக்கப்பட்டது. 26.03.1962ல் மேதகு. ஆயர். வெண்மணி. எஸ். செல்வநாதர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
08.12.2001 ல் பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டடு மேதகு ஆயர் செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. பங்கு மக்களின் முயற்சியால் கல்லறைத் தோட்டம் 01.11.2001 அன்று புதுப்பிக்கப் பட்டது.
29.06.2003 அன்று அருள்பணி. கீராஞ்சீரா அவர்களின் முயற்சியினால் ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
2005 -ல் அருட்பணி. D. A. பிரான்சிஸ் அவர்களின் முயற்சியால் மணிமண்டபம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.
RC செட்டிப்பட்டி பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்த நாரணம்பாளையம் 10.06.2007 அன்று தனிப்பங்காக உயர்த்தப் பட்டது.
2008 -ம் ஆண்டு ஜூன் மாதம் புனித பவுல் ஆண்டை முன்னிட்டு இவ்வாலயம் திருத்தலமாக மேதகு ஆயர் செ. சிங்கராயன் அவர்களால் உயர்த்தப்பட்டது. இவ்வாண்டை பங்குத்தந்தை அருள்பணி. இக்னேஷியஸ் பிதேலிஸ் அவர்கள் சிறப்பாக வழிநடத்தினார்.
அருள்பணி. ஆரோக்கியராயர் அவர்களின் பணிக்காலத்தில் கல்லறைத்தோட்டம் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு, கல்லறைத்தோட்டம் முழுவதும் புதுப்பிக்கப்பட்டது. மேலும் கல்லறைத் தோட்டத்தில் வியாகுல மாதா கெபி கட்டப்பட்டது.
பங்குமக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த அருள்பணி. ஆரோக்கியராயர் அவர்கள் இப்பங்கில் பங்குத்தந்தையாக இருக்கும்போது மாரடைப்பு காரணமாக 17.02.2018 அன்று தன்னுடைய 58 -வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
தற்போதைய பங்குத்தந்தை அருள்பணி. A. எட்வர்ட் ராஜன் அவர்களின் முயற்சியால் புதிய கொடிக்கம்பம் மற்றும் புனித நிக்கோலஸ் R.C நடுநிலைப் பள்ளி புதுப்பிக்கப்பட்டு 10.04.2019 அன்று முன்னாள் ஆயர் மேதகு செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.
சிந்தாமணியூர், பஞ்சுகாளிப்பட்டி, சாத்தப்பாடி, கருப்பணம்பட்டி, மல்லிகுந்தம், காவக்காடு, புளியம்பட்டி, பச்சனம்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, தாத்தியம்பட்டி காலனி, காட்டூர், செம்மாண்டப்பட்டி, ஏனாதி, காமலாபுரம், பூசாரிப்பட்டி, பண்ணப்பட்டி, வெள்ளாறு ஆகிய கிளைகிராமங்கள் இப்பங்கின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
மேலும் பங்கின் வளர்ச்சியில் 17 அன்பியங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
புனித குழந்தை தெரசாள் அன்பியம் 25 குடும்பங்கள்,
புனித பெரியநாயகி மாதா அன்பியம் 32 குடும்பங்கள்,
புனித பவுல் அன்பியம் 31 குடும்பங்கள்,
புனித சூசையப்பர் அன்பியம் 25 குடும்பங்கள்,
புனித ஆரோக்கிய மாதா அன்பியம் 26 குடும்பங்கள்,
புனித அந்தோனியார் அன்பியம் 27 குடும்பங்கள்,
புனித வனத்து சின்னப்பர் அன்பியம் 35 குடும்பங்கள்,
புனித சகாய மாதா அன்பியம் 50 குடும்பங்கள்,
புனித பேதுரு அன்பியம் 30 குடும்பங்கள்,
புனித ஜீவமாதா அன்பியம் 30 குடும்பங்கள்,
புனித எளியோர் மாதா அன்பியம் 42 குடும்பங்கள்,
புனித அருளானந்தர் அன்பியம் 22 குடும்பங்கள்,
புனித அல்போன்சாள் அன்பியம் 17 குடும்பங்கள்,
புனித அன்னை தெரசா அன்பியம் 16 குடும்பங்கள்,
புனித தொன்போஸ்கோ அன்பியம் 21 குடும்பங்கள்,
புனித காணிக்கை மாதா அன்பியம் 33 குடும்பங்கள்,
புனித பாத்திமா மாதா அன்பியம் 48 குடும்பங்கள், என இப்பங்கில் 515 குடும்பங்கள், அன்பியங்கள் வாயிலாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மேலும் இப்பங்கில் இறைமக்களில் பெரும்பாலும் வேளாண்மையை முக்கியத் தொழிலாக செய்து வருகின்றனர்.
ஆலயமணியோசை :
பஞ்சலோகங்களால் செய்யப்பட்ட ஆலயமணியின் ஓசையானது, நம் காதுகளில் கேட்கும் போது, நொடிப்பொழுதில் இறைவனை நம் மனங்களில் உணரச் செய்கிறது.
அமல அன்னையின் கருணை, பங்கின் முதல் அற்புதம்:
1892ம் ஆண்டு இப்பகுதிகளில் காலரா நோய் தோன்றி மக்களை அச்சுறுத்தியது. அப்போது மக்கள் அனைவரும் அமல அன்னைக்கு தேர் எடுப்பதாக வேண்டிக் கொண்டனர். அன்னையின் கருணையால் காலரா நோய் இப்பகுதியை விட்டு அகல, அமல அன்னைக்கு ஆண்டுதோறும் டிசம்பர் 8 -ம் தேதி தேர் எடுத்து சிறப்பிக்கப் படுகிறது.
திருத்தல தேரானது 34 அடி உயரமும், 144 ச.அடி பரப்பளவும் கொண்ட பிரமாண்ட அழகிய தேராக விளங்குவது தனிச்சிறப்பு.
பங்கில் உள்ள கல்வி நிறுவனங்கள்:
1. மறைமாவட்ட நிர்வாகம்
புனித நிக்கோலாஸ் ஆர்.சி நடுநிலைப்பள்ளி (RC செட்டிப்பட்டி)
புனித சூசையப்பர் மருத்துவமனை (R.C செட்டிப்பட்டி) இயக்குநர் அருட்பணி. A. அழகுசெல்வம்
புனித சூசையப்பர் CBSE பள்ளி (R.C செட்டிப்பட்டி)
ஜான்பிரிட்டோ மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி (காமலாபுரம்)
பள்ளி முதல்வர் : அருள்பணி. N. அருள்சுந்தர்
பள்ளியில் பணியாற்றும் அருட்பணியாளர் : அருள்பணி. V. ஆல்பர்ட் அந்தோணிராஜ்
L.R.R.C (Leprosy Rural Relief Center)
L.R.R.C இயக்குநர் : அருள்பணி. A. அழகுசெல்வம்.
2. புதுவை மாதா இருதயசபை கன்னியர்கள் இல்லம் (ஓமலூர்) :
பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி (ஓமலூர்)
பாத்திமா மெட்ரிக்குலேசன் பள்ளி (ஓமலூர்)
பாத்திமா மாணவிகள் (பெண்கள்) விடுதி (ஓமலூர்)
இதயாலயா மாணவியர் இல்லம் (ஓமலூர்)
ஜெயஜோதி RC துவக்கப்பள்ளி (ஓமலூர்)
புதுவை மாதா இருதயசபை கன்னியர் இல்லம் : RC செட்டிப்பட்டி
புனித நிக்கோலஸ் சிறுவர் இல்லம் (RC செட்டிப்பட்டி)
பங்கில் உள்ள பக்தசபைகள்:
1. புனித வின்சென்ட் தே பால் சபை
2. மரியாயின் சேனை
3. அன்பிய ஒருங்கிணைப்பு குழு
4. கோல்பிங் இயக்கம்
5. இயேசுவின் கண்மணிகள் இயக்கம்
6. மறைக்கல்வி மன்றம்
7. பாடகற்குழு
8. பீடச்சிறுவர்கள் இயக்கம்
9. பௌர்ணமி செபக்குழு.
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. அருட்பணி. பால்கன் (1868-1883)
2. அருட்பணி. யுபன் இ (1868-1883)
3. அருட்பணி. பிரிக்கோ (1868-1883)
4. அருட்பணி. வெர்டிகோ (1868-1883)
5. அருட்பணி. பயோல்லலாசு (1883-1888)
6. அருட்பணி. தானியேல் (1888-1899)
7. அருட்பணி. அன்வே (1899)
8. அருட்பணி. போனபார்ட் (1899-1903)
9. அருட்பணி. ஞானாதிக்கம் (1903-1918)
10. அருட்பணி. போன்னபோந்து (1919-1930)
11. அருட்பணி. புருன்மரியுஸ் (1930)
12. அருட்பணி. வச்சோன் ஆல்பெர்த் (1930-1936)
13. அருட்பணி. தெபிக்னி (1937)
14. அருட்பணி. ப்ருப் (1938)
15. அருட்பணி. மிக்கேல் (1938-1942)
16. அருட்பணி. புல்லியார்ட் (1938-1942)
17. அருட்பணி. டி.சி.ஜோசப் (1942)
18. அருட்பணி. அலெக்ஸாண்டர் சாவேலி (1942-1949)
19. அருட்பணி. மத்தேயு புலிக்கல் (1949-1958)
20. அருட்பணி. ஜீஸ்ஸே (1958-1968)
21. அருட்பணி. பி.எஸ். சக்கரியாசு (1968-1970)
22. அருட்பணி. S. ஆரோக்கியசாமி (1969-1970)
23. அருட்பணி. பால் தாழதட் (1970-1975)
24. அருட்பணி. சேவியர் ஜோதி (1976)
24. அருட்பணி. சேவியர் ஜோதி (1976)
25. அருட்பணி. M. அல்போன்ஸ் (1977)
26. அருட்பணி. பீட்டர் கரியத்தரா (1977-1983)
27. அருட்பணி. S. ஜான்ஜோசப் (1983-1989)
28. அருட்பணி. டி. ஜெகநாதன் (1989-1992)
29. அருட்பணி. மத்தியாஸ் (1992-1994)
30. அருட்பணி. அந்தோணி மரியஜோசப் (1994-1998)
31. அருட்பணி. S. பிரான்சிஸ் சேவியர் (1998-2002)
32. அருட்பணி. தாமஸ் கீராஞ்சிரா (2002-2004)
33. அருட்பணி. D. A. பிரான்சிஸ் (2004-2008)
34. அருட்பணி. இக்னேஷியஸ் பிதேலிஸ் (2008-2013)
35. அருட்பணி. ஆரோக்கியராயர் (2013-2018)
(அருட்பணி. S. செபாஸ்டியன்- 3 மாதங்கள்)
36. அருட்பணி. A. எட்வர்ட் ராஜன் (2018 முதல் தற்போது வரை...)
தகவல்கள் : பங்குத்தந்தை அருள்பணி. A. எட்வர்ட் ராஜன்.