495 திரு இருதய ஆண்டவர் ஆலயம், ஏற்காடு


திரு இருதய ஆண்டவர் ஆலயம்

இடம் : ஏற்காடு

மாவட்டம் : சேலம்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : சேலம்

நிலை : பங்குத்தளம்

கிளைப்பங்குகள் :
1. புனித அந்தோணியார் ஆலயம், லாங்லிப்பேட்டை
2. புனித சூசையப்பர் ஆலயம், கோவில்மேடு

குருசடிகள்:
1. புனித வனத்து சின்னப்பர் குருசடி, ஒண்டிக்கடை
2. குழந்தை இயேசு குருசடி, முருக நகர்
3. புனித பெரியநாயகி மாதா குருசடி, ஜெரினாக்காடு
4. புனித ஆரோக்கிய மாதா குருசடி, கொம்மக்காடு.

பங்குத்தந்தை : அருட்பணி.D. A. பிரான்சிஸ்

குடும்பங்கள் : 800
அன்பியங்கள் : 25

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு திருப்பலி காலை 06.30 மணி, காலை 08.30 மணி, மாலை 04.30 மணி (ஆங்கிலம்)

திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி, சனி திருப்பலி காலை 06.30 மணிக்கு.

வியாழன் மாலை 06.00 மணிக்கு குழந்தை இயேசு நவநாள், திருப்பலி.

மாதத்தின் முதல் வெள்ளி காலை 06.30 மணிக்கு திருப்பலி. மாலை 06.30 மணிக்கு நற்கருணை ஆராதனை.

ஒப்புரவு அருட்சாதனம்:

தினமும் காலை 06.00 மணி முதல் - 06.30 மணி வரை. சனி மாலை 06.00 மணி முதல் -07.00 மணி வரை. ஞாயிறு காலை 08.00 மணி முதல் -08.30 மணி வரை.

திருவிழா : ஜூன் மாதம் கடைசி ஞாயிறு.

மண்ணின் மைந்தர் :
அருட்சகோதரர். மெசியா.

வழித்தடம் : சேலத்திலிருந்து சுமார் 32கி.மீ தொலைவில் ஏற்காடு திருஇருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது.

Location map : Sacred Heart Church Hill Church Road, Yercaud, Tamil Nadu 636601 04281 222 348

வரலாறு :

கி.பி 1845 ஆம் ஆண்டில் ஏற்காடு கோவில்மேட்டில் கிறிஸ்துவர்களால் புனித சூசையப்பர் ஆலயம் கட்டப்பட்டிருந்தது. அந்த ஆலயத்தை அருட்பணி. கூய்யோன் அடிகளார் விலைக்கு வாங்கி விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டார். மேதகு ஆயர். லவு வெண்ணான் அவர்கள் ஏற்காட்டை பார்வையிட்ட போது 1.12.1880 ல் சிலுவைப்பாதை நிலைகள் புனித சூசையப்பர் ஆலயத்தில் நிறுவப்பட்டது.

கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே அருட்தந்தை. வக்காந்து அடிகளார் லாங்லிப்பேட்டையில் புனித அந்தோணியார் ஆலயத்தைக் கட்டினார். 1910 ஆம் ஆண்டு முதல் 1915 ஆம் ஆண்டு வரை ஏற்காடு, பங்கு என்ற முறையில் இல்லாமல் ஒரு கோடை விடுமுறை இடமாகவே இருந்து வந்தது. மேலும் ஏற்காட்டில் இயங்கி வந்த ஆலயங்களில் போதிய இடவசதி இல்லாமல் இருந்தது.

திருஇருதய ஆண்டவர் ஆலய உதயம்:

ஏற்காடு நகரின் மையப்பகுதியில் ஆலயம் இருந்தால் அனைத்துப் பகுதி கிறிஸ்தவர்களுக்கும் வசதியாக இருக்கும் என்ற உயரிய நோக்கில், 1931 ம் ஆண்டில் ஏற்காடு வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அருட்தந்தை. லிசோன் அடிகள் கருதினார். எனவே ஏற்காட்டில் டாக்டர். ஃபீரிட்மேன் என்ற இத்தாலியருக்கு சொந்தமான இடத்தை அருட்தந்தை. லிசோன் அடிகளார் விலைக்கு வாங்கி ஆலயப் பணிகளைத் துவக்கினார்.

அப்போது இந்த இடம் மலைச்சரிவாக இருந்தது. ஆலயத்தின் கீழ்த்திசையில் இதன் தொடர்ச்சியாக எழிலான மலை இருப்பதை இன்றும் காணலாம். இந்த மலைச்சரிவை சமநிலமாக்க ஆண்டுக்கணக்காய் அருட்தந்தை அவர்கள் அரும்பாடுபட்டார். அவரது அயராத முயற்சியினால் தற்போது ஆலயம் அமைந்துள்ள இடம் சமதளமாக்கப் பட்டது. மலைச்சரிவை அகழ்ந்தெடுக்கும் போது எதிர்பட்ட ராட்சதப்பாறைகளும், சிறுமலைக் குன்றுகளும் வெடிவைத்து தகர்க்கப்பட்டு, அவையனைத்தும் சிறு சிறு கருங்கற்களாக வடிவமைக்கப்பட்டது. தேவையான மண் குவியல்கள் மலைச்சரிவில் இருந்து பள்ளத்தில் நிரப்பப்பட்டு சரி செய்யப்பட்டது. அப்போது ஆலயத்திற்கு நேர் எதிர்ப்புறம் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு, அதன் வழியாக மேலே ஏறி வந்து திருஇருதய ஆண்டவரை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது கொடிக்கம்பம் உள்ள இடத்திற்கு கீழே உள்ள தார்ச்சாலையில் இருந்து மேலே வருவது ஆலயத்தின் முக்கிய நுழைவுப் பாதையாக பயன்படுத்தப் பட்டுள்ளது.

இப்போதுள்ள சூசையப்பர் தொடக்கப்பள்ளி முன்பு சேலம் மறைமாவட்டத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது பணியாற்றிய ஆசிரியர்கள் திரு. தாவீது, திரு. லூயிஸ், திரு. கார்லோஸ், திரு. நல்லப்பன் ஆகியோரை ஆலயப்பணியில் மேற்பார்வையாளர்களாக அருட்தந்தை. லிசோன் அடிகள் பயன்படுத்தி உள்ளார்கள்.

ஆலயம் 1934 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டதும் திருஇருதய ஆண்டவரை பாதுகாவலராகக் கொண்டு தனிப்பங்காக மறைமாவட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை. லிசோன் அடிகளார் அவர்கள் பொறுப்பேற்று 1934-1949 ஆண்டு வரை சிறப்பாக பணியாற்றினார். 1949 முதல் 1967 வரை சேலம் மறைமாவட்டத்தில் உள்ள பல பங்குகளில் சிறப்பாக பணியாற்றிய அருட்தந்தை. லிசோன் அவர்கள் 1968 ஆம் இறைவனடி சேர்ந்தார்.

ஆலயத்தின் சிறப்புகள் :

ஆலய முன்புற கோபுரத்தில் உள்ள சிலுவையின் உயரம் 7 அடி, பக்கவாட்டில் உள்ள இரண்டு இறக்கை கோபுரங்களில் உள்ள சிலுவைகளின் உயரம் 5 அடி ஆகும். ஆலய பலிபீடம் 10 அடி நீளமும், இரண்டரை அடி அகலமும் கொண்டு கோவில்மேட்டில் உள்ள மணியான்கரடு பகுதியில் உள்ள ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்டு ஆலயத்தில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மணிக்கூண்டு :

ஆலயத்தின் பின்புறம் உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மணிக்கூண்டு சிறப்பு வாய்ந்ததாகும். இதில் பிரான்ஸ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட வெண்கலத்தால் ஆன 7 மணிகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை வெளிநாட்டவர்கள் அன்பளிப்பாக கொடுத்தனர். ஏழு மணிகளும் ஏழு ஸ்வரங்களை எழுப்பக் கூடியதாகும். இந்த ஆலய மணிகளின் இசை ஏற்காடு சுற்று வட்டார மக்களை இறைவனில் ஒன்றித்திருக்க செய்கிறது என்பது தனிச்சிறப்பு. இந்த மணிகள் கிறிஸ்துமஸ், ஈஸ்டர் மற்றும் புத்தாண்டு போன்ற முக்கிய திருநாட்களில் திருப்பலியின் துவக்கத்திலும், முடிவிலும் இசைக்கப்படுவது தொன்றுதொட்டு வரும் நடைமுறையாகும்.

பங்கில் உள்ள பக்தசபைகள் :
1. பங்குப்பேரவை
2. வின்சென்ட் தே பவுல் சபை
3. மரியாயின் சேனை
4. பாடகற்குழு
5. இளையோர் இயக்கம்
6. பாலர்சபை
7. பீடச்சிறுவர் அணி.

ஏற்காட்டில் பணிபுரிந்த அருட்தந்தையர்கள்:
1. அருட்தந்தை. கூய்யோன் (1845)
2. அருட்தந்தை. கோடே அடால்ஃப் (1863-1883)
3. அருட்தந்தை. வக்காந்து (1883-1898)
4. அருட்தந்தை. வெல்டர் (1898-1899)
5. அருட்தந்தை. ரெனீவியர் (1899-1900)
6. அருட்தந்தை. தூரயர் (1899-1901)
7. அருட்தந்தை. மரியீர் (1902)
8. அருட்தந்தை. சீக்முல்லர் (1902-1903)
9. அருட்தந்தை. போகூய்யோன் (1904-1906)
10. அருட்தந்தை. பிரிய்யர் (1906-1907)
11. அருட்தந்தை. போஸ்கட் (1907-1908)
12. அருட்தந்தை. பிரிய்யர் (1908-1911)
13. அருட்தந்தை. காம்சன் (1912-1914)
14. அருட்தந்தை. மோரின் (1915-1919)
15. அருட்தந்தை. காம்ப்சன் (1919-1930)
16. அருட்தந்தை. லிசோன் (1931-1949)
17. அருட்தந்தை. வாட்ரின் (1947-1949)
18. அருட்தந்தை. அலெக்சாண்டர் சாவெலி (1949-1962)
19. அருட்தந்தை. பெலிக்ஸ் ரீவெல் (1962-1965)
20. அருட்தந்தை. மேத்யூ புல்லிக்கல் (1965-1967)
21. அருட்தந்தை. பால் அந்தோணி (1967-1974)
22. அருட்தந்தை. A. X. இருதயம் (1974-1977)
23. அருட்தந்தை. M. அல்போன்ஸ் (1977-1981)
24. அருட்தந்தை. D. M. சவரிமுத்து (1981-1988)
25. அருட்தந்தை. தியோடர் செல்வராஜ் (1988-1982)
26. அருட்தந்தை. ஹென்றி ஜார்ஜ் (1982-1994)
27. அருட்தந்தை. ஆரோக்கியசாமி (1994-1996)
28. அருட்தந்தை. ஞானப்பிரகாசம் (1996-1998)
29. அருட்தந்தை. இருதயசெல்வம் (1998-2003)
30. அருட்தந்தை. ஆரோக்கியராயர் (2003-2008)
31. அருட்தந்தை. A. ஜாண் அல்போன்ஸ் (2008-2013)
32. அருட்தந்தை. இஞ்ஞாசிமுத்து (2013-2018)
33. அருட்தந்தை. D. A.. பிரான்சிஸ் (2018 முதல் தற்போது வரை..)

ஏற்காடு பங்கில் உள்ள துறவற சபைகள், இல்லங்கள், கல்விக்கூடங்கள், நிறுவனங்கள் :

1. சலேசிய சபை யினர் தி ரெட்ரிட் மெய்யியல் கல்லூரியை நடத்தி வருகின்றனர்.

2. சலேசிய கன்னியர் சபையினர் மோர்னீஸ் இல்லம் அமைத்து பணியாற்றி வருகின்றனர்.

3. தூய லூயிஸ் மான்ட்போர்ட் சபையினர்:
*லூயிஸ் வில்லா (மாநில தலைவர் இல்லம்)
*மான்ட்போர்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி
*புனித சூசையப்பர் உயர்நிலைப் பள்ளி
*புனித சூசையப்பர் துவக்கப்பள்ளி
*ஈச்சங்காடு ஆயத்த இல்லம்
*அனி ராக் எஸ்டேட்
*கொம்புதூக்கியிலுள்ள மலைவாழ் மக்களுக்கான விடுதிப் பள்ளி ஆகியவற்றை நடத்தி வருகின்றனர்.

4. பாண்டிச்சேரி உயர் மறைமாவட்டமானது :
*சான் ஜோஸ் எஸ்டேட்
*பால் மாடீஸ் எஸ்டேட் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறது.

5. மைசூர் மறைமாவட்டமானது
*காஸ்கேட்ஸ் எஸ்டேட்டை நிர்வகித்து வருகிறது.

6. தெரசாள் கார்மல் சபையினர் குருக்கள் இல்லம் அமைத்துள்ளனர்.

7. கார்மேல் ஆசிரம கன்னியர் இல்லம் உள்ளது.

8. திருச்சிலுவை குருக்கள் சபையினரின் : கன்னியர் இல்லம், தியான இல்லம் ஆகியன உள்ளன.

9. குளூனி சபையினர்
*நவகன்னியர் இல்லம்
ஆயத்த நிலையினர் இல்லம் (வில்லாநோட்ரே டாம்)
*செப இல்லம்
*திருஇருதய ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப் பள்ளி
*நாசரேத் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றை நடத்தி வருகின்றனர்.

10. புனித ஞானப்பிரகாசியார் சபையினர்
*கன்னியர் இல்லம்
*அமல அன்னையின் சலேசியக் கன்னியர் இல்லம்
*பிராவிடன்ஸ் மருத்துவமனை ஆகியவற்றை நடத்தி வருகின்றனர்.

11. மரியாயின் மாசற்ற இருதய சபையினர் கன்னியர் இல்லம் அமைத்து நற்செய்தி அறிவித்து வருகின்றனர்.

12. அருள் இரக்க கன்னியர் சபையினர்
*தியான இல்லம்
*ஆயத்தக் கன்னியர் இல்லம் ஆகியனவற்றை அமைத்துள்ளனர்.

13. மரியாயின் பிரான்சிஸ்கன் ஊழியர் சபையினர் நடத்தும் கன்னியர் இல்லம் உள்ளது

14. தூய சார்லஸ் பொரோமியோ சபையினரின் கன்னியர் இல்லம் உள்ளது.

15. தூய காணிக்கை அன்னை சபையினர் நடத்தி வரும்
*துவக்கப்பள்ளி
*கிரேக்மோர் மருந்தகம் ஆகியன உள்ளன.

16. இயேசுவின் ஏழை சகோதரிகள் சபையிரின் ஆயத்த நிலையினர் இல்லம் உள்ளது.

17. மஞ்சக்குட்டையில்: புனித சூசையப்பர் துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

18. அந்தியூர் -மையப்பட்டி: புனித தெரசாள் துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

19. S.S.G.Y யினரின்
*தையல் பள்ளி
*பாலர் பள்ளி
*முதியோர் இல்லம் ஆகியன உள்ளன.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. D. A. பிரான்சிஸ் அவர்கள்.